மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் - அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு

மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.இலவவச சைக்கில் வழங்கும் நிகழ்ச்சி
மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்    - அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் பொன்னமராவதி ஒன்றியங்களில் 1,313 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில்கொண்டு எண்ணற்ற பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கு சரியான நேரத்திற்கு சென்றுவர விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி பள்ளிக்கு சென்று வருவதால் நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது. இதுபோன்ற தமிழக அரசின் நலத்திட்டங்கள் பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி ஆர்வத்தினை தூண்டுவது மட்டுமல்லாமல், கல்வியில் இடைநிற்றலையும் தவிர்க்கிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com