என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் பேட்டி
    X

    புதிய பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் பேட்டி

    • புதிய பேருந்து நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
    • 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய கட்டிடம் வலுவிழந்து விட்டதால் அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிறுத்தம் பகுதியில் ஓரிடத்தில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் டீ கடைக்காரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    இந்நிலையில் பேருந்து நிலையக் கட்டிடத்தை கலெக்டர் கவிதா ராமு தலைமையில் அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

    இந்த பேருந்து நிலைய கட்டிடம் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதன் உறுதித்தன்மையை திருச்சி என்ஐடி குழுவினர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி பொறியாளர்கள் இருவாரங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.

    அப்போது இந்த கட்டிம் வலுவிழந்து விட்டதால் இடித்து அகற்றுமாறு பரிந்துரைத்தனர். இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    Next Story
    ×