என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்றனர்
    • கறம்பக்குடி ஒன்றியத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி கண்ணுத்தோப்பு மற்றும் திருப்பக் கோவிலில் உள்ள டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதடைவதால் இப்பகுதியில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இது குறித்து கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரையிடம் அப்பகுதியினர் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையின்படி எம்.எல்.ஏ., மின்சாரத்துரை உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி அப்பகுயில் நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகளை வைத்து மக்கள் பயன்பாட்டிற்காக அவர் தொடங்கி வைத்தார்.மேலும் இருங்களன் விடுதி மற்றும் ராகியன்விடுதியில் பழுதான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடங்களை பார்வையிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடங்களை கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியினை ஒதுக்கி கட்டிடத்தை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஆத்மா கமிட்டி சேர்மனுமான முத்துகிருஷ்ணன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெற்றி வேந்தன், சமூக ஆர்வலரும் ஆசிரியருமான அப்பு வடக்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் செயலாளர் வீரமுத்து, அன்பழகன், பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




    • சீனாவில் கொரோனா புதிய வகையான பி.எப். 7 வேகமாக பரவி வருகிற நிலையில், சேக் அப்துல்லாவை கொரோனா பரிசோதனை முடிந்து தனிமைப்படுத்தி உள்ளனர்.
    • புத்தாண்டு தினத்தில் சீனாவில் சிகிச்சையில் இருந்த சேக் அப்துல்லா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை போஸ்நகரை சேர்ந்த சையது அபுல்ஹாசன் சாதலியின் மகன் சேக் அப்துல்லா (வயது 22). இவர் சீனாவில் ஜியான்ஹனா மாவட்டத்தில் கியூஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பு கடந்த 2017-ம் ஆண்டு சேர்ந்து படித்தார்.

    அதன்பின் கொரோனா காலகட்டத்தில் சேக் அப்துல்லா சொந்த ஊரான புதுக்கோட்டை திரும்பினார். இங்கிருந்தபடியே ஆன்லைனில் படிப்பை தொடர்ந்தார். இந்த நிலையில் 5 ஆண்டுகள் படிப்பு முடிந்த நிலையில் மருத்துவ பயிற்சிக்காகவும், சான்றிதழ் பெறுவதற்காகவும் வருமாறு சீனாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து சேக் அப்துல்லாவை அழைத்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 11-ந் தேதி சேக் அப்துல்லா மீண்டும் சீனா புறப்பட்டு சென்றார்.

    சீனாவில் கொரோனா புதிய வகையான பி.எப். 7 வேகமாக பரவி வருகிற நிலையில், சேக் அப்துல்லாவை கொரோனா பரிசோதனை முடிந்து தனிமைப்படுத்தி உள்ளனர். அதன்பின் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சென்ற அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அதே பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் சீனாவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த சேக் அப்துல்லா நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் இருந்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டில் இருந்தவர்கள் கதறி அழுதனர். மாணவர் இறப்பு தொடர்பாக அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கையில், ``சேக் அப்துல்லாவின் உடல்நிலை மோசமாக இருந்ததில் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்டவை பாதிப்படைந்ததால் இறந்ததாக பல்கலைக்கழகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பு இருந்ததாக அவர்கள் எதுவும் கூறவில்லை'' என்றனர்.

    ஆங்கில வருடம் 2022 முடிந்து 2023-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இந்த நிலையில் புத்தாண்டு தினத்தில் சீனாவில் சிகிச்சையில் இருந்த சேக் அப்துல்லா இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது மரணம் குறித்த தகவல் கேட்டு குடும்பத்தினர், உறவினர்கள் பலரும் சோகமடைந்தனர்.

    • ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
    • ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர் வேண்டுகோள்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அபுல் ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள கடந்த 2017-18 ஆம் ஆண்டு மருத்து மாணவராக சேர்ந்து அதன் பின் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பினார்.

    பின்னர் அவர் ஆன்லைன் கல்வி மூலமாகவே மருத்துவ கல்வியை முடித்து கடந்த 11-ந்தேதி மீண்டும் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றார்.

    அப்போது ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பொன்னமராவதியில் குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு கோழியை விழுங்கியது
    • தீயணைப்புதுறையினர் மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தில் பொதுமக்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் சிவாஜிகணேசன் என்பவரது வீட்டின் அருகே மலை பாம்பு ஒன்று அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கோழியை முழுங்கி கொண்டிருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சந்தானம் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் தூத்தூர் கிராமத்திற்கு சென்று கோழியை முழுங்கி அப்பகுதி மக்களை அச்சுறுத்திய பத்தடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பிடித்தனர் . பின்னர் அந்த மலைப் பாம்பை வனகாப்பு பகுதியில் விட்டனர்.





    • ஆலங்குடியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
    • கால்நடை மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றன.

    ஆலங்குடி

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், தீவனப் பயிர் மற்றும் தீவனபுல் சாகுபடி விளக்கம், கால்நடை மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.இம்முகாமில் மண்டல இணை இயக்குனர் மரு. சம்பத் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் கால்நடை உதவி மருத்துவர் பாவை, உதவி கால்ந டை மருத்துவர் சுவிதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வடிவேலு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வின்சென்ட் தேபவுல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,





    • ஆலங்குடியில் வழிபறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்
    • இது குறித்து புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலம் கச்சிராம்பட்டியை சேர்ந் த கருப்பையா மகன் பழனிவேல்( வயது 48). இவர் மீன் வியாபாரத்துக்கு அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திருவரங்குளம் தனியார் கல்லூரி எதிரில் அவரை மறித்த ஒருவர் அவரிடம் இருந்து பொருட்களை பறித்து சென்றுள்ளார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இலுப்பூர் தாலுகா கீழக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் விஜய் (எ) விஜய்பிரசாத் (வயது 17) என்பது தெரிய வந்தது. தலைறைவான அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கீழக்குறிச்சியில் வைத்து கைது செய்தனர். பின்னர் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர்கள் காப்பகத்தில் அடைத்தனர்.




    • ஆலங்குடியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்
    • ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்

    ஆலங்குடி:

    தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் விற்பனை நடைபெறுவதாக ஆலங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி தெற்குப்பட்டியைச்சேர்ந்த சுப்பிரமணி (எ) தென்றல்மணி (வயது 51) என்பவர் வீட்டின் அருகே லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.600 பறிமுதல் செய்தனர். பின்னர் ஆலங்குடி சப் இன்ஸ்பெக்டர் லதா அவர் மீது பதிவு செய்து கந்தர்வகோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தார்.


    • புனித அதிசய அன்னை ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    • திருப்பலிக்கு பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது

    ஆலங்குடி:

    ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்குத்தந்தை ஆர்.கே., உதவி பங்குத்தந்தை கித்தேரிமுத்து ஆகியோர் கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் கும்மங்குளம், செம்பட்டி விடுதி, அய்யங்காடு, குளவாய்ப்பட்டி, பாத்தம்பட்டி, வாழைக்கொல்லை, நெம்மக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு தினம் பிறப்பதை அறிவிக்கும் விதமாக உன்னதங்களிலே இறைவனுக்கு என்ற பாடல் பாடப்பட்டது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது. திருப்பலிக்கு பின்னர் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது. இதனை ெதாடர்ந்து அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.






    • அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது
    • மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு அறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    புதுக்கோட்டை:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, மூன்று மாதத்திற்கு ஒருமுறை மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவி, பேலட் யூனிட் உள்ளிட்டவைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு பாதுகாப்பு வைப்பறையினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், தனி வட்டாட்சியர் (தேர்தல்) கலைமணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


    • கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
    • ஜல்லிக்கட்டு நடத்த புதிய நிபந்தனைகள் விதிக்கபட்டது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023ம் ஆண்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சி நடத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் 1 மாதத்திற்கு முன்னதாகவே விண்ணப்பம் செய்ய வேண்டும். அனுமதி கோரி வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அரசிதழில் பதிவு செய்ய விழா நடைபெறுவதற்கு 20 தினங்களுக்கு முன்னதாக சம்மந்தப்பட்ட கிராமம் மற்றும் விழா நடைபெறும் நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அரசாணை பெறுவதற்கு கால்நடை பராமரிப்புத் துறை ஆணையருக்கு கருத்துரு அனுப்பப்பட வேண்டும் என அரசால் ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்றப்பட வேண்டும். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கான முன்பதிவு முறையை மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் எண்ணிக்கையில் இணையதளம் வாயிலாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பம் செய்துகொள்ள வேண்டும். அதன்பேரில், உரிய ஆவணங்கள் மற்றும் மருத்துவச் சான்றின் அடிப்படையில், பரிசீலனை செய்து தகுதியான மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகளுக்கு முறைப்படி அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்களும் அரசின் நிலையான வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடித்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போன்ற நிகழ்ச்சிகளை பாதுகாப்பாகவும் அரசின் வழிகாட்டுதல்களின்படியும் சிறப்பாக நடத்திட போதிய ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.


    • மேலைச்சிவபுரி கணேசர் கல்லூரியில்
    • முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் 1991-94ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் ம.செல்வராசு தலைமை வகித்தார். பேராசிரியர் வே.அ.பழனியப்பன் வரவேற்றார். ஒய்வு பெற்ற பேராசிரியர்கள் திருமா.பூங்குன்றன், ராமாயி, அரங்கநாதன், ரோஸ்லெட், விஜயரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். விழாவில் 1991-1994ல் பயின்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழாசிரியர்களாக பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரிக்கால அனுபவங்களை, நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து முன்னாள் மாணவ, மாணவிரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவினை முன்னாள் மாணவர் தமிழாசிரியர் சி.எஸ்.முருகேசன் ஒருங்கிணைத்தார். தமிழாசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார். முன்னதாக முன்னாள் மாணவ, மாணவியர்கள் தங்களது வாழ்வில் கல்வி ஒளியேற்றிய ஒய்வு பெற்ற பேராசிரியர்களை பூரண கும்ப மரியாதையுடன் மாலை அணிவித்து வரவேற்றனர்.


    • உதயநிதி பிறந்தநாள் விழா:
    • விராலிமலையில் தி.மு.க சார்பில் கோலப்போட்டி

    புதுக்கோட்டை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, 35-வது நிகழ்ச்சியாக, மாவட்ட தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் கே.கே செல்லப்பாண்டியன் தலைமையில் விராலிமலை மேற்கு ஒன்றியம், விராலிமலை ஊராட்சி 5-வது வார்டில் விராலிமலையில் தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் ஏற்பாட்டில் கோலப்போட்டி நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வண்ண வண்ண கோலங்கள் வரைந்தனர். நிகழ்வில், ஒன்றிய செயலாளர் இளங்குமரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் எம்.பழனியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செ.குறிஞ்சிவாணன், ஒன்றிய நிர்வாகிகள், ஏ.பி.ஆர்.ராஜாங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிவா விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, பிரபாகரன் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்


    ×