என் மலர்
நீங்கள் தேடியது "20 LAKHS"
- கறம்பக்குடி கிளை நூலகத்திற்கு ரூ.20 லட்சத்தில் சொந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது.
- எம்.எல்.ஏ. கட்ட அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்தில் கிளை நூலகத்திற்கு ெசாந்த கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா எம்.எல்.ஏ. சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் முருகேசன், திராவிட முன்னேற்றக் கழக வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றி ய செயலாளர் வீரமுத்து, செயற்குழு உறுப்பினர் அன்பழகன், கறம்பக்குடி பேரூராட்சியின் 15வது வார்டு உறுப்பினர்கள் ஞானசேகர், பிரபு, ராஜா, நியாஸ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலார் தினேஷ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் மனோகர், கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வராஜ், பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் பஞ்சவர்ணம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தி ன் மாவட்ட செயலாளர் முஹம்மது ஜான், கறம்பக்குடி ரோட்டரி சங்கம் எவரெஸ்ட் சுரேஷ், நூலகர் அண்ணாதுரை, பேரூராட்சி செயல் அலுவ லர் மற்றும் ஊழியர்கள், வாசகர் வட்ட நண்பர்கள், பொதுமக்கள், ஆ சிரியர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழாவில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக மாவட்ட இணைச் செயலாளர் சிவானந்தம் புத்தகம் நினைவுப் பரிசாக வழங் கினார்.






