என் மலர்
புதுக்கோட்டை
வடகாடு அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள மாங்காடு பகுதியில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாங்காடு சுள்ளியதெரு பகுதியில் பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த சித்திரவேல் (வயது 55) உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.620 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் கொண்டைக்கடலை கேட்டு ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஏழை-எளிய குடும்ப கார்டுதாரர்களுக்கு கொண்ைடக்கடலை வழங்கப்படும் என்று சமீபத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கொண்டைக்கடலை வாங்க அனைத்து வகை கார்டுதாரர்களும் ரேஷன் கடைக்கு வந்தனர். ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள் குறிப்பிட்ட ஒரு சில கார்டுதாரர்களுக்கு மட்டும் கொண்டைக்கடலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த கார்டுதாரர்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகையில், 232 கார்டுதாரர்களில், 170 பேருக்கு மட்டுமே கொண்டைக்கடலை வந்துள்ளதாகவும், மீதமுள்ள 62 பேருக்கு வரவில்லை எனவும், ஏழை-எளிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு வந்தவுடன் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அன்னவாசல் அருகே ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள மெய்வழிச்சாலையை சேர்ந்தவர் சாலைமுருகன். ஒப்பந்ததாரரான இவர் அதே பகுதியில் வீடு கட்டி வருகிறார். இங்கு கட்டைக்கோண்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவர் தச்சுவேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சாலைமுருகன் வீட்டை பூட்டிவிட்டு மதுரை சென்றார். பின்னர் மீண்டும் அவர் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, 2 தங்க சங்கிலி, ஒரு மோதிரமும் திருடப்பட்டு இருந்தது.
இது குறித்து சாலைமுருகன் அன்னவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்த சந்தேகத்தின் பேரில் சண்முகத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
கீரமங்கலம் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
கீரமங்கலம் காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 57) . இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு துணிக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலை முடிந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீரமங்கலம் மேற்கு மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே பனங்குளம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ராகுல் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மாதவன், ராகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாதவன் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். ராகுல் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் ராங்கியன் விடுதிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பாஸ்கர் (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆவூர் அருகே மாட்டு வியாபாரி வீட்டில் 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.4¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆவூர்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே உள்ள ஆம்பூர்பட்டி நால்ரோட்டை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). விவசாயியான இவர் மாட்டு வியாபாரமும் செய்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா (45). இவர்களுக்கு ரகுபதி (27) என்ற மகன் உள்ளார். இவருக்கு கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் ரம்யா (20) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ரம்யா திருமணத்தின்போது, வழங்கப்பட்ட 35 பவுன் நகைகளை கணவர் வீட்டில் உள்ள பழைய மற்றும் புதிய பீரோக்களில் வைத்து இருந்தார். இதேபோல் பழனிசாமி திருமணத்தின்போது, வந்த மொய்ப்பணம் மற்றும் மாடுகளை விற்ற பணம் என ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்தையும் வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார்.
நேற்று காலையில் பழனிசாமி வெளியூரில் உள்ள அவரது உறவினரை பார்க்க சென்றுவிட்டார். ரகுபதி வேலைக்கு சென்று விட்டார். ரேணுகா மற்றும் அவரது மருமகள் ரம்யா ஆகிய இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு ஆடு, மாடுகளை தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
இதற்கிடையில் மதியம் 3 மணி அளவில் பழனிசாமி வீட்டுக்கு வந்தார். அப்போது, இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோக்களும் திறக்கப்பட்டு, அதில் உள்ள துணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன.
மேலும் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சத்து 72 ஆயிரமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதைஅறிந்து வீட்டுக்கு வந்த பழனிசாமியின் மனைவி ரேணுகா, மருமகள் ரம்யா ஆகியோர் பணம்-நகை கொள்ளை போனதால் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்துக்கொண்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மாத்தூர், மண்டையூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பொதியம்பட்டி பகுதியில் குட்டையில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு திருமயம் அருகே உள்ள பொதியம்பட்டி பகுதியில் உள்ள குட்டையில் தேங்கி கிடந்த தண்ணீரில் கால் கழுவ சென்றார். அப்போது அவர் தவறி குட்டைக்குள் விழுந்தார். இதை யாரும் கவனிக்காததால் அவர் மூச்சுதிணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடையை திறக்க ஆதரித்தும், எதிர்த்தும் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் ஆற்றுகரை பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை நேற்று திறக்கப்பட இருந்தது. இந்தநிலையில் அருணாசலபுர பகுதி பொதுமக்கள் சுந்தர்ராசு தலைமையில் நாகுடி கடைவீதியில் டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என கூறி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த நாகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே ஊராட்சி தலைவர் சக்திவேல் தலைமையில் இன்னொரு தரப்பினர் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்று கூறி நாகுடி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவிததும், ஆதரவு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னமராவதி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டி 5¾ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பொன்னமராவதி:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி சாந்தி. நேற்று மாலையில் இவரது வீ்ட்டுக்கு 5 பேர் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டு திடீரென்று சாந்தியின் தலையில் அரிவாளால் வெட்டினர்.
பின்னர் அவர்அணிந்து இருந்த 5¾ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 5 பேரில் ஒருவரை பிடித்தனர். மற்றவர்கள் தப்பி சென்றனர். தகவல் அறிந்த பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்த முகிலன் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். காயம் அடைந்த சாந்தியை பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மற்றும் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் தப்பி சென்ற மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த கும்பல் ஏற்கனவே நோட்டமிட்டு இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 5 பேர் கொண்ட கும்பல் பெண்ணை வெட்டி சங்கிலி பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஜனவரி 17-ஆம் தேதி மிகப்பெரிய ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மினி கிளினிக்கை, வீர பட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் இரட்டை இலை துளிர்த்து நிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார். ஜனவரி 17-ஆம் தேதி விராலிமலையில் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கந்தர்வகோட்டை அருகே லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கடைவீதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற கறம்பக்குடியைச் சேர்ந்த ரவி (வயது 57) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மிரட்டு நிலை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற மீமிசல் பகுதியை சேர்ந்த சிவா (26) என்பவர் மீது அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மணல் கடத்திய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம் புதுநிலைப்பட்டியில் கே.புதுப்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும் ஒருவர் லாரியை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். போலீசார் லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவர் கே.ராயவரத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் மீது கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.