என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா, புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தல், கஞ்சா, புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டுகள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத
செயல்களை தடுக்காத அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 35 பேருக்கு விளக்கம் கேட்டு
போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் அனுப்பினார்.
மேலும் 3 நாட்களுக்குள் பதில் அளிக்கவும், இல்லையெனில் நடவடிக்கை பாயும் என்றும் தெரிவித்தார்.இதற்கு அந்தந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வருத்தம் தெரிவித்து பதில் அளித்துள்ளனர். மேலும் குற்ற சம்பவம், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையை அதிகப்படுத்துவதாக கூறியிருந்தனர். இதனை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
சூப்பிரண்டின் இந்த நடவடிக்கையால் தற்போது மாவட்டத்தில் மணல் கடத்தல், லாட்டரி சீட்டுகள் விற்பனை, சட்ட விரோத மது விற்பனை உள்ளிட்டவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கையை போலீசார் அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக இது போன்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் பதியப்படுவது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது நடவடிக்கையை எடுத்திருந்தனர்.
இதேபோல் அறந்தாங்கி பகுதியில் மணல் கடத்தியவர்கள், திருக்கோகர்ணம், அன்னவாசல் பகுதியில் சூதாடியவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். போலீஸ் சூப்பிரண்டின் உத்தரவால் போலீசார் தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
Next Story






