என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்
- தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது
- ஆலங்குடி வட்டாட்சியர் வழங்கினார்
புதுக்கோட்டை:
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்றது ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, தமிழ்நாடு அரசு நல வாரிய உறுப்பினர் தங்கம் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக் கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினர்.
முகாமில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மாநில சங்கத்தி ன் மாவட்ட துணைச்செயலாளர் பங்கராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் யோகேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியர் பாலாகோபாலன், எலும்பு முறிவு மருத்துவர் உமா மகேஸ்வரன், மனநல மருத்துவர் முத்தமிழ்செல்வி, மருத்துவர் செந்ல்குமார், சிவக்குமார், பாஸ்கரன், கோவிந்தசாமி, லூயிஸ்மேரி மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
Next Story






