என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி பேருந்து நிலையத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
- வரும் பேருந்துகளும் ஒரு நிமிடம் கூட நின்று செல்வதில்லை
- பேருந்துகள் வரவில்லை என்று பொதுமக்கள் புகார்
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துகள் முறையாக வருவதில்லை. வரும் பேருந்துகளும் ஒரு நிமிடம் கூட நின்று செல்வதில்லை. இதனால் பயணிகள் பேருந்தில் பயணம் செய்வதற்கு பேருந்து நிலையத்திற்கு வராமல் வேறு சில பஸ் ஸ்டாப்புகளை தேடிச் செல்கின்றனர். இதனால் ஆலங்குடியில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாக பேருந்து நிலையம் பகுதி மாறிவிட்டது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாததால் பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் வியாபாரம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் பேருந்துகள் இப்பகுதிக்கு இரவு பகல் எந்த நேரத்திலும் வந்து செல்ல வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் கட்டிடத்தின் தரம் மற்றும் மின் வயர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்துகள் பஸ் நிலையத்திற்கு வராதது குறித்து அமைச்சரிடம் பொதுமக்களும் கடைவியாபாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் மேலும் பேருந்து நிலையத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து வியாபாரிகளிடம் கலந்தாலோசனை செய்தார்.






