என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதரவற்ற மூதாட்டியை தொண்டு நிறுவனத்தில் சேர்த்த காவலரை பாராட்டிய பொதுமக்கள்
    X

    ஆதரவற்ற மூதாட்டியை தொண்டு நிறுவனத்தில் சேர்த்த காவலரை பாராட்டிய பொதுமக்கள்

    • ஆதரவற்ற மூதாட்டியை தொண்டு நிறுவனத்தில் சேர்த்த காவலரை பொதுமக்கள் பாராட்டினர்
    • செல்போன் எண்ணை எழுதி கொடுத்துள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கீழாத்தூரை சேர்ந்தவர் பாக்கியம் (வயது 80). ஆதரவற்ற மூதாட்டியான இவர், கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர் நாடியம்மன் கோயிலில் தங்கி இருந்தார்.பின்னர், அங்கிருந்து சமத்துவபுரத்தில் உள்ள அரசு தொடக்கப் பள் ளியில் தங்கி இருந்தார். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த அறிவொளி கருப்பையா உணவளித்து பராமரித்து வந்தார்.

    இந்நிலையில், வடகாடு காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் யாசர் அராபத், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த மூதாட்டியை பார்த்து, ஏதாவது உதவி தேவைப்பட்டால் உடனடியாக எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று செல்போன் எண்ணை எழுதி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் ஒருவரின் உதவியுடன் அவரை தொடர்பு கொண்டு உடல்நிலை சரியில்லை என்று மூதாட்டி கூறியுள்ளார். உடனடியாக அங்கு வந்த யாசர்அராபத், அந்த மூதாட்டியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்பு உடல் நிலை சரியானதும், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாக்கியத்தை, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலபிரியாவின் அலோசனையுடன் வல்லத்திரா கோட்டை அருகே உள்ள தொண்டு நிறுவன முதியோர் இல்லத்தில் அறிவொளி கருப்பையாவும், யாசர் அராபத்தும் சேர்த்தனர். ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவிய இருவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×