என் மலர்
செய்திகள்

கருகப்பூலாம்பட்டியில் உள்ள ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டபோது எடுத்த படம்.
அனைத்து கார்டுதாரர்களுக்கும் கொண்டைக்கடலை கேட்டு ரேஷன் கடை முற்றுகை
பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் அனைத்து கார்டுதாரர்களுக்கும் கொண்டைக்கடலை கேட்டு ரேஷன் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் ஏழை-எளிய குடும்ப கார்டுதாரர்களுக்கு கொண்ைடக்கடலை வழங்கப்படும் என்று சமீபத்தில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கொண்டைக்கடலை வாங்க அனைத்து வகை கார்டுதாரர்களும் ரேஷன் கடைக்கு வந்தனர். ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள் குறிப்பிட்ட ஒரு சில கார்டுதாரர்களுக்கு மட்டும் கொண்டைக்கடலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தி அடைந்த கார்டுதாரர்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகையில், 232 கார்டுதாரர்களில், 170 பேருக்கு மட்டுமே கொண்டைக்கடலை வந்துள்ளதாகவும், மீதமுள்ள 62 பேருக்கு வரவில்லை எனவும், ஏழை-எளிய மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றவர்களுக்கு வந்தவுடன் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Next Story






