என் மலர்
புதுக்கோட்டை
- ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கட்சிப்பட்டி, வெள்ளாள விடுதி சுங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது
புதுக்கோட்டை :
கந்தர்வக்கோட்டை அடுத்த ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாலை சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி,
கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கட்சிப்பட்டி, வெள்ளாள விடுதி சுங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
- தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்
- மனவிரக்தியில் விபரீத முடிவு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட் டம், கந்தர்வகோட்டை தாலுகா அண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகள் ஜெனிதா. இவர் கறம்பக்குடி அருகே உள்ள உறவினர் வீட்டில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்தார். பின்னர் துணைத் தேர்வு எழுதினார். அதில் ஒரு பாடத்தில் தேர்ச்சிபெறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ெஜனிதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுகொண்டார்.
இதை கண்ட அவரது உறவினர்கள், அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு ஜெனிதாவை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வந்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
- இலவவச சைக்கில் வழங்கும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றியங்களில் 1,313 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில்கொண்டு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்றுவர விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி பள்ளிக்கு சென்று வருவதால் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. இதுபோன்ற தமிழக அரசின் நலத்திட்டங்கள் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி ஆர்வத்தினை தூண்டுவது மட்டுமல்லாமல், கல்வியில் இடைநிற்றலையும் தவிர்க்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
- முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர் ெசய்யப்பட்டனர்.
- ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில்கை வரிசை காட்டியவர்கள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல் நிலையம் அருகே உள்ள ஆவுடையாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 66). இவர் பால்வளத் துறையில் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு ஓய்வு பெற்றுள்ளார். மனைவி அன்னம் மருமகள் ரமா பிரபா ஆகியோருடன் இருந்தார்.
இந் நிலையில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் முகமுடி அணிந்திருந்த நிலையில் வீட்டில் இருந்த மூன்று நபர்களின் வாயையும் கட்டிவிட்டு பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி, 13 சவரன் தங்க நகைகளையும் பீரோவில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு மொபைல் போன்களையும் கொள்ளையடித்து சென்றுள் ளனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வல்லத்திராகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை , அறந்தாங்கி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன் னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொ ண்டதில், அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் லட்சுமி நா ராயணன் என்பதும் அவர்கள் ஆவுடையாபட்டியில் நடைபெற்ற கொ ள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவ ந்தது.
இதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆவுடையாபட்டி கொள்ளைச் சம்பவத்தில் இந்த இருவர் உள்பட ஆசா த்பாட்ஷா, மணிகண்டன், ராஜலிங்கம், ரபிக், பழனி, சபரி, கண்ணன், கோபி உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்டதும், அந்த பத்து பேரில் ரபிக் மற்றும் ராஜலிங்கம் உள்ளிட்ட இருவர் பழனியில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து வல்லத்திராகோட்டை காவல்துறையினர் ரஞ்சித் லட்சுமி நாராயணன் ஆசாத் பாட்ஷா மணிகண்டன் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ஏழு சவரன் தங்க நகை, இர ண்டு இருசக்கர வாகனங்கள், நான்கு பட்டாகத்திகள் மற்றும் இரண் டு செல்போன்களையும் பறிமுதல் செய்த நிலையில் மேலும் இந்த கொள்ளை வழக்கில் இருவர் மற்றொரு திருட்டு வழக்கில் சிறையில் உள்ள நிலையில் மீதமுள்ள நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.
புதுக்கோட்டை:
அறந்தாங்கி தாலுகா வல்லவாரி கிராமத்தில் அமைந்து அருள்பாளித்து வரும் ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறந்த யாகசாலை அமைத்து கடந்த 22-ந் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 2 நாட்களாக மூன்றுகால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து பாலசுப்பிரமணிய குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியைச்சு ற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஸ்ரீ சித்திவிநாயகர் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- 60 ஆடுகளை வேனில் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பு
புதுக்கோட்டை:
கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு போயின. இதுகுறித்து கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.
இதேபோல் ஆலங்குடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர் ஆடு திருட்டு நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று கறம்பக்குடி சாலையில் வேகமாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆடுகள் கடத்தி வரப்பட்டதும் அந்த ஆடுகள் அனைத் தும் கறம்பக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட ஆடுகள் எனவும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த சரக்கு வேன் மற்றும் 60 ஆடுகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக செல்வராஜ் (வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவிய ல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் அறிந்த ஆடு களை பறிகொடுத்தோர் கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு திர ண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்போலீசார் புகார் மற்றும் விசாரணையின் அடிப்படையில் ஆடுகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
- தீ விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது
- வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவிக்கையில்,
வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப நல உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகையானது கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனிடையே, கடந்த மே 5-ஆம் தேதி திருச்சியில் நடந்த தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் பேசிய முதல்வர், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களது குடும்பத்துக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தால் இப்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப நல உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.
இதன்படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப நல உதவித்தொகை உயர்த்தி வழங்கி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண்டாவது உறுப்பினராக இருக்க வேண்டும். மதிப்பு கூட்டு வரி அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் பதிவு பெற்றிருப்பின் முறையாக மாதாந்திர ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறெந்த நல வாரியத்திலும் பதிவு பெற்று நல உதவித்திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது. உறுப்பினரின் மரணம் தற்கொலையாக இருக்கக் கூடாது.
மேலும் வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்கு தீ விபத்துகளால் பாதிக்கப்படும் நேர்வில் வழங்கப்படும் உடனடி இழப்பீட்டுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.
நிபந்தனைகள், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு செய்திருக்க வேண்டும். வணிகர் தீ விபத்து குறித்து முறையாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இருந்து உரிய சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறெந்த நல் வாரியத்திலும் பதிவு செய்து இழப்பீடு தொகை எதுவும் பெற்றிருக்கக் கூடாது. ஓராண்டு உறுப்பினராக இருக்க வேண்டும், உரிய ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- ஆசிரியையிடம் 3 பவுன் சங்கிலி பறித்து சென்றனர்
- பணி முடித்து வீட்டிற்கு வரும் வழியில்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டைச்சேர்ந்தவர் புஸ்பராஜ் (கிராம நிர்வாக அலுவலர்). இவரது மனைவி மேரி (வயது35). கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் தற்போது, புளிச்சங்காடு கைகாட்டியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மேரி பணி முடிந்து ஸ்கூட்டரில் புளிச்சங்காடு கைகா ட்டிக்கு சென்றுள்ளார். கறம்பக்காடு பிரிவு சாலை அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 மர்மநபர்கள் மேரி அணிந்திருந்த 3 பவுன் சங் கிலியை பறித்துச்சென்றனர். இதுகுறித்து கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- எஸ்.டி.பி.ஐ.கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது
- சாலை வசதி கோரி நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார் டுகள் உள்ளன. இதில் 11-வது வார்டு புளியஞ்சோலை பகுதியில் கு ண்டும் குழியுமான சாலையால் மழைநீர் தேங்கி செல்வதற்கு வழி இல்லாமல் அவதியுற்று வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக சாலை வசதி அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் பேரூராட்சியினரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், பேரூராட்சி நிர் வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த எஸ்டிபிஐ கட்சியினர் நகர தலைவர் ரஹ்மத்துல்லா தலைமையில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்ட ம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேரூராட்சி தலைவர் முருகேசன் பே ச்சு வார்த்தை நடத்தி சாலை வசதி அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியின் அடிப்படையில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பம் வழங்கும் முகாம் நடைபெற்றது
- தேசிய அடையாள அட்டை ெபறுவதற்கு
புதுக்கோட்டை:
மாற்றுத்தி றனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த மத்திய அரசால் வழங்கும் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பம் பெரும் முகாம் பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவ குழுவின் மூலமாக மாற்றுத்திறனாளிகள் கண்டறிந்து, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏற்கனவே விண்ணப்பித்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை மாவட்ட மாற்றுத்திறனாளிநலத்துறை அலுவலர் உலகநாதன், பொன்னமராவதி வட்டாட்சியர் பிரகாஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பழனிச்சாமி உள்ளிட்டோர் வழங்கினர்.
இதில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தனர்.
- அரசு மருத்துவர் வீட்டில் கொள்ளை நடந்துள்ளது
- வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றுள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர்கள் ரமேஷ் (வயது39), மாதவி தம்பதியர்கள், மனைவி மாதவி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். ரமேஷ் பேருந்து நிலையம் பின்புறம் மொபைல் கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு ரமேஷ் மனைவியை மருத்துவமனையில் விட்டுவிட்டு, கடைக்கு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சாப்பாட்டிற்காக வீட்டிற்கு சென்று பார்க்கையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது.
- தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக செல்கிறது
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நாவல் ஏரி சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.நாவல் ஏரியின் பாசன பரப்பளவு சுமார் 300 ஏக்கர் ஆகும்.
இந்த நிலையில் நாவல் ஏரிக்கு தாழை வாரியிலிருந்து மழை நீர் வரும் வரத்து வாரி கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் வாய்க்கால் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது. தற்சமயம் பெய்யும் மழையால் மழை நீர் பாசன ஏரிக்கு வராமல் வீணாக தாழைவாரியில் செல்கிறது.இதனால் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே உடனடியாக கோவிலூர் நாவல் ஏரியின் வரத்து வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி விவசாயிகளின் துயர் துடைக்க விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






