என் மலர்
புதுக்கோட்டை
- வேளாண் நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டது.
- குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:
இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராம பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.
பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசன திட்டத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய் பனை மற்றும் தென்னை மரங்களுக்கு சொட்டுநீர்ப் பாசனமும், பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 506 பயனாளிகளுக்கு 569 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1 கோடியே 84 லட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தா
- முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
- பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
புதுக்கோட்டை:
ஆவுடையார்கோவில் அருகே பாண்டிபத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பொது முடக்கத்தால் 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, முத்துமாரியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. 10-ம் நாள் திருவிழாவான நேற்று விரதமிருந்த பக்தர்கள் பால்குடம், காவடிகளை சுமந்து கோவிலை 3 முறை சுற்றி வந்தனர். அதன்பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் பாண்டிபத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்."
- கொத்தமங்கலத்தில் பழுதடைந்த கட்டிடத்தை இடிக்க அதிகாரி சம்மதம் தெரிவித்தார்.
- மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் எதிரொலி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலம் மேற்கு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள் கட்டி பல ஆண்டுகள் ஆவதால், அவகைள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் வகுப்பறைகள் மரத்தடியிலும் வேறு கட்டிடத்திலும் வைத்து ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அடிக்கடி மழை மற்றும் பலத்த காற்று அவ்வப்போது வீசுவதால் கட்டிடம் எந்த நேரத்திலும் விழும் என்ற அச்சம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் நிலவிவருகிறது. எனவே இந்த கட்டிடத்தை இடிக்கும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோ என்று பள்ளி முன்பு ஒரு மரத்தடியில் அமர வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பள்ளிக்கட்டிடம் விடுமுறை நாளான இன்று அகற்றப்படும் எனவும், பள்ளியின் மற்ற குறைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தி அதற்கான தீர்வுகள் எட்டப்படும் என உறுதி அளித்தார். இதில் சமாதானமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்ததோடு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தனர்
- வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெண்ணவால்கு டி ஊராட்சியை சேர்ந்தவர் துரை மனைவி சுதா (வயது 35) இவர் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதில், சம்பவத்தன்று வீட்டின் கதவை திறந்து வைத்து எனது கணவருடன் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது சில மர்ம நபர்கள் என் கழுதில் அணிந்திருந்த 4.5 பவுன் சங்கிலியை பறிதுது சென்றனர் என்று தெரிவித்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆதரவற்ற மூதாட்டியை தொண்டு நிறுவனத்தில் சேர்த்த காவலரை பொதுமக்கள் பாராட்டினர்
- செல்போன் எண்ணை எழுதி கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீழாத்தூரை சேர்ந்தவர் பாக்கியம் (வயது 80). ஆதரவற்ற மூதாட்டியான இவர், கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் தங்கி இருந்தார்.பின்னர், அங்கிருந்து சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள் ளியில் தங்கி இருந்தார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த அறிவொளி கருப்பையா உணவளித்து பராமரித்து வந்தார்.
இந்நிலையில், வடகாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் யாசர் அராபத், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த மூதாட்டியை பார்த்து, ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனடியாக எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்போன் எண்ணை எழுதி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஒருவரின் உதவியுடன் அவரை தொடர்பு கொண்டு உடல்நிலை சரியில்லை என்று மூதாட்டி கூறியுள்ளார். உடனடியாக அங்கு வந்த யாசர்அராபத், அந்த மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு உடல் நிலை சரியானதும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாக்கியத்தை, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலபிரியாவின் அலோசனையுடன் வல்லத்திரா கோட்டை அருகே உள்ள தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தில் அறிவொளி கருப்பையாவும், யாசர் அராபத்தும் சேர்த்தனர். ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய இருவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.
- அறந்தாங்கி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது
- 13 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் லீமாசைமன் முன்னிலை வகித்தார். அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதி குறைநிறைகளை எடுத்துரைத்தனர். அதற்கு துறை அதிகாரிகள் மற்றும் நிர்வாகம் சார்பில் உரிய தீர்வு எட்டப்படும் என பதிலளிக்கப்பட்டது.மேலும் நகராட்சி பகுதியில் நடைபெற்ற, நடைபெற இருக்கின்ற வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து 13 பணிகள் மீது விவாதம் நடைபெற்று 13 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக எதிர் வருகின்ற 8-ந் தேதி வீரமாகாளியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள், துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- தனியார் விடுதி அறையில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
- குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது
புதுக்கோட்டை
தேவகோட்டையை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவருக்கு குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். நாகுடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக வந்தவர் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இதையடுத்து காலை சரவணன் தங்கி இருந்த அறையின் கதவை விடுதியில் உள்ளவர்கள் தட்டியபோது கதவு திறக்காமல் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் உள்ள ஜன்னலில் வேட்டியால் சரவணன் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்
- குறைதீர் கூட்டம் நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 295 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.8,500 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொ) கணேசன், மாவட்ட ஆட்சியரின் நர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- டைல்ஸ் கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது
- ரூ.3 லட்சம் பொருட்கள் சேதமானது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்தாவூத்(வயது30). இவர் மீமில் கிழக்கு கடற்கரை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை பட்டுக்கோட்டையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற மீன் ஏற்றும் சரக்கு லாரி, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பூட்டியிருந்த டைல்ஸ் கடைக்குள் புகுந்துள்ளது.
இதில் கடைக்குள் இருந்த டைல்ஸ், மார்பில்ஸ், கடை முகப்பு உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீமிசல் காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கடற்கரை சாலையில் டைல்ஸ் கடைக்குள் மீன் ஏற்றும் சரக்குலாரி உள்ளே புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்
- ரூ. 530 பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக காவல்துறை கண்காணிப் பாளர் தீபக் ரஜினிக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அவரது தலை மையிலான தனிப்படை போலீசார் ஆலங்குடி அரசமர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கீழாத்தூர் காலனி தெருவை சேர்ந்த கருணாநிதி (வயது 61) புதுக்கோட்டை விடுதியை சேர்ந்த வீரப்பன் (55.)ஆலங்குடி கண்ணகி தெரு, பாச்சிக்கோட்டை மேலக்காடு சேர்ந்த கணேசன் (54), ஆலங்குடி ஆண்டிகுளத்தைச் சேர்ந்த விக்னேஷ் ( 32), ஆலங்குடி கண் ணகி தெரு விக்னேஷ் ( 28), கல்லாலங்குடி கலைஞர் நகர் முத்துக்குமார் (55). நடுப்பட்டி பள்ளத்திவிடுதி புஷ்பராஜ் (46) ஆகிய 7 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 530 பறிமுதல் செய்தனர்.
பின்னர் காவல் ஆய்வாளர் அழகம்மை இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீக்குளிக்க முயன்ற முதியவரை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது
- 40 ஆண்டுகளாக ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட் சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்ணவால்குடி ஊராட்சியில் உள்ள தச்சன்கோரைப்பத்தை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவ ர் அந்தப் பகுதியில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஓட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவரைப்போல அந்தப் பகுதியில் நத்தம் புறம் போக்கு இடத்தில் சிலர் அனுபவம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் செல்வரா ஜ் நத்தம் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோயிலில் பொ ங்கல் வைத்து வழிபட முடியவில்லை என்று கூறி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். மேலும் 40 ஆண்டு காலமாக வசித்து வருவதாகவும், வேறு எதற்கும் பயன்படாத இடத்தில் நான் வசித்து வருவதாகவும் அதனா ல் தனக்கு மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்க வேண்டும் என்று செல்வராஜ் மனு அளித்திருந்தார்.
இதையடுத்து ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் செல்வராஜ் வீடு உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நபர்கள் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே செல்வராஜ் மற்றும் அவரது மருமகள் சுதா ஆகிய இருவரும் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதனை அங்கிருந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். மேலும் செல்வராஜ், சுதா ஆகியோர் வீட்டிற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு வீட்டை பொக்லைன் எந்திரத்தின் உதவுயுடன் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னல் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் நடுரோட்டில் உயிருக்கு போராடினர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகில் உள்ள விராலூர் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தை வேலு, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி.
இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருந்தார். மகன் கனகராஜ் (வயது 12) விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
தினமும் குழந்தைவேலு தனது மகனை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு வருவது வழக்கம். அதேபோல் இன்று காலை மகனை குழந்தைவேலு மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர வைத்து பள்ளிக்கு அழைத்து சென்றார்.
விராலூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னல் வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தந்தை, மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த இருவரும் நடுரோட்டில் உயிருக்கு போராடினர்.
தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் கனகராஜ் ஒரு சில நிமிடங்களில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த விராலிமலை போலீசார் பலியான மாணவர் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தைவேலு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பள்ளிக்கு செல்வதற்காக கூறிவிட்டு சென்ற ஒரு சில நிமிடங்களில் மகன் இறந்ததை அறிந்து அங்கு வந்த அவரது தாய் சரஸ்வதி மகனின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தைவேலுவின் உடன் பிறந்த சகோதரர் செல்வம் மற்றும் அவரது மனைவி கல்யாணி ஆகியோர் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி இதே பகுதியில் கார் மோதிய விபத்தில் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






