என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் சென்றால் கடும் நடவடிக்கை- தாசில்தார் எச்சரிக்கை
    X

    நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் சென்றால் கடும் நடவடிக்கை- தாசில்தார் எச்சரிக்கை

    • நீர்நிலைகளுக்கு பொதுமக்கள் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்துள்ளார்.
    • காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

    கரூர்:

    கர்நாடகாவில் காவிரியாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதன் காரணமாக அங்குள்ள அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் வெள்ள நீர், சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் மேட்டூர் அணைக்கு வருவதன் காரணமாக நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமான நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், கோம்புப்பாளையம் ,திருக்காடுதுறை, நத்தமேடு, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகளூர் ,தோட்டக்குறிச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கக் கூடிய பொதுமக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லு மாறும், பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல், துணி துவைத்தல் , காவிரி ஆற்றை கடந்து செல்லுதல் மற்றும் செல்பி எடுத்தல் உள்ளிட்ட எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு, அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கும் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு புகழூர் தாசில்தார் மோகன்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×