என் மலர்
புதுக்கோட்டை
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு போலீசார் ஆவணம் கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த புளிச்சங்காடு கைகாட்டி பகுதியை சேர்ந்த கோபிராஜ் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அறந்தாங்கி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே கூத்தங்குடியை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 74). இவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு சிலிண்டர் நிறுவன குடோனில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று சதாசிவம் பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது, 17 வயது என்ஜினீயரிங் மாணவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சதாசிவம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி பகுதியில் தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் நாசமாயின. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே விஜயபுரம், கொடிவயல், மங்களநாடு, அரசர்குளம், நாகுடி, இடையார், ஆளப்பிறந்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது, பயிர்கள் விளைச்சலுக்கு வந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.
இந்நிலையில், இப்பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வயல்களில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் அதில் மூழ்கி விவசாயிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் நெல்கள் முளைத்து விட்டது.
இது குறித்து விஜயபுரத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தொடர் மழையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் செய்தாலும், ஒரு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரத்து 500 மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆனால் ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய ரூ.25ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். இந்த ஆண்டு நெற்பயிர்கள் நல்ல விளைச்சலுக்கு வந்தாலும், தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து கூடுதலாக நிவாரண தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு புதுக்கோட்டை உள்பட 18 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இருதய சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தமிழ்நாடு மருத்துவக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த ஆண்டு இதுவரை அரசு மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 31 பேருக்கு எவ்வித கட்டணமும் இன்றி ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 154 இடங்களில் ஸ்பூக்ஸ் சென்டர்களும், 18 இடங்களில் மெயின் சென்டர்களும் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் இருதய சிறப்பு சிகிச்சைக்கென ஒரு நெட்வொர்க் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு கிராமத்திலும் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் மேற்கண்ட நெட்வொர்க் மூலம் அருகில் உள்ள கேத்லாப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, இதயம் தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் அளிக்கும் வகையில் தமிழகத்தில் மிகப் பெரிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மற்றும் கேரளா மாநிலங்கள் பறவை காய்ச்சல் நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கேரளாவில் பறவை காய்ச்சல் நோய் மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லையோரப் பகுதிகள் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். பறவை காய்ச்சல் நோய் குறித்து தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை.
கேரள மாநிலத்தில் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை இணைந்து நோய் தொற்றுள்ள பறவைகளை அழித்து வருகின்றனர். அதன் விவரம் கேட்கப்பட்டு வருகிறது. கோவை, தேனி போன்ற கேரள மாநில எல்லையிலிருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுவதுடன், நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கிலாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, 3 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தை தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்த நடைமுறை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவரங்குளம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவரங்குளம்:
திருவரங்குளம் அருகே உள்ள கொத்தக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த அம்மையபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதன் காரணமாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை, அப்பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொத்தக்கோட்டை கிராமமக்கள் தெட்சிணாபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி அமைக்கப்பட்ட அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார்.
புதிய இருதய சிறப்பு சிகிச்சை பிரிவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் உள்ளன. தற்போது ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கேத்லாப் சிகிச்சைப் பிரிவு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம், மாரடைப்பு, ரத்தக்குழாயில் அடைப்பை எளிதாக கண்டறிய முடியும். மேலும், ரத்தக்குழாய் அடைப்புக்கு பலூன் சிகிச்சை, இருதய வால்வு சுருக்க நோய்களுக்கு பலூன் சிகிச்சை, இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளை அடைக்கும் சிகிச்சை, செயற்கை இருதய துடிப்பு கருவி பொருத்துதல், இருதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் அழுத்தங்களை கண்டறிதல், ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
ஏழை, எளிய மக்களுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் இச்சிகிச்சைகள் அளிக்கப்படும். இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இங்கேயே சிகிச்சை அளிக்கப்படுவதால் பிற மாவட்டங்களுக்கு செல்ல அவசியம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திக் தொண்டைமான், மாவட்ட வேளாண் விற்பனை குழுத்தலைவர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.பூவதி வரவேற்றார்.
வடகாடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்றவர் மீது போலீசார் வழக்கு பவிவு செய்தனர்.
வடகாடு:
வடகாடு பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று வடகாடு போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக சந்திரசேகரன் (வயது 38) என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளது.
வடகாடு:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கரும்பு, தேங்காய், பலாக்காய், வாழை பழம் உள்ளிட்ட பொங்கல் பண்டிகை சம்பந்தமான பொருட்கள் விற்பனை புதுக்கோட்டை மாவட்டத்தில் களை கட்ட தொடங்கியுள்ளது.
வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன. கஜா புயலில் இருந்து தப்பித்த தென்னை மரங்கள் தற்போது, காய்த்து பருவத்துக்கு வந்துள்ளன. பொங்கல் பண்டிகைைய யொட்டி இந்த காய்களை பறித்து அதனை விற்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகாடு, மாங்காடு, புளிச்சங்காடு கைகாட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் அறுவடை செய்யப்பட்டு பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த பகுதியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு மதுரை, திருச்சி, திண்டுக்கல், நாகப்பட்டினம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலாப்பழம் விற்பனையும் களைகட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகை கிராம பகுதிகளில் 3 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். 2-வது நாளான மாட்டு பொங்கல் அன்று ஒவ்வொரு ஊரிலும் பொதுவான இடத்தில் கூடி பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு பூஜை செய்வர். இதற்காக வீடுகளிலிருந்து பெண்கள் புறப்படும்போது. பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களையும், பூஜை சாமான்களையும் ஒரு மூங்கில் கூடையில் வைத்து தலையில் சுமந்து ஊர்வலமாக பொது திடலுக்கு செல்வர். அங்கு பொங்கல் வைத்து முறத்தில் படையல் இட்டு வழிபாடு நடைபெறும். இதற்காக கறம்பக்குடி வாரச்சந்தையில் மூங்கில் கூடை, முறம் உள்ளிட்ட விற்பனை அமோகமாக நடைபெற்றது. மூங்கில் கூடை ஜோடி ரூ.350-க்கும், முறம் ஜோடி ரூ.300-க்கும் விற்பனையானது. பெண்கள் ஆர்வமுடன் அதனை வாங்கி சென்றனர்.
வடகாடு, நெடுவாசல்மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அதனை வாங்க வியாபாரிகள் முன்பணம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஒரு சில பகுதியில் கரும்புகள் அறுவடை செய்யும் பணி தொடங்கியுள்ளன.

பணம் வைத்து சூதாடிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் கண்மாய் கரையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அரிமளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 10 பேரை பிடித்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கியது. பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.
புதுக்கோட்டை:
கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நாட்டில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வில் படிப்படியாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் திருச்சி-ராமேசுவரம் பயணிகள் ரெயில் சிறப்பு ரெயிலாக நேற்று முதல் சேவையை தொடங்கியது. இந்த ரெயிலானது எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி தற்போதைய நடைமுறைகளின் படி முன்பதிவு டிக்கெட் எடுத்த பயணிகள் மட்டும் இதில் பயணம் செய்ய முடியும்.
புதுக்கோட்டையில் இருந்து ராமேசுவரம், திருச்சிக்கு பயணிகள் யாரும் நேற்று அதிகம் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. இதனால் ரெயிலில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் புதுக்கோட்டைக்கு நேற்று மாலை 6.40 மணி அளவில் வந்தது. ரெயிலில் இருந்து 3 பயணிகள் மட்டுமே இறங்கினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு யாரும் ரெயிலில் ஏறவில்லை. ரெயிலில் பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன.
டிக்கெட் பரிசோதகர்கள் பணியில் இருந்தனர். டி.1 கோச்சில் மட்டும் பயணிகள் அதிகம் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் ரெயிலில் மொத்தம் 30 பயணிகள் பயணம் மேற்கொள்வதாக கூறினர். பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்ட போது இந்த ரெயிலுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எக்ஸ்பிரசாக மாற்றம் செய்யப்பட்ட பின் பயணிகள் கூட்டம் குறைந்துள்ளது. மேலும் இந்த ரெயிலில் முன்பதிவு டிக்கெட் மட்டுமே இருப்பதால் பயணிகள் இதில் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.
தற்போது தான் சேவை தொடங்கிய நிலையில் படிப்படியாக பயணிகள் கூட்டம் அதிகம் வரலாம் என ரெயில்வே துறையினர் எதிர்பார்க்கினர். இந்த ரெயிலில் பாசஞ்சர் ரெயில் கட்டணத்தை விட தற்போது கட்டணம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுவாசலில் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையத்தால் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வடகாடு:
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு பகுதியில் அய்யனார் கோவில் திடல் அருகே நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையம் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொள்முதல் நிலையத்தை நம்பி அறுவடை செய்த விவசாயிகள் நெல் மணிகளை இப்பகுதியில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். அதன்மீது தார்பாய்கள் மற்றும் சாக்குகளை கொண்டு மூடி வைத்துள்ளனர்.
தற்போது வடகாடு பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லுக்குள் தண்ணீர் புகுந்து நனைந்து விட்டது. இதனால், கவலை அடைந்த விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு தினமும் வந்து வெயில் அடிக்கும் நேரங்களில் நெல்லை உலர வைப்பதும், பின்னர் மாலையில் மூடி வைப்பதுமாக உள்ளனர்.
மேலும், மழையில் அதிகளவு நனைந்த நெல்மணிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி சிங்காரவேல் கூறுகையில், தனது வயலில் அறுவடை செய்த சுமார் 60 மூட்டைகள் வரக்கூடிய நெல்லை இங்கு கொண்டு வந்தேன். ஆனால், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் நெல்லை உலர வைக்கவும் முடியவில்லை. இதனால், நெல்மணிகள் அழுகியும், முளைத்தும் வருகிறது. எனவே, தாமதம் செய்யாமல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் நெல்லுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும்வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடகாடு:
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்தும்வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு கடைவீதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் ஆலங்குடி இணைச்செயலாளர் கோபி தலைமை தாங்கினார். இதில், மாநில உழவர் பாசறை செயலாளர் சிவராமன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் துருவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில் பிரகதீஸ்வரன் நன்றி கூறினார். இதில் அக்கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். இந்தநிலையில், ஆர்ப்பாட்டம் நடத்திய கோபி உள்பட 69 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.