என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • தடை செய்ய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்துவதால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
    • இதில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளவில்லை.

    புதுக்கோட்டை:

    அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் சர்ச் கட்டுமானத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய கலெக்டரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் புதூர் அக்கரஹாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் தாக்கல் செய்த மனுவில், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட சர்வே எண்ணில், சர்ச் கட்ட சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை. தடை செய்ய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்துவதால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சர்ச் கட்டினால், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

    சர்ச் கட்டுமானத்திற்கு மாவட்ட கலெக்டர் தடையில்லா சான்று வழங்கியுள்ளார். இதில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கலெக்டர் வழங்கிய தடையில்லா சான்றிற்கு தடை விதிக்க வேண்டும். சர்ச் கட்டுமானத்திற்கு கட்டட அனுமதி வழங்கக் கூடாது என அரிமளம் பேரூராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார். நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு இடைகால தடை விதிக்கப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றார். வழக்கு விசாரனை ஜுலை 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • பொதுநிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு உரிய சரிபார்ப்பு மற்றும் விமர்சன மதிப்பீட்டிற்குப் பின்னரே அனுமதி வழங்குதல் வேண்டும்.
    • பூர்வீக மரங்களை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் நிதியளிப்பதற்காக ஏற்கனவே உள்ள நிதியினை மீண்டும் பயன்படுத்துதல் வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுஇடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரங்கள் அகற்றுதல் மற்றும் மரங்கள் நடுதல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான பசுமைக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது-

    மாவட்ட பசுமைக் குழுவானது பொதுநிலங்கள் மற்றும் பொதுஇடங்களில் உள்ள அனைத்து மரங்களையும் வரைபடமாக்குதல் மற்றும் பொதுநிலங்களில் உள்ள அனைத்து, விழுந்த மரங்களின் விரிவான பட்டியலை தயார் செய்து, பட்டியலை அவ்வப்போது புதுப்பித்தல் குறித்தும், பொதுநிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு உரிய சரிபார்ப்பு மற்றும் விமர்சன மதிப்பீட்டிற்குப் பின்னரே அனுமதி வழங்குதல் வேண்டும்.

    மாவட்ட பசுமைக் குழு வருடாந்திரப் பொறுப்பை ஏற்கும் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து அனைத்து பொதுநிலங்களிலும் மரங்களை நடுதல் மற்றும் அரசின் வழிகாட்டுதலின்கீழ், பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து செயல்படுதல் வேண்டும்.

    போதுமான நாற்றுகள், செடிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பூர்வீக மரங்களின் நர்சரிகளை அமைப்பதற்காக சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் போன்றவற்றை அணிதிரட்டுவதற்கு மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மரம் நடுவதற்கான வருடாந்திர திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.

    சுற்றுச்சூழலுக்கு மட்டும் நன்மை பயக்கும் பூர்வீக இனங்கள் மட்டுமே நடப்படுவதை குழு உறுதி செய்யவும், மாவட்ட பசுமைக் குழு கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியைத் திரட்டுதல், பூர்வீக மரங்களை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் நிதியளிப்பதற்காக ஏற்கனவே உள்ள நிதியினை மீண்டும் பயன்படுத்துதல் வேண்டும்.

    மாவட்ட பசுமைக் குழு, மாநில பசுமைக் குழுவால் ஒப்படைக்கப்பட்ட பிறகு தொடர்புடைய செயல்பாடுகளை மேற்கொள்ளும் மாவட்ட வன அலுவலர் (உறுப்பினர்-செயலாளர்) குழுவின் தலைவர் முன் அவ்வப்போது முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

    • லோகநாதன் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது
    • கடந்த 27-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை இலுப்பூர் அருகே வலையப்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் லோகநாதன் (வயது 22). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கடந்த 27-ந் தேதி புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ரமா பிரியாவிடம், சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து டாக்டர் புகார் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து ரமா பிரியா கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த லோகநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பள்ளிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் ரகசிய கிடைத்தது
    • கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கீரமங்கலம், கொத்தமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கோவில், பள்ளிகளுக்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் ரகசிய கிடைத்தது.

    தகவலின் ேபரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் கொத்தமங்கலத்தில் உள்ள ராஜாக்கண்ணு (வயது 48) என்பவரின் கடையில் சோதனை செய்தனர்.

    அப்போது,கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜாக்கண்ணுவை கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • உதடு, உள் அண்ணப் பிளவு என்பது நோய் அல்ல முற்றிலும் குணப்படுத்தக் கூடியது.
    • ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்து முறையான அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மற்றவர்களைப் போல் இயல்பான முகத்தைப் பெற வாய்ப்புள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மீனாட்சி மிஷன் மருத்துவமனை மதுரை மற்றும் புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாமானது டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் சலீம் முன்னிலையில், மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் ராஜா முகமது தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பெனிட்டா பெக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உதடு, உள் அண்ணப் பிளவு என்பது நோய் அல்ல முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்து முறையான அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மற்றவர்களைப் போல் இயல்பான முகத்தைப் பெற வாய்ப்புள்ளது என்று கூறினார். மேலும் தி ஸ்மைல் டிரெய்ன் உதடு/உள் அண்ணப்பிளவு சீரமைப்பு மண்டல மையம் மூலமாக 14000-க்கும் மேற்பட்ட இலவச அறுவை சிகிச்சைகள் சிறந்த முறையில் செய்யப்பட்டது என எடுத்துக் கூறினார்.

    இதில் சமூக ஆர்வலர் ஸ்டெல்லா புஷ்பராணி கலந்துக் கொண்டார். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அறுவை சிகிச்சைப் பற்றியும், தங்குமிடம், மருந்து மற்றும் பிற சந்தேகங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர்சந்திரசேகர் பதிலளித்தார்.

    முகாமில் உதடு அண்ணம் பிளவு பட்ட குழந்தைகள் மற்றும் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மறு ஆய்வு செய்து கொண்டு பயன் பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் செய்திருந்தார். மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் பஷீர் அகமது இம்முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

    • மாணவர் கோபி மற்றும் பள்ளி முதல்வர் மரியபுஷ்பம் உள்ளிட்ட ஆசிரியர்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி வாழ்த்தினார்
    • பிளஸ்2 பொதுத்தேர்வில் 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர் கோபியையும், பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பத்தின் கல்விப்பணியையும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி பூங்கொத்து வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் (மாநில அளவில் இரண்டாமிடம்) பெற்ற பொன்னமராவதி அமல அண்ணை மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் கோபி மற்றும் பள்ளி முதல்வர் மரியபுஷ்பம் உள்ளிட்ட ஆசிரியர்களை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி வாழ்த்தினார்.

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்வில் பிளஸ்2 பொதுத்தேர்வில் 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர் கோபியையும், பள்ளியின் முதல்வர் மரியபுஷ்பத்தின் கல்விப்பணியையும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டி பூங்கொத்து வழங்கினார்.

    இதில் மாணவர் கோபியின் தாயார் அன்பழகி, மற்றும் ஆசிரியர்கள் ஆர்.பிரின்ஸ்,செ.பாலமுரளி, கு.சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 % தேர்ச்சியை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

    • நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை,
    • பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றிகள் சோதனை பணிகள் நடைபெறுவதால் நாளை 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி மற்றும் பழைய கந்தர்வகோட்டை துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, மட்டங்கால், சுந்தம் பட்டி, நெப்புகை, வேம்பன் பட்டி,

    சிவன் தான் பட்டி வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

    இத்தகவலை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

    • சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக ரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
    • மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு 27 யூனிட் இரத்தம் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் விதமாக ரத்ததான முகாம் புதுக்கோட்டை பழைய அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை.முத்துராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

    ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராமு, குழந்தைகள் நல மருத்துவர் மகேஸ்வரி, மாவட்ட மனநல மருத்துவர் கார்த்திக் தெய்வநாயகம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர்.கிஷோர் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்ததான முகாமில் கலந்துகொண்டு 27 யூனிட் இரத்தம் சேகரித்தனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • ரகசிய தகவலின்பேரில் துவார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
    • அவரிடமிருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் குணமதிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் துவார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .

    அப்போது ஆலங்குடி அருகே உள்ள துவார் பேருந்து நிறுத்தத்தில் வெளிமாநில மது பாட்டில் களை கடத்தி வந்து விற்பனை செய்த ஆத்தாங்கரைவிடுதி சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 23) மது பாட்டில்களுடன் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலங்குடி புனித அற்புத மாதா உதவிபெறும் நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
    • வெற்றிபெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதாந்திரம் ரூ 1000 வீதம்அரசு வழங்குகிறது.

    புதுக்கோட்டை:

    2021-22 கல்வி ஆண்டில் மத்திய அரசு நடத்திய தேசிய வருவாய் வழி மற்றும் தேசிய திறனறி தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி புனித அற்புத மாதா உதவிபெறும் நடு நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 23 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக மாதாந்திரம் ரூ 1000 வீதம்அரசு வழங்குகிறது.

    புதுக்கோட்டை மாவட்ட அளவில் முதல் ஐந்து இடங்களையும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இச்சாதனை நிகழ்த்த காரணமாக உள்ள ஆசிரியப் பெருமக்களையும், மாணவர்களையும், பள்ளி நிர்வாகி ஆர்.கே.அடிகளார் மற்றும் தலைமை ஆசிரியர் சூசைராஜ் இருவரும் பாராட்டினர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்கினார்.
    • வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டு மனையும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்கினார்.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலையும் குறைந்தபட்சம் ரூபாய் 351 சம்பளம் வழங்க கோரியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டு மனையும் வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • இத்திட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகள், அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரண்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 1ம் வகுப்பு அரும்பு கற்றல் நிலையிலும், 2ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு கற்றல் நிலையிலும், 3ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு, மலர் கற்றல் நிலையிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் நிலையினை கண்டறிவதற்காக செயல் திட்டங்கள், வளறறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் பள்ளி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள், 3 வட்டார வளமைய பயிற்று–நர்கள், 6 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியும், 298 இடைநிலை ஆசிரிய–ர்களுக்கு மாவட்ட அளவி–லான கருத்தாளர்கள் பயிற்சியும், 1,965 இடைநிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்திட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகள், அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் கையேடு, மாணவர்களுக்கான அரும்பு, மொட்டு, மலர் குறித்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு குறித்த 1,55,410 புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    1ஆம் வகுப்பு அரும்பு கற்றல் நிலையிலும், 2ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு கற்றல் நிலையிலும், 3ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு, மலர் கற்றல் நிலையிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் நிலையினை கண்டறிவதற்காக செயல் திட்டங்கள், வளறறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் பள்ளி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் மாணவ, மாணவியர்களின் கற்றல் கற்பித்தல் திறன்கள் ஆரம்ப நிலையிலேயே சிறப்பான நிலையில் அமைந்து, அவர்களின் எதிர்கால கனவுகள் மெய்படும் வகையில் செயல்திட்டங்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×