என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தினை குடும்பத்தால் கைவிடப்பட்ட 90 வயது மூதாட்டி அவர்களின் கரங்களால் திறந்து வைத்தார்.
புதுக்கோடை தெற்கு 4ம் வீதியில் தமிழக வாழ்வுரிமை கட்சி புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. குடும்பத்தால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் 90 வயது நிரம்பிய அம்மையார் வேதம் அவர்களின் கரங்களால் திறந்து வைத்தார். இந்த அலுவலகம் 2வது மாடியில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது, 90 வயது நிரம்பிய வேதம் அம்மையாரை கிழ் தளத்திலிருந்து 2வது மாடி வரை தூக்கிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வாழ்த்தினார். கட்சி அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியின் மாவட்ட கழக செயலாளர் நியாஸ் அகமது, மாவட்ட திமுக துணைச் செயலாளர் க.மதியழகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, திமுக நகர கழக செயலாளர் நைனா முகமது, மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் முல்லை முபாரக் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திறப்பு விழாவின் முடிவில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட நகர நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விராலிமலை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள அவ்வையார்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு ஆவூர் அருகே உள்ள சித்தாம்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரிசங்கு என்கிற முருகையா (வயது 45) என்பவர் தோட்ட பராமரிப்பு வேலை செய்து வந்தார். நேற்று மாலை அந்த தோட்டத்தில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் உள்ள மின்மோட்டார் சுவிட்சை திரிசங்கு இயக்கினார். அப்போது மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் அருகே உள்ள மின்மாற்றியை பார்த்துள்ளார். அப்போது அதில் பியூஸ் போயிருந்தது. இதனால் திரிசங்கு மின்மாற்றியை நிறுத்திவிட்டு அதில் ஏறி பியூஸ் போட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நீர்பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,524 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 6 ஆயிரத்து 5 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,524 ஆக அதிகரித்துள்ளது.

புதுக்கோட்டையில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,379 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,379 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பேருந்து நிலையம் அருகே பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பேருந்து நிலையம் அருகே பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

போலீசார் கட்டைப்பையில் இருந்த பச்சிளம் ஆண் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா விடுமுறையை பயனாக்கும் விதத்தில் சகோதரிகள் இருவர் பனை விதை சேகரித்து வருகின்றனர். அந்த பனை விதைகள் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின நாளில் நடவு செய்யப்படுகிறது.
கீரமங்கலம்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்தவர் இரும்பொறை. விவசாயி.
இவரது மகள் மாட்சிமை(வயது 18), சென்னையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். மற்றொரு மகள் உவகை (17). பிளஸ்-2 முடித்துள்ள இவர், கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார்.
சகோதரிகள் இருவரும் விடுமுறையை பயனாக்கும் வகையில் தந்தையுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தந்தைக்கு சொந்தமான தோட்டம் அருகே உள்ள பனை மரங்களில் இருந்து விழும் பனம்பழங்களை சேகரித்து வருகின்றனர்.
அந்தவகையில், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனம்பழங்களை சேகரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு இயற்கை விவசாயம், மரங்கள் வளர்ப்பு மீது ஆர்வம் அதிகம்.
அதனால் தான், கொரோனா விடுமுறையை பயனாக்கும் விதத்தில் பனை விதைகளை சேகரித்து வருகிறோம். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டிருந்தோம். அதனைப்பார்த்து பலரும் தங்களுக்கு பனை விதை வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இதுவரை 11 ஆயிரம் விதைகள் கேட்டுள்ளனர்.
வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தில் மட்டும் 3 ஆயிரம் விதைகள் நடவு செய்ய கேட்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ஆயிரம் விதைகள் அனுப்பி வைத்திருக்கிறோம். மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க தொடர்ந்து பனை விதைகள் சேகரித்து வருகிறோம். எங்களைப் போல சொந்த ஊருக்கு வந்துள்ள மாணவ சமுதாயத்தினர் இதுபோன்று பனை விதைகளை சேகரித்து குளம், ஏரி, சாலை ஓரங்களில் நடவு செய்தால் நிலத்தடி நீரை காப்பாற்ற முடியும் என்றனர்.
சகோதரிகளின் இந்த நற்பணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,325 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 136 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,325 ஆக உயர்ந்துள்ளது.

அன்னவாசல் அருகே ஓடும் கார் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. அதில் இருந்த 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அன்னவாசல்:
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரை சேர்ந்தவர் உமர்(வயது 32). இவர் தனது உறவினர்கள் சகிலாபானு(40), முகமதுரசீது(14) ஆகியோருடன் புதுக்கோட்டைக்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். காரை உமர் ஓட்டினார். அந்த கார் அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டி என்னும் இடத்தில் வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வந்தது. இதனை கண்ட உமர் காரை நடுரோட்டில் உடனடியாக நிறுத்தினார். ஏதோ அசம்பாவித சம்பவம் நடைபெறுவதை அறிந்த 3 பேரும் காரில் இருந்து இறங்கி ஓடினர். இதனையடுத்து கார் தீப்பற்றி எரிந்தது. 3 பேரும் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்.
கரும்புகையுடன் கார் எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் சம்பத்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடானது.
இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் தீப்பிடித்த சம்பவம் எதிரொலியாக, அந்த சாலையில் வந்த வாகனங்கள் அனைத்தும் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்றது. இதனால் அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 135 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,185 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர் மாவட்டங்களில் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 135 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 3,185 ஆக உயர்ந்துள்ளது.

அண்டக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியரை தாக்கியதோடு கண்ணாடியை உடைத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீரனூர்:
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரை அடுத்த அண்டக்குளத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று மதியம் ரமேஷ் என்பவரை ரத்தக் காயத்துடன், பரவயலை சேர்ந்த தினேஷ் (வயது 20), அய்யப்பன் (40) ஆகியோர் சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெண்ணிலா, உதவி மருத்துவர் பிரியதர்ஷினி ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். இதனால், ரமேசை பார்க்க சற்று தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த தினேஷ் மற்றும் அய்யப்பன் ஆகிய இருவரும் டாக்டர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். அவர்களை சமாதானபடுத்த முயன்ற மருத்துவ ஊழியர் மாரிமுத்துவை கீழே தள்ளி தாக்கினர். மேலும், உங்களை கொல்லாமல் விடமாட்டோம் என கூறி கற்களை எடுத்து சரமாரியாக மருத்துவமனை மீது வீசினர். இதில், மருத்துவமனையின் கண்ணாடிகள் உடைந்தன.
இதுகுறித்து மருத்துவ அலுவலர் வெண்ணிலா, உடையாளிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ், அய்யப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

அறந்தாங்கி அருகே கொரோனாவால் உயிரிழந்த முதியவரின் உடலை தகனம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சிலோன் காலனியை சேர்ந்த 74 வயதுடைய முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். பின்னர், அவரது உடல் அறந்தாங்கி கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்தவரை இங்கு தகனம் செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து முதியவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னமராவதியில் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த 4-ந் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டதால் அருகில் உள்ள வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதன் முடிவு வருவதற்குள் அவர் இறந்தார். தற்போது பரிசோதனை முடிவு வெளிவந்ததில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரது இறுதி சடங்கில் பங்கேற்ற உறவினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலுப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தாசில்தார் அலுவலகம் மூடப்பட்டது. முன்னதாக அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கீரனூர் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 35 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேருக்கு தொற்று உறுதியானதால் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது.
துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பிய கீரனூரை அடுத்த மங்கத்தேவன்பட்டியை சேர்ந்த ஒரு பெண் மூலம் 10 வயது சிறுமி உள்பட 6 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் தொடர்பில் இருந்த மருதூரை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் மங்கதேவன்பட்டியை சேர்ந்த 5 பெண்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அங்கு மருத்துவ ஊழியர்கள் முகாமிட்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து வருகின்றனர். இதேபோல குளத்தூரில் ஒரு பெண் மற்றும் அவரது பேத்திக்கும், காந்திநகர் பகுதியில் ஒரு பெண்ணுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
அரிமளம் ஒன்றிய சுகாதாரத்துறை சார்பில் நேற்று முன்தினம் கர்ப்பிணிகள் உள்பட பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் என 63 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் வெளிவந்தநிலையில், பேரூராட்சியில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வரும் 3 பெண்களுக்கும், திருமயம் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வரும் கே.செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த 56 வயதுடைய ஆண், அவருடைய 17 வயது மகன், 13 வயது மகள் மற்றும் கே.புதுப்பட்டியை சேர்ந்த 49 வயதுடைய ஆண் என 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கறம்பக்குடி பகுதியில் நேற்று பொன்விடுதியை சேர்ந்த 4 பேர், வாண்டான்விடுதியை சேர்ந்த 2 பேர், வெள்ளாளவிடுதி, கெண்டையன்பட்டி, புதுப்பட்டி, கோட்டைக்காடு ஆகிய கிராமங்களில் தலா ஒருவர் என 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோட்டைப்பட்டினம் அருகே பணம் வைத்து சூதாடிய 17 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.13¾ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக சூதாட்ட கிளப் நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீமிசல் அருகே பொன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகடவாக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து போலீசார் அதிரடியாக அந்த தென்னந்தோப்பிற்கு சென்று அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர், அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலரும், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளருமான பொன்பேத்தி சுந்தரபாண்டியன், பஷீர்அகமது, வெங்கடேசன், முத்து, பக்ருதீன், பாலு, செந்தில்வேல், விஜயகுமார் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்கள் சூதாட வைத்திருந்த ரூ.13 லட்சத்து 62 ஆயிரத்து, 780-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். கோட்டைப்பட்டினம் அருகே பணம் வைத்து சூதாடிய 17 பேர் பிடிப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.