என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க ரூ.2,195 கோடியில் புதிய திட்டம்
- அமைச்சர் கே.என்.நேரு தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த 1994-ம் ஆண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி ஜீயபுரம், காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனை சரி செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் சீரமைத்து ரூ.75.06 கோடியில் குடிநீர் அபிவிரு த்தி திட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி திருவப்பூ ரில் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2195 கோடி மதிப்பீட்டில் 23 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க அனைத்து நடவடி க்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியை தவிர தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு குடி தண்ணீர் கொடுப்பதற்கு வடகிழக்கு பருவமழை மிக சிறப்பாக பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- புதுக்கோட்டையில் மூத்த வாக்காளர் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- கலெக்டர் மெர்சி ரம்யா மூத்த வாக்காளருக்கு வழங்கினார்
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வழங்கிய, மூத்த வாக்காளர் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மூத்த வாக்களர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி , ஆர்.டி.ஓ.முருகேசன் ஆகியோர் இருந்தனர்.
- கந்தர்வகோட்டை அருகேபோலீஸ்காரர் மாரடைப்பால் மரணம்
- விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது பரிதாபம்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் அறிவுக்கரசு (வயது 42). இவர் மதுரை பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று விடுமுறைக்கு பழைய கந்தர்வகோட்டையையில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது அறிவுக்கரசுக்கு காலையில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கந்தர்வகோட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே போலீஸ் அறிவுக்கரசு இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாரடைப்பால் மரணம் அடைந்த காவலர் அறிவுக்கரசுக்கு ஜான்சிராணி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
- சிங்கமுத்து அய்யனார் குளக்கரை பகுதியில் தெரு விளக்குகள் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
- இந்த வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் சிங்கமுத்து அய்யனார் கோவில் குளக்கரை பகுதி வழியாக நாரிமேடு, சமுத்துவபுரம்,லெட்சுமி நகர்,வெங்கடேஸ்வரா நகர், தைலா நகர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை செல்கிறது. இந்த வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அவ்வழியில் உள்ள தெரு விளக்குகள் தொடர்ச்சியாக எரியாத நிலை உள்ளது. எனவே அவ்வழியாக மக்கள் செல்லவே அச்சப்படுகின்றனர் .அப்பகுதி கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக நகர்மன்ற கூட்டத்தில் முறையிட்டப்படியே உள்ளனர். இருப்பினும் தெரு விளக்குகள் எரிந்தபாடு இல்லை. அப்பகுதி சாலையும் குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் சூழலும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பாகபல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. நிர்வாக இயக்குநர் கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, வாகவாசல் இராஜாப்பட்டி கிராமத்திலுள்ள சமுதாயகூடத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு இராஜாப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர், கவுன்சிலர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முகாமிற்கு முன்னிலை வகித்தனர். இம்மருத்துவ முகாமில், தொற்றாநோய்களான சர்க்கரைநோய், இருதயநோய், புற்றுநோய், ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும் செய்யப்பட்டன.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொதுமேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் கனகா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.
- பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மூலம் காப்பீடு அட்டை பதியும் முகாம் நடைபெற்றது.
- முதல் கட்டமாக 1 மற்றும் 3 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 27 வார்டுகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்துடன் ஒருங்கிணைந்த பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மூலம் காப்பீடு அட்டை பதியும் முகாம் நடைபெற்றது.
முதல் கட்டமாக 1 மற்றும் 3 ஆகிய வார்டுகளில் நடைபெற்ற முகாமில் நகரச் செயலாளர் ராஜேந்திரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அண்ணாமலை, நகர்மன்ற உறுப்பினர்கள் உதயசூரியா, வனிதா தன்ராஜ், வட்ட பிரதிநிதிகள் ஜான்பிரிட்டோ, சரவணன், செல்லத்துரை, வட்ட செயலாளர் கைலாசம், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அடைக்கலராஜா உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பட்டா முறையாக பதியப்படாததை கண்டித்துதிருமயம் தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
- 32 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்கள்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை, திருமயம் தாலுகா, ராயபுரம் வாசுகிபுரத்தில் 32 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டாவை முறையாக பதியப்படாததை கண்டித்து, திருமயம் தாசில்தார் அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். சங்கர்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் சலோமி, மாவட்ட செயலாளர்ஜீவானந்தம், வெகுஜன அமைப்புகளின் மாவட்ட தலைவர்கள் ஸ்ரீதர் சண்முகம், நாராயணன், ஜனார்த்தனன், அசோகன், கவிபாலா, பாண்டிசெல்வி, சுசிலா, வைகை ராணி, வீரமணி, பெருமாள், வீரையா, நல்லதம்பி, ரகுமான் உள்ளிட்டோர் பேசினர்.
- புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்இருதய நோய் பரிசோதனை முகாம்
- எக்கோ ஸ்கேன் பரிசோதனை செய்தார்.
புதுக்கோட்டை,
இருதய தினத்தை முன்னிட்டு டீம் மருத்துவமனை சார்பில் உலக இருதய நோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. டீம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கே.எச்.சலீம் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் இருதய நோய் சிறப்பு மருத்துவர் எம்.ஆர்.வெங்கடேசன் இருதய எக்கோ ஸ்கேன் பரிசோதனை செய்தார்.
இருதய நோய் தின சிறப்பு சலுகையாக இசிஜி, எக்கோ(இருதய ஸ்கேன்), ஹீமோகுளோபின், இரத்தத்தில் சர்க்கரை, யூரியா, கிரியாட்டினன், கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைடு, சிறுநீரில் சர்க்கரை மற்றும் அல்புமின் போன்ற ரூ.3000 மதிப்புள்ள பரிசோதனைகள் ரு.750க்கு செய்யப்பட்டது. ஏராளமான பேர் இதனால் பயன்பெற்றனர். இந்த முகாம் திங்கட்கிழமை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
- படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகைமாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
- நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டு படகு இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 3 படகு உரி மையாளர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொ கைக்கான காசோலைகளை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமை ச்சரால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் விசைப்ப டகுகள் இலங்கை அரசினால் கைப்ப ற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்ப டை த்தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 2 விசைப்படகு உரிமை யாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மரிய சாமுவேல் ஆகியோரின் 2 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் மற்றும் ஜெயஇருதயம் என்பவரின் 1 நாட்டுப்படகு உரிமையாளருக்கும் என மொத்தம் 3 படகு உரிமையாளர்களுக்கு, ரூ.1,லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதலைமச்சரின் பொது நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை இயக்குநர் (மீன்வளத்துறை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
- வரும் பேருந்துகளும் ஒரு நிமிடம் கூட நின்று செல்வதில்லை
- பேருந்துகள் வரவில்லை என்று பொதுமக்கள் புகார்
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துகள் முறையாக வருவதில்லை. வரும் பேருந்துகளும் ஒரு நிமிடம் கூட நின்று செல்வதில்லை. இதனால் பயணிகள் பேருந்தில் பயணம் செய்வதற்கு பேருந்து நிலையத்திற்கு வராமல் வேறு சில பஸ் ஸ்டாப்புகளை தேடிச் செல்கின்றனர். இதனால் ஆலங்குடியில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாக பேருந்து நிலையம் பகுதி மாறிவிட்டது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாததால் பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் வியாபாரம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் பேருந்துகள் இப்பகுதிக்கு இரவு பகல் எந்த நேரத்திலும் வந்து செல்ல வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் கட்டிடத்தின் தரம் மற்றும் மின் வயர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்துகள் பஸ் நிலையத்திற்கு வராதது குறித்து அமைச்சரிடம் பொதுமக்களும் கடைவியாபாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் மேலும் பேருந்து நிலையத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து வியாபாரிகளிடம் கலந்தாலோசனை செய்தார்.
- எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
- காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால் பெயரளவிற்கே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலையைப் பற்றி எடுத்து கூறினார்.
தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியான பிறகு, அந்த நடைமுறைகள் செயல்படுத்த மூன்று மாத காலமாகும் அதன் பின்னரே தாலுக்கா மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் முருகேசன் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக சங்கம் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளிடம் இதனை தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக வியாபாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டபடி வரும் 3-ந்தேதி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர கோரி கடையடைப்பு போராட்டமும் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
- கந்தர்வகோட்டை அருகேமர பட்டறையில் தீவிபத்து
- ரூ.1.50 லட்சம் பொருள்கள் சேதம்
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கறம்பக்குடி சாலையில் திருநாவுக்கரசு என்பவர் மர இழைப்பு பட்டறை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பட்டறையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை வந்து பார்த்தபோது பட்டறையில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் பலகைகள் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொ டுத்தார். கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து பெரும் விபத்தை தவிர்த்தனர். தீ விபத்தினால் பட்டறையில் இருந்த சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் மற்றும் மர பலகைகள் எரிந்து நாசமாகின.






