search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீ விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்வு
    X

    தீ விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்வு

    • தீ விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டது
    • வணிகர் நல வாரிய உறுப்பினர்களுக்கு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவிக்கையில்,

    வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப நல உதவித்தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகையானது கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டது. இதனிடையே, கடந்த மே 5-ஆம் தேதி திருச்சியில் நடந்த தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் பேசிய முதல்வர், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களது குடும்பத்துக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தால் இப்போது வழங்கப்பட்டு வரும் குடும்ப நல உதவித்தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

    இதன்படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு குடும்ப நல உதவித்தொகை உயர்த்தி வழங்கி அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நிபந்தனைகள், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண்டாவது உறுப்பினராக இருக்க வேண்டும். மதிப்பு கூட்டு வரி அல்லது சரக்குகள் மற்றும் சேவைகள் வரியில் பதிவு பெற்றிருப்பின் முறையாக மாதாந்திர ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறெந்த நல வாரியத்திலும் பதிவு பெற்று நல உதவித்திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது. உறுப்பினரின் மரணம் தற்கொலையாக இருக்கக் கூடாது.

    மேலும் வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ள வணிகர்களுக்கு தீ விபத்துகளால் பாதிக்கப்படும் நேர்வில் வழங்கப்படும் உடனடி இழப்பீட்டுத் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது.

    நிபந்தனைகள், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராகப் பதிவு செய்திருக்க வேண்டும். வணிகர் தீ விபத்து குறித்து முறையாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் இருந்து உரிய சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறெந்த நல் வாரியத்திலும் பதிவு செய்து இழப்பீடு தொகை எதுவும் பெற்றிருக்கக் கூடாது. ஓராண்டு உறுப்பினராக இருக்க வேண்டும், உரிய ஆவணங்களை தாக்கல் செய்திருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×