search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவிரி குடிநீர் வழங்க ரூ.2,195  கோடியில் புதிய திட்டம்
    X

    காவிரி குடிநீர் வழங்க ரூ.2,195 கோடியில் புதிய திட்டம்

    • புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க ரூ.2,195 கோடியில் புதிய திட்டம்
    • அமைச்சர் கே.என்.நேரு தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகராட்சிக்கு கடந்த 1994-ம் ஆண்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் திருச்சி ஜீயபுரம், காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இதில் குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்த நிலையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது.

    இதனை சரி செய்யும் வகையில் குடிநீர் குழாய்கள் சீரமைத்து ரூ.75.06 கோடியில் குடிநீர் அபிவிரு த்தி திட்ட பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி திருவப்பூ ரில் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 2195 கோடி மதிப்பீட்டில் 23 லட்சம் மக்கள் பயன்படக்கூடிய அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க அனைத்து நடவடி க்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதியை தவிர தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான அளவு குடி தண்ணீர் கொடுப்பதற்கு வடகிழக்கு பருவமழை மிக சிறப்பாக பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×