என் மலர்
நீங்கள் தேடியது "கைது. arrested"
- ரகசிய தகவலின்பேரில் துவார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
- அவரிடமிருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
ஆலங்குடி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் குணமதிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் துவார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது ஆலங்குடி அருகே உள்ள துவார் பேருந்து நிறுத்தத்தில் வெளிமாநில மது பாட்டில் களை கடத்தி வந்து விற்பனை செய்த ஆத்தாங்கரைவிடுதி சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 23) மது பாட்டில்களுடன் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






