என் மலர்
நீங்கள் தேடியது "இடம் மீட்பு"
- தனிநபர்கள் ஆக்கிரமித்த அரசு இடம் மீட்பு
- பொதுமக்கள் புகாரால் நடவடிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி நம்பம்பட்டியில் உள்ள அரசு இடத்தை, அதே பகுதியை சேர்ந்த இரண்டு பேர் ஆக்ரமிப்பு செய்து கொட்டாகை அமைந்திருந்தனர். இதனை மீட்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.
அதன்படி கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி தலைமையில், மழையூர் வருவாய் ஆய்வாளர் அன்னக்கொடி, மாங்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் லலிதாகுமாரி, வருவாய்த்துறை சசிகுமார், துணைதாசில்தார், சர்வேயர், வருவாய் துறையினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கு ஊன்றப்பட்டு இருந்த கல் முள் வேலிகளையும் அப்புறப்படுத்தினர்.
மேலும் அந்த இடத்தில் இனி வரும் காலங்களில் வேறு யாரும் ஆக்கிரமிப்பு செய்து விடக்கூடாது என்பதற்காக அறிவிப்பு பலகையும் வைத்துவிட்டு சென்றனர்.
நீண்ட கால பிரச்சனைக்கு நேற்று தீர்வு காணப்பட்டது ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை தலைமையிலான போலீஸ் கலைச் செல்வம் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






