என் மலர்
புதுக்கோட்டை
கீரனூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
கீரனூரை அடுத்த குன்றாண்டார்கோவிலை சேர்ந்தவர் பாக்யராஜ். இவருடைய மனைவி ரம்யா(வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வயிற்று வலி காரணமாக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்த ரம்யா, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை முதல் 21-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் முன்பு காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிற நிலையில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், மருத்துவ செலவினை டாஸ்மாக் நிர்வாகம் முழுமையாக ஏற்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி வரை டாஸ்மாக் கடைகள் முன்பு காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி 2 மணி நேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் 54 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் புதிதாக 170 பேருக்கு நேற்று கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 990 ஆக உயர்ந்தது. நேற்று 79 பேர் சிகிச்சைமுடிந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகியிருந்தனர். இதுவரை மொத்தம் 2 ஆயிரத்து 711 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,225 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 வயது வாலிபர், 27 வயது வாலிபர், 75 வயது முதியவர், 41 வயது ஆண், 47 வயது ஆண், 62 வயது முதியவர், 60 வயது முதியவர் என 7 பேர் இறந்திருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிற நிலையில், தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதில் பெரும்பாலும் வயதான முதியவர்கள் தான் அதிகம். இருப்பினும் இளம் வயது வாலிபர்களும் பலியாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று பாதிப்புடன் பலி எண்ணிக்கையும் அதிகரிப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்தில் உள்ள பெருங்களூர், வாராப்பூர், ஆதனக்கோட்டை சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை ஆதனக்கோட்டை வட்டாரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 47 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் ராணியார் அரசு மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை, மன்னர் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மகளிர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.24 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதேநேரத்தில் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, டீன் பூவதி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த கொரோனா சிறப்பு சிகிச்சை ஒப்புயர்வு மையம் பயன்பாட்டிற்கு வந்தது.
இது தொடர்பாக டீன் பூவதி கூறும்போது, இந்த புதிய மையத்தில் 350 படுக்கைகளும், அதிதீவிர சிகிச்சைகளுக்காக 35 படுக்கைகளும், 165 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடனும், 15 தனி அறை வசதிகளும், 3 அதிநவீன சிகிச்சை அரங்குகளும், வென்டிலேட்டர் கருவிகளும், திரவநிலை ஆக்சிஜனை சேமிக்க கூடிய கொள்கலன் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறியுடன் மற்ற நோயுள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அறுவை சிகிச்சை அரங்குகளும், பிரச் வார்டுகளும் உள்ளன. மேலும் கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அரங்கமும் உள்ளது. புதிதாக தொற்று ஏற்படுபவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நவீன கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா நோயாளிகள் பொழுதுபோக்க அறைகளில் டி.வி. வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.

ஆவூர் அருகே பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் திருச்சி வாலிபரை கடத்தி கொலை செய்த 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆவூர்:
திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள செங்களாக்குடியில் மரப்பொருட்கள் தயார் செய்வதற்காகவும், அதனை வைப்பதற்கும் சுமார் ஒரு ஏக்கரில் குடோன் கட்டியுள்ளார். ஆனால் அது உபயோகப்படுத்தாமல் பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது. அங்கு சாமிஊரணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த குடோனில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டது. இதைப்பார்த்த பெண்கள் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் செங்களாக்குடி கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அந்த குடோனுக்கு சென்று பார்த்தனர். அப்போது, குடோனில் இருந்து சிலர் ஓடினர். இதைப் பார்த்த அந்த ஊர் வாலிபர்கள் குடோன் கேட்டை இழுத்து உள்புறமாக பூட்டினர். மேலும் தப்பி ஓட முயன்றவர்களில் 7 பேரை பிடித்தனர். மேலும் அங்கிருந்து 4 பேர் வெளியில் நிறுத்தி இந்த காரில் ஏறி தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து குடோனுக்குள் சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைபார்த்த பொதுமக்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இது குறித்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீரனூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன், மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், கோவிந்தராஜ் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த 7 வாலிபர்களையும் மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் காரில் தப்பி சென்ற 4 பேரையும் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மண்டையூர் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 11 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி கே.கே.நகரை சேர்ந்த அசாருதீன், முகமது நபி, அபுதாகீர், முகமது ஹனிப், ரெங்காநகரை சேர்ந்த சார்லஸ், காக்காத்தோப்பை சேர்ந்த ஷேக், பூந்தோட்ட தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம், தென்னூரை சேர்ந்த காஜாமுகமது, பெரியார் நகரைசேர்ந்த வின்சென்ட், ஏர்போர்ட்டை சேர்ந்த இப்ராகீம் ஷா, முகமது ஆசிக் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் திருச்சி பாலக்கரையை சேர்ந்த ரகுமான் என்ற அக்பர் (வயது 35) என்பவர் ரூ.12 லட்சம் வாங்கியதாகவும், அதை கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும் அதனால் அவரை இங்கு கடத்தி வந்து பணம் கேட்டு அடித்ததாகவும் அப்போது அவர் இறந்துவிட்டதாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், இந்த குடோனில் மேலும் சிலர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே அந்த பகுதி முழுவதும் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அக்பர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11 பேரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரண நடத்தி வருகின்றனர்.

கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பரவிடுதி பகுதியில் லம்பி வைரஸ் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீரமங்கலம்:

கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சாகுல்ஹமீது தலைமை தாங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் தினேஷ்குமார், செல்வவிநாயகி, கவியரசன், புவனேஸ்வரி, நடமாடும் கால்நடை மருத்துவப்பிரிவு பாண்டியராஜன், மற்றும் பணியாளர்கள் இணைந்து கால்நடைகளுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து மருந்துகள் கொடுத்தனர். இந்த சிறப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொன்னமராவதி உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி:
மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிடக்கோரி பொன்னமராவதி உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. திருமயம் கோட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் ராஜேந்திரன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் கோட்ட தலைவர் அடைக்கலராஜ், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,813 ஆக அதிகரித்துள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,813 ஆக அதிகரித்துள்ளது.

அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் தாறுமாறாக ஓடிய ஆம்புலன்ஸ் காரணமாக பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே பூங்குடி அத்தாணி சாலையில் நேற்று பெருமாள், சகாயராஜ் ஆகியோர் ஓட்டிச்சென்ற மொபட்டுகள் மோதிக் கொண்டன. இதில், அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதனைத்தொடர்ந்து அறந்தாங்கியில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ் அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் வேகமாக சென்ற போது குண்டும்-குழியுமான சாலையால் டயர் பகுதியில் பழுது ஏற்பட்டு தாறுமாறாக ஓடியது.
இதனால், அந்த சாலையில் சென்றவர்கள் அலறியடித்து ஓடினர். பின்னர், ஒருவழியாக டிரைவர் சாமர்த்தியமாக ஆம்புலன்சை நடுரோட்டில் நிறுத்தினார். இதையடுத்து மாற்று ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் விபத்தில் சிக்கிய இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி-காரைக்குடி சாலை மிகவும் பழுதடைந்து குண்டும்-குழியுமாக உள்ளது. இதனால், அவசர தேவைக்கு கூட ஆம்புலன்சை அழைக்க முடியவில்லை. அப்படியே ஆம்புலன்ஸ் வந்தாலும் இதுபோன்ற நிலைதான் ஏற்படுகிறது. ஆகவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை அருகே ஆன்-லைன் கல்வியை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில குழு உறுப்பினர் ஓவியா பேசினார். அனைத்து மாணவர்களுக்கும் இணைய சேவையை உறுதிபடுத்தும் வரை ஆன்-லைன் கல்வி முறையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,664 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,664 ஆக உயர்ந்துள்ளது.

திருமயம் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி பொக்லைன் ஆபரேட்டர் ஒருவர் உயிரிழந்தார்.
திருமயம்:
* திருமயம் அருகே உள்ள ஓடையப்பட்டி கல் குவாரியில் தர்மபுரி மாவட்டம் பொம்முடி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 24) என்பவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று வேலை முடிந்து அப்பகுதியிலுள்ள கல்குவாரி பகுதிக்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனால், சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் அவரை தேடிச்சென்றபோது சுப்பிரமணியன் கல்குவாரி நீரில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர், குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* திருமயம் அருகே உள்ள மலைக்குடிப்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன்(வயது 60). விவசாயியான இவர், சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் மதுரை-புதுக்கோட்டை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் நாகப்பன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நாகப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மதுரையிலிருந்து பொ ருட்களை ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பில்லமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் சவுந்தரபாண்டி, பிரேக் பிடித்தார். இதில் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில் சவுந்தரபாண்டி காயமின்றி உயிர் தப்பினார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருமயம் போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
* கீரனூர் அருகே கிள்ளனூரில் வயலுக்கு வைத்த எலி மருந்தை தின்ற மயில் ஒன்று பரிதாபமாக செத்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* புதுக்கோட்டை பல்லவன் குளம் அருகே பணம் வைத்து சூதாடிய சின்னதம்பி (49) உள்பட 7 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர்.
* பேராங்குளம், காமராஜபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற ஆறுமுகன் (50), சுப்ரமணி (39) ஆகியோரை கணேஷ்நகர் போலீசார் கைது செய்தனர்.
* கொடும்பாளூர் சத்திரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில் தங்களுக்கு வீடுகளை காலி செய்ய காலஅவகாசம் வழங்க கோரியும், மாற்று இடம் ஏற்பாடு செய்து தரும்படியும் மனு கொடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கலெக்டர் பங்களா முன்பு நேற்று நின்றிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.