என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.47 லட்சம் கொள்ளை
    X

    3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.47 லட்சம் கொள்ளை

    • விற்பனை பொருட்களையும் அள்ளிச் சென்றனர்
    • 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1.47 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி, புதுக்கோட்டை சாலையில் கொப்பனாபட்டி அருகே ரெட்டியபட்டி ஊரார்களுக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் மளிகை, தேநீர் கடை என 8 கடைகள் உள்ளது. கடை உரிமையாளர்கள் இரவு கடையை மூடிவிட்டு காலையில் வந்து கடையை திறக்க வந்தபோது வணிக வளாகத்தில் அடுத்தடுத்த உள்ள மூன்று கடைகளின் பூட்டுகள் உடைக்கப்ப ட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    கடையை திறந்து பார்த்தபோது சு.ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையின் பூட்டினை உடைத்து அங்கு கொள்முதலுககாக வைக்கப்பட்டிருந்த ரூ 1.30 லட்சம் ரொக்கம் மற்றும் 6 கிராம் தோடும்,

    செந்தில் என்பவருக்கு சொந்தமான மளிகைக்கடையில் ரூ 10 ஆயிரம், சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான பேன்சி ஸ்டோரில் ரூ 7 ஆயிரம் மற்றும் குடைகள் 15 என மொத்தம் ரூ 1.47 லட்சம் ரொக்கம் மற்றும் பொருள்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் வையாபுரியில் உள்ள வணிகவளாகத்தில் பூட்டினை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்த கடையின் உரிமையாளர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×