என் மலர்
புதுக்கோட்டை
- விவசாயிகள் சங்கத்தினர் நூதன போராட்டம் நடைபெற்றது.
- டார்ச் லைட் அடித்து நடத்தினர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே
கீரமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய குழு சார்பில், மத்திய அரசின் மின் மசோதாவை கண்டித்தும், தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதி படி நெல் குவிண்டாலுக்கு 4000 ரூபாய் வழங்க கோரியும் டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் பவானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தேசியக் குழு உறுப்பினர் மு மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணை செயலாளர் தமிழ்மாறன், ஒன்றிய குழு உறுப்பினர் மாசிலாமணி, அசோகன், கண்ணன், கலைமணி உள்ளிட்ட நகர குழு பங்கேற்போடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பொன்னமராவதி அருகேயுள்ள மேலத்தாணியம் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது.
- மற்றொரு பேருந்துக்கு வழிவிடுவதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையின் ஓரமாக குறைந்த வேகத்தில் இயக்கினார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள மேலத்தாணியம் கிராமத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு இன்று காலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் கர்ப்பிணி பெண் உள்பட சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்த நிலையில் அந்த பேருந்து நெரிஞ்சிக்குடி விலக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே தனியார் பஸ் ஒன்று வந்தது. அந்த பேருந்துக்கு வழிவிடுவதற்காக அரசு பஸ் டிரைவர் சாலையின் ஓரமாக குறைந்த வேகத்தில் இயக்கினார். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலையோரம் இருந்த மண் அரிக்கப்பட்டு பலமிழந்து காணப்பட்டது.
இதில் சிக்கிய அரசு பேருந்து பள்ளத்தில் சரிந்து நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் பேருந்து கவிழ்ந்து விட்டதோ என்று எண்ணி கூச்சல் போட்டனர். உடனடியாக அந்த வழியாக வந்தவர்கள் பேருந்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். இதில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற கர்ப்பிணி உள்ளிட்ட அனைத்து பயணிகளும் எந்தவித காயமும் இன்றி தப்பினர்.
விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் விபத்தில் சிக்கிய அரசு பேருந்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து அந்த பஸ் மீட்கப்பட்டு, அதே பஸ்சிலேயே பயணிகள் அனைவரும் புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அறந்தாங்கியில் பேரிடர் கால மீட்பு ஒத்திகை நடைபெற்றது
- பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மத்திய அரசின் ஆப்தமித்ரா திட்டம் மூலம் பேரிடர்கால மீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாடு முழுவதும் பேரிடர் காலமீட்பு பணிகள் குறித்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதற்காக அந்தந்த மாவட்டங்களில் 300 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த மாதம் 18ம் தேதி முதல் 12 நாட்களுக்கு பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்து பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
அதனை தொடர்ந்து நேற்று அறந்தாங்கியில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. ஒத்திகை நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆகியோர் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று எவ்வாறு மீட்பு பணிகளை மேற்கொள்வது குறித்த செயல்முறை விளக்கங்கள் செய்து காண்பித்தனர். மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் லீமாசைமன் உள்ளிட்ட சுகாதாரத்துறை, மருத்துவத்துறை பொதுப்பணித்துறை, மின்வாரியத்து றை, தீயணைப்புத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சிலம்பு அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது
- சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலம்பாவயல் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவிலில் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அறந்தாங்கி தாலுகா சிலம்பாவயல் கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் ஸ்ரீ சிலம்பு அய்யனார் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று, அப்பகுதி மக்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்காக யாகசாலை அமைத்து கடந்த 30ம் தேதி முதல் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 2நாட்களாக இரண்டுகால யாகபூஜை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து அப்புக்காளை கண்ணன் சாஸ்திரிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை காண பொதுமக்கள் மற்றும் ஆன்மீக மெய்யன்பர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிலம்பு அய்யனார் அருள்பெற்று சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- வீட்டிற்குள் இருந்த பெண்ைண வெளியே அழைத்து 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
- முகவரி கேட்பதுபோல் நடித்து
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மச்சுவாடி ராம்நகர் 3-வது தெருவில் வசிப்பவர் பிரவீன்குமார். அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி வித்யா (வயது33).
பிரவீன்குமார் காலையில் வேலைக்கு சென்றால், பள்ளி முடிந்து மாலையில்தான் வீடுதிரும்புவார். வித்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் 2 பேர், வித்யா வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து, உள்ளே இருந்த வித்யாவை அழைத்துள்ளனர். வெளியில் வந்த அவர், நீங்கள் யார், எதற்காக இங்கு வந்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்ம நபர்கள் ஒரு பேப்பரில் எழுதியுள்ள முகவரியை காட்டி இது எங்குள்ளது என்று கேட்டுள்ளர்.
அந்த பேப்பரை வாங்கி முகவரியை படித்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த மர்மநபர்கள், வித்யாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தில் ஏறி சிட்டாக பறந்தனர். இச்சம்பவம் குறித்து வித்யா கொடுத்த புகாரின் பேரில், கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
இதுபோன்ற செயல்கள் நகரின் பல பகுதிகளில் நடைபெறுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகப்படும்படி யாரையாவது பார்த்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைத்தில் தகவல் கொடுக்க வேண்டும். விரைவில் மர்ம நபர்களை பிடித்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
- தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றுவருகிறது
- கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை,:
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30 வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் 'ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கையெழுத்து இட்டு துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் வாசிக்க அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர்.
- போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இன்று சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலை துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி கனியாமூர் விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீனில் வெளியே வந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து ஜாமீனை ரத்து செய்வதற்கு மேல்முறையீடு செய்யப்படும்.
தமிழகத்திலேயே சிறைத்துறை அதிகாரிகள் தான் பயங்கர அச்சுறுத்தலோடு பணியாற்றி வருகின்றனர். குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள் மட்டுமே சிறையில் உள்ளதால் அவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக உள்ளனர்.
இவர்கள் சிறையில் இருந்து வெளியே ஆட்களை ஏவி விட்டு பல்வேறு குற்ற செயல்களை செய்வதற்கு தயங்குவதில்லை. மிகுந்த அச்சுறுத்தலோடு பணியாற்றி வரும் சிறைத்துறை காவலர்கள் மற்றும் அதிகாரிகளை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆறுமுகசாமி அறிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சட்ட வல்லுனர்களின் ஆலோசனை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களோடு ஆலோசனை பெற்று மேல் நடவடிக்கை எடுத்த பின்னர் அதன் அறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
தமிழகத்தில் போதை பொருட்களின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். போதைப் பொருட்களின் நடமாட்டம் குறித்து மட்டுமே அவர் கூறியுள்ளார்.
போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. போதை குற்றவாளிகள் தமிழக அரசு சார்பில் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
- விழாவில் அரசு பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆத்தங்கரை விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு ஆத்தியடிப்பட்டி, கீழவாண்டான் விடுதி, ஆத்தங்கரை விடுதி, பல்லவராயன் பத்தை, முள்ளம்குறிச்சி, துவார் அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், மக்கள் நல உதவி திட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகி சித்திரைவேல் ஆத்தங்கரை விடுதி ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், ஒன்றிய குழு உறுப்பினர் திருப்பதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மரத்தில் தூக்குப்போட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
- பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்
புதுக்கோட்டை:
திருமயம் அருகே சீமானூர் கண்மாய் பகுதியில் உள்ள மரத்தில் ஒருவர் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் திருமயம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர் திருமயம் அருகே உள்ள குமரன் நகர் பகுதியை சேர்ந்த அடைக்கப்பண் மகன் சோலையப்பன் (வயது 44) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."
- பள்ளி வளாகத்தில் ஆபத்தான கட்டிடம் அகற்றும் பணிகள் தொடங்கியது
- பழுதான சமையல் கூடமும் அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழைய பழுதான ஓட்டுக்கட்டிடம் ஓடுகள் உடைந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த கட்டிடம் உடைந்து விழுந்தால் அருகில் உள்ள மாணவர்களின் வகுப்பறை கட்டிடம் மீது விழுந்து ஆபத்து ஏற்படும் என்பதால் நேற்று பழுதான பழைய கட்டிடத்தை இடிக்க கோரி மாணவர்களை பள்ளி வகுப்பறைகளுக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் மரத்தடியில் அமர வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தகவலறிந்து வந்த வட்டாரக்கல்வி அலுவலர் கருணாகரன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக கட்டிடம் இடிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் பழுதடைந்த ஆபத்தான ஓட்டுக்கட்டிடத்தின் ஓடுகள் அகற்றப்பட்டு சுவர்கள் அகற்றும் பணிகள் தொடங்கியது. அதே போல அருகில் உள்ள பழுதான சமையல் கூடமும் அகற்றப்பட்டது.
- இந்த மாதம் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது.
- பேரிடர் மேலாண்மை தொடர்புடைய கட்டுரைகள்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரிடர் அபாயங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அனைத்து கிராமத்திலும் இன்று முதல் 30-ந் தேதி வரை பேரிடர் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடமிருந்து 15 - தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தொடர்பான கட்டுரையின் 15-தலைப்புகள், கட்டுரையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ஆகியவை புதுக்கோட்டை மாவட்ட வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் அலுவலார்கள் தங்கள் கட்டுரைகளை வரும் 25-ந் தேதிக்குள் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்படி கட்டுரைகளில் சிறந்த மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு முதல்பரிசாக ரூ.5000-, இரண்டாம் பரிசாக ரூ.3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
- விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகில் உள்ள கேப்பறை சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான சித்த விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட ஒன்பது வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் வழிபாடு நடைபெற்றது. அதேபோல் திருவரங்குளம் கடைவீதியில் உள்ள விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தெப்பக்குளக்கரையில் அமைந்துள்ள சித்தி விநாயக ர் பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மேட்டுப்பட்டி சரளைப்பள்ளம் தரிசன விநாயகர், திருக்கட்டளை விநாயகர் கோவில், கைக்குறிச்சி விநாயகர், கோவில் பூவரசகுடி விநாயகர் கோவில், வல்லத்திராக்கோட்டை விநாயகர் கோவில், கீழையூர் நாயகர் கோவில், பாளையூர் விநாயகர் கோவில் உள்ளிட்ட பல்வே று இடங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது






