என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
    X

    விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்

    • விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம் நடந்தது
    • இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் நடைபெற்றது. ஆலங்குடியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட்ட உள்ளது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், காவல் உதவியாளர் ஆறுமுகம், வெண்ணவால்குடி, ஆலங்குடி, கல்லாலங்குடி, திருவரங்குளம், வம்பன், வேங்கிடகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×