என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது
    X

    முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது

    • முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர் ெசய்யப்பட்டனர்.
    • ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில்கை வரிசை காட்டியவர்கள்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராகோட்டை காவல் நிலையம் அருகே உள்ள ஆவுடையாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 66). இவர் பால்வளத் துறையில் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு ஓய்வு பெற்றுள்ளார்.‌ மனைவி அன்னம் மருமகள் ரமா பிரபா ஆகியோருடன் இருந்தார்.

    இந் நிலையில் அவர்களது வீட்டிற்குள் புகுந்த‌ மர்ம நபர்கள் முகமுடி அணிந்திருந்த நிலையில் வீட்டில் இருந்த மூன்று நபர்களின் வாயையும் கட்டிவிட்டு பட்டாகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி, அவர்களை தாக்கி, 13 சவரன் தங்க நகைகளையும் பீரோவில் இருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தையும் இரண்டு மொபைல் போன்களையும் கொள்ளையடித்து சென்றுள் ளனர். இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வல்லத்திராகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை , அறந்தாங்கி சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன் னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதனையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொ ண்டதில், அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் மற்றும் லட்சுமி நா ராயணன் என்பதும் அவர்கள் ஆவுடையாபட்டியில் நடைபெற்ற கொ ள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவ ந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஆவுடையாபட்டி கொள்ளைச் சம்பவத்தில் இந்த இருவர் உள்பட ஆசா த்பாட்ஷா, மணிகண்டன், ராஜலிங்கம், ரபிக், பழனி, சபரி, கண்ணன், கோபி உள்ளிட்ட 10 பேர் ஈடுபட்டதும், அந்த பத்து பேரில் ரபிக் மற்றும் ராஜலிங்கம் உள்ளிட்ட இருவர் பழனியில் நடைபெற்ற ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து வல்லத்திராகோட்டை காவல்துறையினர் ரஞ்சித் லட்சுமி நாராயணன் ஆசாத் பாட்ஷா மணிகண்டன் ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்த ஏழு சவரன் தங்க நகை, இர ண்டு இருசக்கர வாகனங்கள், நான்கு பட்டாகத்திகள் மற்றும் இரண் டு செல்போன்களையும் பறிமுதல் செய்த நிலையில் மேலும் இந்த கொள்ளை வழக்கில் இருவர் மற்றொரு திருட்டு வழக்கில் சிறையில் உள்ள நிலையில் மீதமுள்ள நான்கு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×