என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற அறிவுறுத்தல்
    X

    வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற அறிவுறுத்தல்

    • வேளாண் நலத்திட்டங்களை உரிய முறையில் பெற்று பயன்பெற அறிவுறுத்தப்பட்டது.
    • குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:

    இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    2022-23ஆம் ஆண்டிற்குப் புதுக்கோட்டை மாவட்டத்தில் 120 கிராம பஞ்சாயத்துகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துகளில் மண் மாதிரிகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. தரிசு நில தொகுப்புகளை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.

    பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசன திட்டத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்களான கரும்பு, மக்காச்சோளம், எண்ணெய் பனை மற்றும் தென்னை மரங்களுக்கு சொட்டுநீர்ப் பாசனமும், பயறுவகைப் பயிர்கள் மற்றும் நிலக்கடலை பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகளும் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

    2022-23ஆம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 1000 எக்டர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 506 பயனாளிகளுக்கு 569 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை ரூ.1 கோடியே 84 லட்சம் நிதி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே தமிழக அரசின் இதுபோன்ற வேளாண் நலத்திட்டங்களை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தா

    Next Story
    ×