என் மலர்
நீங்கள் தேடியது "பசுமைக்குழுக் கூட்டம்"
- பொதுநிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு உரிய சரிபார்ப்பு மற்றும் விமர்சன மதிப்பீட்டிற்குப் பின்னரே அனுமதி வழங்குதல் வேண்டும்.
- பூர்வீக மரங்களை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் நிதியளிப்பதற்காக ஏற்கனவே உள்ள நிதியினை மீண்டும் பயன்படுத்துதல் வேண்டும்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுஇடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் மரங்கள் அகற்றுதல் மற்றும் மரங்கள் நடுதல் போன்ற நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான பசுமைக்குழுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது-
மாவட்ட பசுமைக் குழுவானது பொதுநிலங்கள் மற்றும் பொதுஇடங்களில் உள்ள அனைத்து மரங்களையும் வரைபடமாக்குதல் மற்றும் பொதுநிலங்களில் உள்ள அனைத்து, விழுந்த மரங்களின் விரிவான பட்டியலை தயார் செய்து, பட்டியலை அவ்வப்போது புதுப்பித்தல் குறித்தும், பொதுநிலங்கள் மற்றும் பொது இடங்களில் மரங்களை வெட்டுவதற்கு உரிய சரிபார்ப்பு மற்றும் விமர்சன மதிப்பீட்டிற்குப் பின்னரே அனுமதி வழங்குதல் வேண்டும்.
மாவட்ட பசுமைக் குழு வருடாந்திரப் பொறுப்பை ஏற்கும் அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து அனைத்து பொதுநிலங்களிலும் மரங்களை நடுதல் மற்றும் அரசின் வழிகாட்டுதலின்கீழ், பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து செயல்படுதல் வேண்டும்.
போதுமான நாற்றுகள், செடிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பூர்வீக மரங்களின் நர்சரிகளை அமைப்பதற்காக சுய உதவிக் குழுக்கள், விவசாயிகள் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள் போன்றவற்றை அணிதிரட்டுவதற்கு மாவட்ட பசுமைக் குழுவின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மரம் நடுவதற்கான வருடாந்திர திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு மட்டும் நன்மை பயக்கும் பூர்வீக இனங்கள் மட்டுமே நடப்படுவதை குழு உறுதி செய்யவும், மாவட்ட பசுமைக் குழு கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியைத் திரட்டுதல், பூர்வீக மரங்களை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் நிதியளிப்பதற்காக ஏற்கனவே உள்ள நிதியினை மீண்டும் பயன்படுத்துதல் வேண்டும்.
மாவட்ட பசுமைக் குழு, மாநில பசுமைக் குழுவால் ஒப்படைக்கப்பட்ட பிறகு தொடர்புடைய செயல்பாடுகளை மேற்கொள்ளும் மாவட்ட வன அலுவலர் (உறுப்பினர்-செயலாளர்) குழுவின் தலைவர் முன் அவ்வப்போது முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.






