என் மலர்
புதுக்கோட்டை
- உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விராலிமலை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 650 காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் திரளான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
இங்கு காலை 8 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் தொடக்க விழாவுக்கு தி.முக மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தனித்தனியாக திரண்டு இருந்தனர்.
அப்போது வி.ஐ.பி. களில் முதல் ஆளாக தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். உடனே போட்டிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அப்போது தி.மு.க. தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அமைச்சர் வந்த பின்னர் தான் போட்டி தொடங்க வேண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கர் தான் ஆகவே அவர் போட்டியை தொடங்கி வைக்கலாம் என்றனர்.
இதனால் விழா மேடையில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி போட்டியை தொடங்கி வைத்தார்.
1¼ மணி நேரம் தாமதமாக போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ.முத்துராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
- ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அடுத்த வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஜல்லிகட்டு போட்டியினை ராஜவயல், வடமலாப்பூர் குருக்களையாப்பட்டி ஆகிய 3 கிராமத்து நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து நடத்துவர்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான அனுமதியும் அரசிடம் பெறப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர், காளை அடக்கும் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து இதற்கான பெயர் பதிவும் தொடங்கி நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, காளை பிடிப்பவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பாக வடமலாப்பூரில் பிடாரி அம்மன் மற்றும் கருப்பர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் ஜல்லிகட்டு காளைகளுக்கு கற்பூரம் ஏற்றி மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து ஜல்லிகட்டை தொடங்கி வைத்தார். அவருடன் புதுக்கோட்டை எம்.எல்.ஏ. முத்துராஜா, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முதலில் ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது.
இவ்வாறு முன்பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. தனித்தனியாக குழுக்களாக பிரிக்கப்பட்ட 250 காளையர்கள் களத்தில் காளைகளை அடக்க களமாடினார்கள். ஜல்லிகட்டு போட்டியை காணவந்த பொதுமக்கள் இதனை கண்டு மெய் சிலிர்த்து கைத்தட்டி, விசில் அடித்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
காளைகளை பிடிக்கும் போது காயம் பட்ட வீரர்கள் உடனடியாக அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிறப்பாக களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும், எதற்கும் அஞ்சாமல் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த ஜல்லிகட்டு போட்டி நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
- நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளான பொங்கல் வந்துவிட்டாலே கிராமங்கள் களை கட்ட தொடங்கிவிடும். 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவில் பல்வேறு நூதன போட்டிகள் நடத்தி கிராம மக்கள் அசத்துவது வழக்கம்.
மாடுகளை பிடிக்கும் வீர விளயாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பொங்கல் விழாவில் நடைபெற்ற பல்வேறு நூதன போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வார்கள். இந்த மோதலில் உடையும் தேங்காயை, மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர். ஜல்லிக்கட்டு போல பல்வேறு சுற்றுக்களாக இந்த போட்டிகள் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் விளையாட்டு திடலில் போர் தேங்காய் உடைக்கும் விளையாட்டு போட்டி நடந்தது. பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து முன்பதிவு செய்து போட்டியில் கலந்து கொண்டனர்.
தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் வைத்து மோதி உடைத்தனர். சிலர் மோதி உடைத்த தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். போர் தேங்காய் பரிசுப் போட்டியில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மாவடுகுறிச்சி முத்துக்குமார் அதிக தேங்காய்களை உடைத்து முதல் பரிசு ரூ.4004 மற்றும் சுழற்கோப்பை பெற்றார்.
இதேபோல செரியலூரில் நேற்று நடந்த போட்டியில் நூற்றுக்கணக்கான தேங்காய்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், இது எங்களின் சந்தோசத்துக்காக நடத்தப்படும் போட்டி. இந்த போட்டியில் பங்கேற்க போர்காய் தேங்காய்களுக்காக ஒவ்வொரு கிராமமாக அலைந்து தேங்காய்கள் வாங்க வேண்டும். 2 மாதங்களுக்கு முன்பே தேங்காய் வாங்கிவிட்டோம் என்றனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகை மலை ஊராட்சி, கள்ளை தொட்டியப்பட்டியில் கம்பளத்து நாயக்கர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வருடாந்தோறும் தை மாதம் 1-ந்தேதி கள்ளையில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பாக ஊர் கவுண்டர் முன்னிலையில் பரிவட்டம் வாங்கி எட்டுப்பட்டி பொதுமக்கள் முன்பாக மாரியம்மன் கோவிலை வலம் வந்து சுற்றி மாடுகளை விரட்டி மறித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து அவர்களின் பாரம்பரிய கலையான தேவராட்டம், புல்லாங்குழல் வாசித்தல், கோமாளி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது,
விழாவில் கல்லை ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாடு மறித்தல் நிகழ்ச்சியில் 70 களை மாடுகள், நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்களும் கலந்து கொண்டனர், நிகழ்ச்சியை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கண்டுகளித்தனர்.
- ஜல்லிக்கட்டை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார்.
- பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து, களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் அதிக இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும், ஒரே ஜல்லிக்கட்டில் அதிக எண்ணிக்கையிலான காளைகள் (2,000) கலந்துகொண்ட மாவட்டமாகவும், ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை திகழ்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் அமைந்துள்ள மாயன் பெருமாள் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று வன்னியர் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் ஆகியோர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கிவைத்தார். முதலில் வாடிவாசல் வழியாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பதிவு செய்யப்பட்ட 800 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்பட்டன. அதே போல் 300 மாடுபிடி வீரர்கள் ஒவ்வொரு சுற்றாக அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் காளையை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன. காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்து வந்தன. அதில் பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களை கண்டு அஞ்சாமல் அவர்களை துச்சமாக நினைத்து களத்தில் நின்று விளையாடி பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. வீரர்களும் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன், மோட்டார் சைக்கிள், கட்டில், பீரோ, எவர் சில்வர் பாத்திரங்கள் பரிசாக வழங்கினார்.
காயமடைந்த வீரர்களுக்கு மருத்து உதவி செய்ய மருத்துவகுழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.
ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. தீபக் ரஜினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர்.
- கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.
புதுக்கோட்டை:
தமிழகத்தின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இதேபோல் இலங்கை கடற்கொள்ளையர்களாலும் தமிழக மீனவர்கள் அவ்வபோது தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அவர்களை வழிமறித்தனர்.
பின்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து 18 மீனவர்களிடமும் நடுக்கடலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. கைதான மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின்னர் கைதான 18 மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து மீனவர்கள் 18 பேரும் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். கடந்த ஒரு வாரத்தில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டத்தை சேர்ந்த 40 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 250 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல்.
தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
சுமார் 250 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 32 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.
- புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது.
புதுக்கோட்டை:
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் அவரது மனைவி ரம்யாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல்குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு சோதனை நடத்தினர்.
இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது மொத்தம் 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற இருந்தது.
ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் இந்த வழக்கை மீண்டும் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
- கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பொங்கலை பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அலங்காநல்லூர், அவனியாபுரம் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத்திருவிழா, புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிசாவலில் இருந்து சீறிப் பாய்ந்த வண்ணம் உள்ளன.

280-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் மாடுகளை பிடிக்க களம் இறங்கியுள்ளனர். மாடு பிடி வீரர்களுக்கு சைக்கிள், பீரோ, கட்டில், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றன.
ஆட்சியர் ஐ.எஸ். மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஜல்லிக்கட்டையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
- ஜல்லிக்கட்டில் களம் காண காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
- ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
கந்தர்வகோட்டை:
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தை பொங்கலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாகும். எனினும் தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை திகழ்கிறது. ஜனவரி முதல் மே மாதம் வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு களை கட்டும். கோவில் திருவிழாக்களில் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு காணப்படும்.
புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவையொட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தச்சங்குறிச்சியில் நடைபெறுகிறது.
இதற்காக வாடிவாசல், கேலரி, இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு ஆன்லைன் பதிவு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி யது.
ஆன்லைனில் பதிவு செய்த மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டில் களம் காண காளைகளும், காளையர்களும் தயாராகி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதனை பின்பற்றி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்வதற்கு, கொம்புகளால் முட்டி தூக்கி தள்ளுவதற்கும் காளைகளின் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் காளைகளை அடக்குவதற்கும் மாடுபிடி வீரர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 48 ஜல்லிக்கட்டும், 7 இடங்களில் மஞ்சுவிரட்டும், 17 இடங்களில் வடமாடு மஞ்சுவிரட்டும் என மொத்தம் 72 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
இதனிடையே இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் தொடா்பாக தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இதனால் தேர்தல் நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்காது என்ற நிலையில் முன்கூட்டியே ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த பகுதி மக்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
- ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
- ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளூர் மக்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை:
2024ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 6-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.
தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர், உள்ளூர் மக்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.
- டீக்கடைக்குள் புகுந்த லாரி இரண்டு வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
- படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் நமண சமுத்திரம் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக போலீஸ் நிலையத்துக்கு எதிரே ஒரு டீக்கடை, பேக்கரி உள்ளது. இந்த வழியாக வாகனங்களீல் செல்வோர், சுற்றுலா பயணிகள், கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் பேக்கரி முன்பாக வேனை நிறுத்தி டீ குடித்து செல்வது வழக்கம்.
இன்று அதிகாலை இந்த கடை முன்பாக சென்னை, திருவள்ளூரில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்திக்கு மாலை அணிந்த பக்தர்கள் வந்த வேன், அதே பகுதியில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வந்த மற்றொரு வேன், திருக்கடையூரில் இருந்து ராமநாதபுரம் சென்ற மற்றொரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வேன்கள், காரில் வந்த 25 பேர் பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அரியலூரில் இருந்து சிவகங்கைக்கு சிமெண்ட் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்றது. லாரியை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டினார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் மீதும், சாலையோரம் நின்றிருந்த 2 வேன், கார் மீதும் பயங்கரமாக மோதியது. மேலும் அருகே இருந்த இருசக்கர வாகனங்கள் மீதும் பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் கடையில் டீ குடித்துக்கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம் திருவெல்லைவயல் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோகுல கிருஷ்ணன் (வயது 26), ஊத்துக்கோட்டை பனையன்சேரியை சேர்ந்த ஜெகநாதன் (60), வேனில் அமர்ந்திருந்த ஓம் சக்தி கோவில் பக்தரான சீனிவாசன் மனைவி சாந்தி (55), மதுரவாயல் அன்னை இந்திரா நகர் தெரு சுரேஷ் (34), சென்னை அமைந்தகரை சதீஷ் (24) ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 19 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
- இதுவரை 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
- ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயலில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிக்குள் கடந்த டிசம்பர் 26-ந் தேதி மனித மலம் கண்டெடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கடந்தும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படாமல் இதுவரை யாரும் கைது செய்யப்படாமல் இருப்பது அந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்த சம்பவத்தினை முதலில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் இந்த ஆண்டு ஜனவரியில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த குடிநீர் தொட்டி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. தொடர்ச்சியாக அங்கு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் தாமதமாகி வருகிறது. ஓராண்டை கடந்தும் இயல்பு நிலை இன்னமும் திரும்பாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
எங்களுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை தேவை. இந்த சம்பவத்திற்குப் பிறகு கிராமத்தில் சாதிப்பிளவுகள் இன்னும் ஆழமாகியுள்ளன என வேதனை தெரிவித்தார்.
சி.பி.சி.ஐ.டி. துணை போலி சூப்பிரண்டு பால்பாண்டி கூறும்போது, இந்த விவகாரத்தில் சாட்சிகள் யாரும் இல்லாததால் அறிவியல் பூர்வமான முறையில் சோதனையும், அதன் அடிப்படையிலான விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை முத்துக்காடு, இறையூர், காவிரி நகர் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 31 நபர்கள் டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் ஒருவர் குரல் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவர்களில் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்றார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சி.கே.கனகராஜ் கூறுகையில், கடந்த வாரம் நாங்கள் வேங்கை வயல் கிராமத்திற்கு சென்றோம். ஓராண்டை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த வழக்கினை திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக சந்தேகிக்கின்றோம்.
இப்போதும் தலித் மக்கள் அதிக பயத்தில் இருக்கிறார்கள். நாங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்தோம், ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தலித் மக்களுக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்க முயற்சி செய்து வருகிறோம் என்றார்.
சம்பவம் நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை. முடிவு இல்லாத தொடர்கதை போல நீளும் வேங்கை வயல் வழக்கு விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தி வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்ப செய்யவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






