என் மலர்
புதுக்கோட்டை
- கிணற்றில் தவறி விழுந்த மரநாய் உயிருடன் மீட்க்கப்பட்டது
- அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காத்தானவிடுதி கிராமத்தில் சுற்றி திரிந்த மரநாய் ஒன்று மாரிக்கண்ணு என்பவரது 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதைப்பார்த்த கிராம மக்கள் உடனே ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அவர்கள் வந்து மரநாயை உயிருடன் மீட்டு, அதனை அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
- 988 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
- அமைச்சர் ரகுபதி வழங்கினார்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி மற்றும் திருமயம் ஒன்றியத்திற்குற்பட்ட அரசு பள்ளிகளில் 988 மாணவ, மாணவியர்க்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பொன்னமராவதி ஒன்றியம் காரையூர் மொகைதீன் காதர், சடையம்பட்டி, ஆலவயல், பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன், பொன்.புதுப்பட்டி மற்றும் திருமயம் ஒன்றியத்தில் லெம்பலக்குடி, திருமயம், பி.அழகாபுரி ஆகிய அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு , 988 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மஞ்சுளா, மணிமொழி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றியக்குழு தலைவர் சுதா, பேரூராட்சி தலைவர் சுந்தரி, வட்டாட்சியர் பிரகாஷ், தி.மு.க. ஒன்றியச்செயலர்கள் அடைக்கலமணி, நகரச்செயலர் அழகப்பன், வார்டு உறுப்பினர்கள் ராஜா, புவனேஸ்வரி காளிதாஸ் அழகப்பன், பள்ளி தலைமையாசிரியர்கள் நிர்மலா, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது
- அனைத்து வகையான நோய்களுக்கும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ராசியமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை பல்நோக்கு சேவை மையம் மற்றும் எழுதுவோம் இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் புற்று ேநாய் பரிசோதனை முகாம் பல்நோக்கு சேவை மையத்தின் இயக்குனர் யாகப்பா ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனைத்து வகையான புற்று நோய்களும் கண்டறிவதற்கான தீர்வுகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
- வீட்டில் தூங்கிய பெண்ணிடம் செயின் பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 கிராம் எடையுள்ள செயினை பறித்தனா்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரை சோ்ந்தவா் செல்லப்பா மகள் சூரியா. இவா் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தா். அப்போது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் சூா்யா கழுத்தில் அணிந்திருந்த 10 கிராம் எடையுள்ள செயினை பறித்தனா். இதைகண்ட சூா்யா கூச்சலிட்டாா். அதற்குள் செயினை பறித்த திருடா்கள் அங்கியிருந்து தப்பி ஓடி விட்டனா். இதுகுறித்து சூா்யா மழையூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து வழக்குபதிவு செய்த மழையூா் காவல் உதவி ஆய்வா ளா் ரவி, செயினை பறித்த திருடா்களை தேடிவருகிறாா்.
- கல்வி, விளையாட்டில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.
- விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி பேசும் போது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளிகளை தேடி வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த விலையில்லா மிதிவண்டிகள் மாணவ, மாணவியர்களின் படிப்பிற்கும் மற்றும் உடற்பயிற்சிக்கும் உறுதுணையாக அமைகிறது. எனவே மாணவ, மாணவியர்கள் அனைவரும் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என ேபசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்ய நாதன் பேசும் போது, தமிழ்நாடு முதலமைச்சர் எல்லாருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கும் அனைத்து நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனடிப்படையில் மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதன்படி இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8,430 மாணவர்களுக்கும், 9,324 மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. வை.முத்துராஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சு மிதமிழ்செல்வன், புதுக்கோட்டை நகர் மன்றத் தலைவர் திலகவதிசெந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் லியாகத்அலி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி இரண்டு நாட்களில் கோவில் வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவிழாவுக்கு அழைக்காததே கொலைக்கு காரணமா? என்று ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த பத்துவாக்கோட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த கோவிலில் திருவிழா நடைபெறவில்லை.
தற்போது நோய் கட்டுக்குள் வந்ததையடுத்து இந்த அண்டு திருவிழாவை விமரிசையாக நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
பல்வேறு சமூகத்தினர் வசித்து வரும் பத்துவாக்கோட்டை கிராமத்தில் மண்டகப்படி முறையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. அதே ஊரைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). விவசாய கூலித் தொழிலாளியான இவரும் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வந்தார்.
விழா நிகழ்ச்சிகள் மற்றும் சுவாமி புறப்பாடு போன்றவற்றிலும் பங்கேற்றார். இவரது உடன் பிறந்த அண்ணன் மகன் சசிக்குமார் (30). திருமணமாகாத இவரும் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் கணேசன் வெளியூர்களில் வசித்து வரும் தனது நெருங்கிய உறவினர்கள் பலரை திருவிழாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் உள்ளூரில் இருக்கும் அண்ணன் மகனான சசிக்குமாரை திருவிழாவுக்கு அழைக்கவில்லையாம். இதுபற்றி சசிக்குமார் பலரிடமும் கூறி புலம்பியுள்ளார். அத்துடன் தன்னை அழைக்காத சித்தப்பா கணேசன் மீது கடுமையான ஆத்திரமும் ஏற்பட்டது.
நேற்று இரவு குறிப்பிட்ட சமூகத்தாரின் மண்டகப்படி முடிந்து அனைவரும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் சுவாமியை கோவிலுக்குள் வைத்துவிட்டு புறப்பட்டனர். களைப்பு காரணமாக கணேசன் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த சசிக்குமார் என்னை ஏன் திருவிழாவுக்கு அழைக்கவில்லை என்று கூறி தகராறு செய்தார். நீ உள்ளூரில்தானே இருக்கிறாய் என்று கூறி அவரை சமாதானப்படுத்தினார்.
ஆனால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சசிக்குமார் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனை சராமாரியாக வெட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். நள்ளிரவு நேரம் என்பதால் இதுபற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரகுநாதபுரம் போலீசார் விரைந்து வந்தனர்.
பிணமாக கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவிழாவுக்கு அழைக்காததே கொலைக்கு காரணமா? என்று ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ரஜினி, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவான சசிக்குமாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி இரண்டு நாட்களில் கோவில் வளாகத்தில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆடுகள் திருடிய வாலிபர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 58 ஆடுகள் பறிமுதல்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கிளரிவயல் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 49). இவர் அதே பகுதியில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பட்டியில் இருந்து 21 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். பின்னர் இதுகுறித்து அவர் மீமிசல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், விசாரணை மேற்கொண்டு 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 58 ஆடுகள் பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
- லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- பணம் மற்றும் 31 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
புதுக்கோட்டை:
கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக புகார் வந்தது. அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், சிறப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மேற்பனைக்காடு கிராமத்தில் ஒரு கடையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த கீரமங்கலம் சுப்பையன் (வயது 68) என்பவரை பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.6 ஆயிரத்து 370 மற்றும் 31 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்து கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது
- அன்னதானமும் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி கிராமத்தில் பட்டவன் சுவாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அந்த கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் கணபதி ஓமம் லட்சுமி ஓமம் நவ கிரக ஓமம் பின்னர் யாக பூஜை நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதான விழா நடைபெற்றது. ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- வீட்டில் இருந்த 8 ஆடுகள் திருடப்பட்டது.
- இரண்டு வீடுகளில் நடந்த சம்பவம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள அரையப்பட்டி ஊராட்சி வண்ணியன் விடுதியில் வசிக்கும் பலர் ஆடு, மாடு வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் வண்ணியன்விடுதி உள்ள இருவரது வீட்டில் இருந்த 8 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். காணவில்லை. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை, சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், ஆறுமுகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது
- இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்றது
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்றது. ஆலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், காவல் உதவியாளர் ஆறுமுகம், வெண்ணவால்குடி, ஆலங்குடி, கல்லாலங்குடி, திருவரங்குளம், வம்பன், வேங்கிடகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- போலீசில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்
- பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையை சேர்ந்தவர் மணி மகள் கார்த்திகா (வயது 19). பி.ஏ. பட்டதாரியான இவர் ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டி விடுதி கீழப்பட்டியைச் சேர்ந்த ராஜா (வயது 37) என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி யாருக்கும் தெரியாமல் மதுரை அழகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது மகள் கார்த்திகாவை காணவில்லை என்று அவரது தந்தை மணி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதனை பெற்றுக்கொண்ட ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, கார்த்திகாவை தேடி வந்தார்.
இந்நிலையில் கார்த்திகாவுடன் அவரை திருமணம் செய்துகொண்ட ராஜா ஆலங்குடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். உடனே ஆலங்குடி போலீசார் இருவீட்டாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர்.
விரைந்து வந்த இரு வீட்டார்களும் தங்களது மகளும், மகனும் பிரிந்து வரவில்லை என்றால் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களுக்கு பிள்ளைகள் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் போலீசார் காதல் ஜோடிகள் இருவருக்கும் சட்டத்திற்கு உட்பட்டு வயது மூப்பை காரணம் காட்டி திருமணம் செய்து கொண்டதாக கூறி காதல் ஜோடியை கைகோர்த்து வழி அனுப்பி வைத்தனர்.






