என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் தவறி விழுந்த மரநாய் உயிருடன் மீட்பு
    X

    கிணற்றில் தவறி விழுந்த மரநாய் உயிருடன் மீட்பு

    • கிணற்றில் தவறி விழுந்த மரநாய் உயிருடன் மீட்க்கப்பட்டது
    • அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காத்தானவிடுதி கிராமத்தில் சுற்றி திரிந்த மரநாய் ஒன்று மாரிக்கண்ணு என்பவரது 50 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதைப்பார்த்த கிராம மக்கள் உடனே ஆலங்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அவர்கள் வந்து மரநாயை உயிருடன் மீட்டு, அதனை அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.

    Next Story
    ×