என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டைல்ஸ் கடைக்குள் லாரி புகுந்து விபத்து
    X

    டைல்ஸ் கடைக்குள் லாரி புகுந்து விபத்து

    • டைல்ஸ் கடைக்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளானது
    • ரூ.3 லட்சம் பொருட்கள் சேதமானது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஷேக்தாவூத்(வயது30). இவர் மீமில் கிழக்கு கடற்கரை சாலையில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை பட்டுக்கோட்டையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்ற மீன் ஏற்றும் சரக்கு லாரி, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பூட்டியிருந்த டைல்ஸ் கடைக்குள் புகுந்துள்ளது.

    இதில் கடைக்குள் இருந்த டைல்ஸ், மார்பில்ஸ், கடை முகப்பு உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீமிசல் காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கடற்கரை சாலையில் டைல்ஸ் கடைக்குள் மீன் ஏற்றும் சரக்குலாரி உள்ளே புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×