search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவரங்குளம்"

    திருவரங்குளம் பகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் தி.மு.க.வினர் ஆய்வு செய்தனர்.

    திருவரங்குளம்:

    திருவரங்குளம் பகுதியில் உள்ள வேப்பங்குடி, திருவரங்குளம், மாங்கனாம் பட்டி, கைக் குறிச்சி, வல்லத்திரா கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம் பற்றிய ஆய்வுப் பணி நடை பெற்றது.

    இந்த பணியில் திமுக தலைமை கழக அறிவிப்பின் படி ஆலங்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் தலைமையில், திமுக மேலிட பார்வையாளர் மாவட்ட துணைச் செயலாளர் பழனியப்பன், கைலாசம், தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் தங்கமணி, துணைச் செயலாளர்கள் மெய்யர், விஜயன், ஊராட்சி செயலாளர் முருகன், கே.வி. கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன், திருவரங்குளம் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், திருவரங்குளம் தி.மு.க கிளைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்பட தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிதாக வாக்காளர் சேர்த்தல், நீக்கல்கள் பற்றி ஆய்வு செய்தனர்.

    ×