என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2,654 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 140 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 2,654 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டையில் தொடரும் சம்பவமாக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அவருடன் சேர்ந்து இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் ஏம்பலை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாள். இதில் கொலையாளி ராஜாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்தர்வகோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டது தொடர்பாக, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    இதேபோல் திருக்கோகர்ணம் பகுதியில் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவமாக, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன் விவரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ராப்பூசல் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 26). இவர் தனது உறவினரான 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒன்றாக சேர்ந்து இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கைதான அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    அன்னவாசல் அருகே கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    அன்னவாசல்:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40). வெளிநாட்டில் வேலை பார்த்த இவர், தற்போது சொந்த ஊர் திரும்பி வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு தங்கராஜ், அவரது மனைவி ஆகியோர் வீட்டின் மாடியில் தூங்க சென்றனர். அவர்களுடைய மகளும், மகனும் வீட்டின் கதவை பூட்டாமல், வீட்டில் உள்ள அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

    கதவு பூட்டப்படாததை பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், ஒரு அறையில் இருந்த 2 பீரோக்கள் மற்றொரு அறையில் இருந்த ஒரு பீரோ ஆகியவற்றை திறந்து பார்த்துள்ளனர். அதில் ஒரு பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

    நேற்று காலை எழுந்த தங்கராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பீரோக்கள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக நகை இருந்த பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இது குறித்து அவர்கள், அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், இலுப்பூர் துணை சூப்பிரண்டு அருள்மொழிஅரசு ஆகியோர் வந்து விசாரணை நடத்தினர். அங்கு வரவழைக்கப்பட்ட கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அறந்தாங்கி அருகே விவசாயி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே ஆயிங்குடி தெற்கு பகுதியை சேர்ந்தவர் குண்டு என்ற குண்டுபிள்ளை(வயது 75). விவசாயியான இவர், சொத்து பிரச்சினையில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து, குண்டுபிள்ளையின் தம்பி நாகலிங்கத்தை(67) கைது செய்தனர். மேலும் நாகலிங்கத்தின் மகன் சண்முகநாதன்(30), குண்டுபிள்ளையின் மற்றொரு தம்பி சுப்பிரமணியின் மகன் செல்வராஜ் ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சண்முகநாதன், செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ள நிலையில் முக கவசத்துடன் சிலைகள் தயாராகின்றன. சிலைகள் ஊர்வலம் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.
    பொன்னமராவதி :

    விநாயகர் பிறந்த நாள், விநாயகர் சதுர்த்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வித, விதமாக வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பல அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் ஆகியவற்றை ஆங்காங்கே வைத்து வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக நடைபெறுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

    வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்தி ஆகும். அதற்கு முன்னதாக விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு, சிலைகளை தயாரித்து விற்பனைக்காக வைப்பது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆங்காங்கே இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகம் உள்ளனர். மேலும் சிலைகளை ஒரு இடத்தில் மொத்தமாக வாங்கி வந்து சாலையோரம் வைத்து விற்பனை செய்பவர்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த அனுமதி கிடைக்குமா? ஊர்வலம் நடைபெறுமா? என்பது சந்தேகமாக உள்ளது. இதனால் சிலை தயாரிப்பு தொழிலாளர்களும் விநாயகர் சிலைகளை அதிகம் செய்வதில் ஆர்வம் காட்டாமல், கடந்த ஆண்டை விட குறைவாக தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பக்குவப்படுத்தப்பட்ட மண்ணை வைத்து சுமார் 10 நாட்கள் பணி செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் பட்சத்தில் அவைகளை செய்வதா? இல்லையா? என பல தொழிலாளர்கள் குழப்பத்தில் புலம்புகின்றனர். இதனால் சிலை தயாரிப்பு என்பது மந்தமாக உள்ளது. ஒரு சிலர் விநாயகர் சிலைகளை தற்போது உள்ள காலக்கட்டத்திற்கு ஏற்ப வடிவமைத்து வருகின்றனர். அதிலும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக கவசம் அணிந்த விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொன்னமராவதி பகுதியில் சிறிய அளவு முதல் 3 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். அந்த சிலைகளுக்கு முக கவசம் அணிந்து விற்பனை செய்கின்றனர். மண்பாண்ட தொழிலாளர்களும் முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் பக்கத்து மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், விழாவை சமூக இடைவெளி கடைப்பிடித்து கொண்டாடும் வகையிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களும், வியாபாரிகளும் எதிர்பார்த்துள்ளனர். 
    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 92 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,475 ஆக உயர்ந்துள்ளது.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா, புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா, புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத 
    செயல்களை தடுக்காத அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 35 பேருக்கு விளக்கம் கேட்டு 
    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார். 

    மேலும் 3 நாட்களுக்குள் பதில் அளிக்கவும், இல்லையெனில் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்தார்.இதற்கு அந்தந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வருத்தம் தெரிவித்து பதில் அளித்துள்ளனர். மேலும் குற்ற சம்பவம், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையை அதிகப்படுத்துவதாக கூறியிருந்தனர். இதனை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

    சூப்பிரண்டின் இந்த நடவடிக்கையால் தற்போது மாவட்டத்தில் மணல் கடத்தல், லாட்டரி சீட்டுகள் விற்பனை, சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கையை போலீசார் அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக இது போன்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதியப்படுவது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கையை எடுத்திருந்தனர். 

    இதேபோல் அறந்தாங்கி பகுதியில் மணல் கடத்தியவர்கள், திருக்கோகர்ணம், அன்னவாசல் பகுதியில் சூதாடியவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவால் போலீசார் தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
    கந்தர்வகோட்டை அருகே கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே காடவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ்(வயது 36). விவசாயியான இவர் நேற்று அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்றபோது தஞ்சாவூரில் இருந்து வேகமாக வந்த கார், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த தேவதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இது குறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் அங்கு வந்து, தேவதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    கொரோனா தொற்றுக்கு சித்த மருத்துவ முறைப்படி, சென்னை ஜவஹர் பொறியியல் கல்லூரி, அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களிலும், மற்ற சில மாவட்டங்களிலும் அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் முழுவதும் இதனை விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட், கொரோனா நோய் சிகிச்சைக்கு சித்த மருத்துவத்தைப் பயன்படுத்துவது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள உதவி செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்திய மருத்துவத்துறை சார்பில், பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்க முதலமைச்சர் பழனிசாமி அனுமதி அளித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ஆயுஷ் மருத்துவர்கள் அடங்கிய, சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்டத்திலும் 100 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், எல்லா மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். ஏற்கனவே தமிழகத்தில் 18 பிரத்யேகமான சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
    அறந்தாங்கி அருகே விவசாயி கொலை வழக்கில் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே ஆயிங்குடி தெற்கை சேர்ந்தவர் குண்டு என்ற குண்டுபிள்ளை(வயது 75). விவசாயியான இவருக்கும், இவரது தம்பிகள் நாகலிங்கம்(67), சுப்பிரமணி ஆகியோருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குண்டுபிள்ளையை நாகலிங்கம்(67), இவரது மகன் சண்முகநாதன், சுப்பிரமணியின் மகன் செல்வராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து தாக்கினர். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குண்டுபிள்ளை இறந்தார். இது குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நாகலிங்கத்தை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 16 ஆயிரத்து 463 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    கொரோனா ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக நேற்று முன்தினம் வரை 16 ஆயிரத்து 463 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 ஆயிரத்து 835 இரு சக்கர வாகனங்களும், கார்கள் உள்பட நான்கு சக்கர வாகனங்கள் 345-ம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.3 லட்சத்து 57 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சட்டவிரோதமாக விற்கப்பட்ட 10 ஆயிரத்து 526 மதுபாட்டில்களும், 2 ஆயிரத்து 672 லிட்டர் சாராயமும், 20 ஆயிரத்து 125 லிட்டர் சாராய ஊறலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
    புதுக்கோட்டையில் வீட்டு வாசலில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ஜீவா நகர் இரண்டாம் வீதியை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி(வயது 75). இவர் நேற்று மாலை தனது வீட்டு வாசலில் துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ஆரோக்கியமேரியின் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    ×