என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், கொத்தமங்கலம் ஆரம் சுகாதார நிலையம், திருவரங்குளம் வட்டா ர நடமாடும் மருத்துவக்குழுவினர் மூலம் கொத்தமங்கலம் கிழக் கு அரசுப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன. மேலும், மக்கள் அதிகளவில் கூடக்கூடிய கோயில்கள், அரசு வளாகங்கள், பள்ளிகள், பேருந்து நிறுத்தம், கடைவீதிகளில் தூய்மை பணியாளர்கள் மூலம் தண்ணீர் தேங்காத வகையில் தூய்மைபடுத்தப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    புதுக்கோட்டை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க சட்டத்தை உருவாக்குவதற்கு முடிவு எடுக்க வேண்டும். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து மர்மம் இருப்பதாக அ.தி.மு.க.வினர் தான் கூறினர். அவர்கள் தான் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்தனர்.

    தற்போது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் உரிய முடிவு எடுத்து உண்மை தன்மையை அ.தி.மு.க. தலைவர்களுக்கு மட்டுமல்ல, அதனை மக்களுக்கும் அரசு விளக்க வேண்டும்.

    கடலூரில் நேற்று சிறைத்துறை துணை ஜெயிலர் வீடு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பதை உரிய விசாரணை செய்து யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கன்னியாகுமரியில் வரும் ஏழாம் தேதி ராகுல் காந்தி தலைமையில் நடக்கும் பாதயாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதனை இலவசம் என்ற பெயரில் கொச்சைப்படுத்துவது தவறு. அந்த பொருட்களை கூட கொடுக்க முடியாத அளவுக்கு செல்ல காரணம் இந்த கையாலாக மோடி அரசுதான். உதவிகள் செய்வதை அலட்சியப்படுத்தும் வகையில் கூறுவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடந்தது
    • காவல் நிலைய வளாகத்தில் நடந்தது

    புதுக்கோட்டை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலங்கு டி காவல் சரகர் துணை சூப்பிரண்டு போலீஸ் தீபக்ரஜினி தலைமையில், ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டம் ஆய்வாளர் அழகம்மை முன்னிலையில் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஒதுக்கப்பட்ட வழியாகத்தான் நடைபெற வேண்டும். புதிய பாதையில் செல்ல கூடாது. ஆலங்குடி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனைத்து மக்களும் நல்லிணக்க அடிப்படையில் உதவிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    • சட்டவிரோதமாக மது விற்றவர் கைது ெசய்யப்பட்டார்.
    • சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அஞ்சல் துறை அலுவலகம் எதிரில் சட்ட விரோதமாக மது விற்பதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அம்பேத்கர் நகரை சேர்ந்த குமார் (வயது 38) மது விற்பதை பார்த்த போலீசார், அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது
    • தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கினர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே மாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன், இவரது பசுமாடு, சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீர் உள்ள கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பசுமாட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

    • புதிய பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
    • 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கட்டிடம் வலுவிழந்து விட்டதால் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிறுத்தம் பகுதியில் ஓரிடத்தில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் டீ கடைக்காரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இந்நிலையில் பேருந்து நிலையக் கட்டிடத்தை கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

    இந்த பேருந்து நிலைய கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் உறுதித்தன்மையை திருச்சி என்ஐடி குழுவினர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி பொறியாளர்கள் இருவாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.

    அப்போது இந்த கட்டிம் வலுவிழந்து விட்டதால் இடித்து அகற்றுமாறு பரிந்துரைத்தனர். இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • சுகன்யா தேசிய ஊரக சுகாதார தூய்மை இயக்கத்தில் பணிபுரிபவர்களின் சம்பள பணம் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909 பணத்தை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கையொப்பத்தை காசோலையில் போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்துள்ளார்.
    • மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதவி கணக்காளர் சுகன்யா மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நற்சாந்துப்பட்டியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக பணி புரிபவர் புதுக்கோட்டை மேல 3-ம் வீதியை சேர்ந்த கண்ணன் மனைவி சுகன்யா (வயது 34).

    இவர் கடந்த 21.3.22 முதல் 16.8.22-க்கு இடைப்பட்ட நாட்களில் தேசிய ஊரக சுகாதார தூய்மை இயக்கத்தில் பணிபுரிபவர்களின் சம்பள பணம் ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909 பணத்தை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கையொப்பத்தை காசோலையில் போலியாக போட்டு பணத்தை கையாடல் செய்துள்ளார்.

    இதுகுறித்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் மனோஜ் கொடுத்த புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதவி கணக்காளர் சுகன்யா மீது மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.
    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

    கரூர்:

    கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதன் காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ள நீர், சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமான நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை, நத்தமேடு, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகளூர் ,தோட்டக்குறிச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கக் கூடிய பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும், பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் , காவிரி ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

    • புனித ஆரோக்கியமாதா ஆலய தேர்பவனி நடந்தது.
    • 25 ஆம் ஆண்டு திருவிழா

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பி.குளவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள புனித ஆரோக்கிய மாதா கோவிலில் 25 ஆம் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து கோவிலில் நவநாள் ஜெபமும், பாடல் திருப்பலியும் நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி பங்குதந்தை அருட்திரு ஆர்கே அடிகளார் தலைமையில், அருட்தந்தை கித்தரிமுத்து, பங்கு குருக்கள், அருட்தந்தையர்கள், ்அருட்சகோதரிகள் ஆகியோர் கூட்டுப்பாடல் திருப்பலியுடன் அலங்கார தேர் பவனி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது
    • உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில் 12ம்வகுப்பு முடித்துசென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து உயர் கல்வி படிப்புக்கு வழிகாட்டும் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அனைத்துப்பள்ளிகளுக்கும் அறிக்கை அனுப்பி இருந்தது. இதன் அடிப்படையில் ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளித்தலைமையாசிரியர் நவநீதகிருஸ்ணன் தலைமைவகித்தார். ஆசிரியர்கள் ரமேஸ் கண்ணதாசன் செம்மலர் ஜெயக்குமார் மகாலிங்கம் கையூம் ஆகியோர் இந்தப்பள்ளியில் 12ம்வகுப்பு முடித்து உயர் கல்வி படிப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு வழிமுறைகள் குறித்தும் மேற்படிப்பின் அவசியம் வேலை வாய்ப்புகள் குறித்து விளக்கிப்பேசினார்கள். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மேல்படிப்புக்கு விண்ணப்பித்துள்ள படிப்புகள் குறித்து விளக்கினர்.

    • லாட்டரி டிக்கெட் விற்றவரை கைது செய்தனர்.
    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகேயுள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெறுதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மேற்பனைக்காடு பேட்டை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(வயது45) லாட்டரி டிக்கெட் விற்றுக் ெகாண்டிருப்பதை பார்த்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்தனர்.
    • செல்போன், வாகனம் பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை பகுதிகளில் கஞ்சா விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவிற்கு ரகசிய தகவல் வந்துள்ளதை அடுத்து, அப்பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சின்னப்பா நகரைச்சேர்ந்த முகமது அபிபுல்லா (வயது 19) தோப்புக்கொள்ளை காளியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்றுக்கொண்டிருப்பதை பார்த்த போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா, செல்போன், அவர் பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக வல் லத்திராக்கோட்டை காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

    ×