search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாங்கள் சேகரித்த பனைவிதையுடன் சகோதரிகள்.
    X
    தாங்கள் சேகரித்த பனைவிதையுடன் சகோதரிகள்.

    கொரோனா விடுமுறையை பயனாக்கும் விதத்தில் பனை விதை சேகரிக்கும் சகோதரிகள்

    கொரோனா விடுமுறையை பயனாக்கும் விதத்தில் சகோதரிகள் இருவர் பனை விதை சேகரித்து வருகின்றனர். அந்த பனை விதைகள் வருகிற 15-ந்தேதி சுதந்திர தின நாளில் நடவு செய்யப்படுகிறது.
    கீரமங்கலம்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே உள்ள செரியலூர் இனாம் கிராமத்தை சேர்ந்தவர் இரும்பொறை. விவசாயி.

    இவரது மகள் மாட்சிமை(வயது 18), சென்னையில் ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது கொரோனா விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். மற்றொரு மகள் உவகை (17). பிளஸ்-2 முடித்துள்ள இவர், கல்லூரியில் சேர விண்ணப்பித்துள்ளார்.

    சகோதரிகள் இருவரும் விடுமுறையை பயனாக்கும் வகையில் தந்தையுடன் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தந்தைக்கு சொந்தமான தோட்டம் அருகே உள்ள பனை மரங்களில் இருந்து விழும் பனம்பழங்களை சேகரித்து வருகின்றனர்.

    அந்தவகையில், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனம்பழங்களை சேகரித்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களுக்கு இயற்கை விவசாயம், மரங்கள் வளர்ப்பு மீது ஆர்வம் அதிகம்.

    அதனால் தான், கொரோனா விடுமுறையை பயனாக்கும் விதத்தில் பனை விதைகளை சேகரித்து வருகிறோம். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டிருந்தோம். அதனைப்பார்த்து பலரும் தங்களுக்கு பனை விதை வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இதுவரை 11 ஆயிரம் விதைகள் கேட்டுள்ளனர்.

    வருகிற 15-ந் தேதி சுதந்திர தினத்தில் மட்டும் 3 ஆயிரம் விதைகள் நடவு செய்ய கேட்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ஆயிரம் விதைகள் அனுப்பி வைத்திருக்கிறோம். மற்றவர்களுக்கு அனுப்பி வைக்க தொடர்ந்து பனை விதைகள் சேகரித்து வருகிறோம். எங்களைப் போல சொந்த ஊருக்கு வந்துள்ள மாணவ சமுதாயத்தினர் இதுபோன்று பனை விதைகளை சேகரித்து குளம், ஏரி, சாலை ஓரங்களில் நடவு செய்தால் நிலத்தடி நீரை காப்பாற்ற முடியும் என்றனர்.

    சகோதரிகளின் இந்த நற்பணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
    Next Story
    ×