என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது
    • ஆலங்குடி வட்டாட்சியர் வழங்கினார்

    புதுக்கோட்டை:

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    நடைபெற்றது ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, தமிழ்நாடு அரசு நல வாரிய உறுப்பினர் தங்கம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.

    முகாமில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மாநில சங்கத்தி ன் மாவட்ட துணைச்செயலாளர் பங்கராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் யோகேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் பாலாகோபாலன், எலும்பு முறிவு மருத்துவர் உமா மகேஸ்வரன், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மருத்துவர் செந்ல்குமார், சிவக்குமார், பாஸ்கரன், கோவிந்தசாமி, லூயிஸ்மேரி மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • காரில் வைத்திருந்த 17 பவுன் நகைகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • தனது ஊருக்கு சென்று கொண்டு இருந்தார்

    புதுக்கோட்டை:

    திருமயம் அருகே உள்ள பிலாக் குடிப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மனைவி அஞ்சலி (வயது 52). இவர் அந்தமானில் உள்ள கொழுந்தன் கணேசனின் வீட்டுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் தனது ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். காரை அவரது மகன் வெங்கடேசன் ஓட்டி வந்தார். காருக்குள் கணேசன் மகள் கார்த்திகா, மகன் கவி ஆகியோர் இருந்தனர். கீரனூர் புறவழிச்சாலையில் வரும்போது ஒரு ஓட்டல் முன்பு காரை நிறுத்திவிட்டு கார் கண்ணாடிகளை மூடாமல் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு திரும்பி வந்தனர். அப்போது காருக்குள் இருந்த பேக் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 17 பவுன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீரனூர் சப்- இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். பின்னர் ஓட்டல் ஊழியர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையில் அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆசாமிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகைகளை திருடி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க அனுமதியில்லை என்று கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
    • சதுர்த்தி விழா முன்னேற்பாடு கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்துசட்டம், ஒழுங்கு பராமரிப்பு தொடர்பாக முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்விழாவிற்காக தகுந்த முன்அனுமதியை விழா குழுவினர் பெற வேண்டும். விழா ஒருங்கிணைப்பாளர்கள் விநாயகர் சிலை அமைப்பதற்கு நில உரிமையாளர்கள், காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரதுறையிடம் தடையின்மை சான்றுகளை பெற்று உரிய அனுமதியினை வருவாய்த்துறையிடம் பெற வேண்டும். சிலையானது தூய களிமண்ணால் தயாரிக்க வேண்டும்.

    தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளின்படி செயல்பட வேண்டும். நீரில் கரையக்கூடிய நச்சு இல்லாத இயற்கை சாயங்கள் பூசப்பட்ட சிலைகளை தயாரிக்க வேண்டும். சிலை அமைத்து வழிபாடு செய்யும் இடம் மற்றும் அதனை சுற்றி தேவையான முதலுதவிப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பிடிக்காத பொருட்கள் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    கூம்பு வடிவிலான ஒலி பெருக்கியை பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்கு மாற்றாக பெட்டி வடிவிலான ஒலி பெருக்கியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். விழா ஒருங்கிணைப்பாளர்கள் 2 தன்னார்வலர்களை நியமித்து சிலையை பாதுகாக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மற்ற மதத்தினரை பாதிக்கும், துன்புறுத்தும் வகையில் சத்தமாக கோஷங்களை எழுப்ப அனுமதிக்கக் கூடாது.

    காவல்துறையால் பரிந்துரைக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சிலையை வாகனங்களில் கொண்டு சென்று கரைக்க வேண்டும். அவ்வாறு செல்லும்போது பட்டாசு வெடிபொருட்களை வெடிக்க அனுமதி கிடையாது. எனவே விழாக் குழுவினர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான திறன்மேம்பாட்டு கருத்தர ங்கம் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் நவள்ளிநாயகி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் மு.ராஜா, அறிவியல் இயக்க நிர்வாகிகள் கருப்பையா, தமிழரசன் உள்ளிட்டோர் பேசினர். மேலும், தனித்திற மைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகள் பாராப்பட்டனர். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

    • சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது
    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள வெள்ளையாண்டிபட்டி சிவபுரம் மூகாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேக விழா மற்றும் திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கணபதிஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அமாவாசை சிறப்பு யாகபூஜைகள் சிவசித்தர் முன்னிலையில் நடைபெற்றது.தொடர்ந்து பகவதி அம்மன், மூகாம்பிரை சமேத சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் க.ராமர் செய்திருந்தார்.

    • விற்பனை பொருட்களையும் அள்ளிச் சென்றனர்
    • 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.47 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி, புதுக்கோட்டை சாலையில் கொப்பனாபட்டி அருகே ரெட்டியபட்டி ஊரார்களுக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை, தேநீர் கடை என 8 கடைகள் உள்ளது. கடை உரிமையாளர்கள் இரவு கடையை மூடிவிட்டு காலையில் வந்து கடையை திறக்க வந்தபோது வணிக வளாகத்தில் அடுத்தடுத்த உள்ள மூன்று கடைகளின் பூட்டுகள் உடைக்கப்ப ட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    கடையை திறந்து பார்த்தபோது சு.ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையின் பூட்டினை உடைத்து அங்கு கொள்முதலுககாக வைக்கப்பட்டிருந்த ரூ 1.30 லட்சம் ரொக்கம் மற்றும் 6 கிராம் தோடும்,

    செந்தில் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில் ரூ 10 ஆயிரம், சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் ரூ 7 ஆயிரம் மற்றும் குடைகள் 15 என மொத்தம் ரூ 1.47 லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் வையாபுரியில் உள்ள வணிகவளாகத்தில் பூட்டினை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்த கடையின் உரிமையாளர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • கறம்பக்குடி கிளை நூலகத்திற்கு ரூ.20 லட்சத்தில் சொந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.
    • எம்.எல்.ஏ. கட்ட அடிக்கல் நாட்டினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கிளை நூலகத்திற்கு ெசாந்த கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா எம்.எல்.ஏ. சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன், திராவிட முன்னேற்றக் கழக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றி ய செயலாளர் வீரமுத்து, செயற்குழு உறுப்பினர் அன்பழகன், கறம்பக்குடி பேரூராட்சியின் 15வது வார்டு உறுப்பினர்கள் ஞானசேகர், பிரபு, ராஜா, நியாஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலார் தினேஷ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் மனோகர், கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பஞ்சவர்ணம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தி ன் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், கறம்பக்குடி ரோட்டரி சங்கம் எவரெஸ்ட் சுரேஷ், நூலகர் அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவ லர் மற்றும் ஊழியர்கள், வாசகர் வட்ட நண்பர்கள், பொதுமக்கள், ஆ சிரியர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

    விழாவில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக மாவட்ட இணைச் செயலாளர் சிவானந்தம் புத்தகம் நினைவுப் பரிசாக வழங் கினார்.

    • லாரியில் ஏற்றி வந்த தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்து நாசமானது
    • ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாப்பான்விடுதி யை சேர்ந்தவர் தங்கசாமி மகன் ரெங்கசாமி (வயது 58) இவர் பாச்சிக் கோட்டையில் இருந்து தனது லாரியில், தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு மறவம்பட்டியில் உள்ள மில்லில் இறக்குவதற்காக சென்று கொண்டிருந்தார்.

    லாரி படேல் நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்ற மின் வயரில் தேங்காய் நார் உரசியது. இதில் தேங்காய் நார் தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அலறி அடித்து ஆலங்குடி தீயணைப்பு துறை, ஆலங்குடி போலீஸ் மற்றும் மின்சாரதுறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணகுமார் தலைமையிலான வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் தேங்காய் நார் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியின் சில பகுதியும் முற்றிலும் எரிந்து நாசமானது. சேதாரமடைந்த லாரியின் மதிப்பு ரூ.4 லட்சம் என்றும் தேங்காய் நார் ரூ.1 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழுவினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண் டு வந்தனர். மேலும் லாரி முற்றுலும் எரிந்து நாசமானது . லாரியின் மதிப்பு 4,லட்சமும் தேங்காய் நார் மதிப்பு சுமார் 1 -லட்சம் இருக்கும் என்று மதிப்பீட்டு கூறப்படுகிறது.

    • தனிநபர்கள் ஆக்கிரமித்த அரசு இடம் மீட்பு
    • பொதுமக்கள் புகாரால் நடவடிக்கை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி நம்பம்பட்டியில் உள்ள அரசு இடத்தை, அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் ஆக்ரமிப்பு செய்து கொட்டாகை அமைந்திருந்தனர். இதனை மீட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.

    அதன்படி கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி தலைமையில், மழையூர் வருவாய் ஆய்வாளர் அன்னக்கொடி, மாங்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் லலிதாகுமாரி, வருவாய்த்துறை சசிகுமார், துணைதாசில்தார், சர்வேயர், வருவாய் துறையினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கு ஊன்றப்பட்டு இருந்த கல் முள் வேலிகளையும் அப்புறப்படுத்தினர்.

    மேலும் அந்த இடத்தில் இனி வரும் காலங்களில் வேறு யாரும் ஆக்கிரமிப்பு செய்து விடக்கூடாது என்பதற்காக அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.

    நீண்ட கால பிரச்சனைக்கு நேற்று தீர்வு காணப்பட்டது ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீஸ் கலைச் செல்வம் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பெண்ணிடம் தங்க சங்கிலியை பறிக்க முயன்ற மூதாட்டி கைது செய்யப்பட்டார்
    • கோவில் விழாவில் நடந்த சம்பவம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடவாளம் பழமை வாய்ந்த மாமுண்டிக்கருப்பர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் கருப்பையா மனைவி மாரிக்கண்ணு (வயது 55.) தரிசணம் செய்த ே பாது, அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை , ஒரு பெண் பறிக்க முயன்றார். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்பெண்ணை பிடித்து விசாரணை செய்தனர். தஞ்சை பர்மாகாலனியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி (வயது 68 ) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை நடத்தினர், பின்னர் ஆலங்குடி மாவட்ட உரிமையி யல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

    • ெசன்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
    • வரும் 12-ந் தேதி தொடங்குகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தார்சாலை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க சுற்றுச்சு வர் மருத்துவமனை ஆய்வகம் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

    உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் வருகிற செப்டம்பர் 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. 150 நாடுகளை சேர்ந்த பார்வையாளர்கள் போட்டியை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசும், தமிழக டென்னிஸ் சங்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

    முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.3 கோடி மதிப்பீட்டில் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய மின்விளக்குக் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.1.5 கோடியில் மைதானத்த சீரமைத்து புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மைதானத்தில் ஓராண்டு காலத்துக்குள் 8 புதிய டென்னிஸ் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் பெரும் அச்சுறுத்தை ஏற்படுத்தி வருவதால் நீர் நிலைகளை மாசுபடுத்தாத வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    நீர் நிலையை பாது காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிநாட்டு மரங்களை தமிழகத்தில் நடுவதற்கு கோர்ட் தடை விதித்துள்ளது. அதன்படி வனத்துறை அமைச்சகம் சார்பில் வனங்கள் நிறைந்த பகுதிகளில் வெளிநாட்டு மரங்களை அகற்றுவ தற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விரைவில் நடவடிக்ைக மேற்கொள்ளப்படும்.

    விதிகளைமீறி செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்து தவறு நடந்திருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

    • விராலிமலையில்பாசன குளத்தில் நச்சுக்கழிவு கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நச்சுக்கழிவுகளால் இக்குளத்தில் உள்ள மீன், தவளை, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் அம்மன் குளக்கரையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பட்டமரத்தான் கோவில். இக்குளக்கரையில் தான் புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    பாசனக்குளமான இந்த குளத்தில் தண்ணீரை தேக்கி வைத்தே விராலிமலை, கலிங்கிப்பட்டி, சின்னபழனிப்பட்டி, மாதிரிப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இப்பகுதி விவசாயிகளுக்கு இக்குளமே முக்கிய வாழ்வாதாரமாகவும் திகழ்ந்து வருகிறது.

    மேலும் இந்த குளத்தை சுற்றி அருண் கார்டன், கிருஷ்ணா நகர், சண்முகா நகர், ரத்னா கோல்டன் சிட்டி, சீனிவாச நகர் போன்ற குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கும் இக்குளமே முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.

    இந்தநிலையில் விராலிமலை பகுதியில் இயங்கி வரும் ஒரு சில தொழிற் சாலைகளிலிருந்து உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக் கழிவுகள் மற்றும் எண்ணைக் கழிவுகள் அனைத்தும் இந்த குளத்தில் கொண்டுவந்து கொட்டப்பட்டு வருகிறது. அந்த கழிவுகள் நீரில் கலந்து மிகவும் கடுமையாக குளம் மாசுபட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    இதனை கிராம சபை கூட்டம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் தற்போது மிகக்கடுமையாக நீர், நிலம், காற்று மாசு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு உருவாகியுள்ளது.

    மேலும் நச்சுக்கழிவுகளால் இக்குளத்தில் உள்ள மீன், தவளை, நத்தை போன்ற நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இந்த பாதிப்பின் தொடர்ச்சியால் இந்த குளம் மற்றும் இதனைச்சுற்றி உள்ள நிலங்களின் தன்மை மாறி புல், மரம், செடி கொடிகள் ஏதும் வளர தகுதியற்று மண்ணிற்கு மலட்டு தன்மை ஏற்படும் அபாய நிலை உருவாகி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×