என் மலர்
நீங்கள் தேடியது "Prohibition of church construction"
- தடை செய்ய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்துவதால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
- இதில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளவில்லை.
புதுக்கோட்டை:
அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட அக்ரஹாரம் பகுதியில் சர்ச் கட்டுமானத்திற்கு தடையில்லா சான்று வழங்கிய கலெக்டரின் உத்தரவிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் புதூர் அக்கரஹாரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் தாக்கல் செய்த மனுவில், அரிமளம் பேரூராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட சர்வே எண்ணில், சர்ச் கட்ட சம்பந்தப்பட்ட அதிகரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை. தடை செய்ய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வழிபாடு நடத்துவதால், மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. சர்ச் கட்டினால், மத நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
சர்ச் கட்டுமானத்திற்கு மாவட்ட கலெக்டர் தடையில்லா சான்று வழங்கியுள்ளார். இதில், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கலெக்டர் வழங்கிய தடையில்லா சான்றிற்கு தடை விதிக்க வேண்டும். சர்ச் கட்டுமானத்திற்கு கட்டட அனுமதி வழங்கக் கூடாது என அரிமளம் பேரூராட்சிக்கு உத்தரவிடவேண்டும் என மனுவில் கூறியிருந்தார். நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கு இடைகால தடை விதிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ, அரிமளம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்றார். வழக்கு விசாரனை ஜுலை 25க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.






