என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவிலில் மிக–வும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ ஆத்மநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு–தோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடை–பெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு மார்கழி மாத திரு–வாதிரை திருவிழா கடந்த கடந்த (டிசம்பர்) மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருவாதிரை திருத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் மாணிக்கவா–சகரை எழுந்தருள செய்த–னர். தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தொடங்கி வைத்த–னர். இதையடுத்து ஆவுடை–யார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிரா–மங்களை சேர்ந்த பல்லாயி–ரக்கணக்கான பக்தர்கள், ஆத்மநாதா, மாணிக்க–வாசகா என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் 4 ரத வீதிக–ளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீ–சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கத்தினர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்
    • தீண்டாமையை கடைப்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, பாதிக்கப்பட்டதலித் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய செயலாளர் சுகந்திரூபவ், மாநில பொது செயலாளர் ராதிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சலோமி, மாதர்சங்க மாவட்ட செயலாளர் சுசீலாரூபவ், தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அந்த மனுவில், சம்பவம் நடந்து ஒருவார காலமாகியும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடியவர்கள் கைது செய்யப்படவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கும் ஏற்பாடு உள்ளது. மலம் கலக்கப்பட்ட குடிநீரை குடித்த அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடி க்கப்படுகின்றன. இதற்கென்று மாவட்ட கலெக்டர் உருவாக்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஒரு வார காலத்தில் 50-க்கும் மேற்பட்ட தீண்டாமைப் புகார்கள் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய தலையீடு செய்து தீண்டாமையை கடைப்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, பாதிக்க ப்பட்டதலித் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    • மொத்தம் 19 பேர் பணியிடம் மாற்றப்பட்டிருக்கின்றனர்

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிலரை மாவட்டத்திற்கு வேறு போலீஸ் நிலையங்களுக்கு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிலர் ஒரே சப்-டிவிஷனுக்குள்ளேயும், சிலர் பிற சப்-டிவிஷன்களுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 19 பேர் பணியிடம் மாற்றப்பட்டிருக்கின்றனர். இதற்கான உத்தரவை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பிறப்பித்துள்ளார்.

    • அறுவடைக்கு கரும்புகள் தயார் ஆகிறது.
    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
    புதுக்கோட்டை:


    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரு வார காலமே உள்ள நிலையில், வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் பகுதியில் ஒரு சில விவசாயிகள் மூலமாக, நடவு செய்துள்ள செங்கரும்புகள் தற்சமயம் அறுவடை செய்ய தயாராக உள்ளது. கடந்த ஆண்டுகளில் இப்பகுதியில் விளைந்த செங்கரும்புகள் பத்து கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று விவசாய தோட்டங்களில் ரூ.150 வரை விற்பனை ஆனது. மேலும் சரக்கு வேன் மூலமாக, வாங்கி சென்ற வியாபாரிகள் கடைகள் மற்றும் பொது இடங்களில் கொண்டு சென்று கட்டு ஒன்று ரூ.200 மற்றும் ரூ.250 வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலைவாசி உயர்வு காரணமாக சற்று கூடுதல் விலைக்கு விற்பனை ஆகும் எனவும் இப்பகுதி செங்கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.


    • தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்
    • தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்களான, நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சரால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இத்திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.





    • புதுக்கோட்டை மாவட்டத்தில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக் செயல்படுத்திய நிறுவனங்களுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 பேருக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 - வீதம் பண முடிப்பும் வழங்கப்பட உள்ளது.கீழ்க்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக் செயல்படுத்திய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பேர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.சுற்றுச்சூ ழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, சுற்றுச்ழசூல் பாதுகாப்பு, பசுமை தயாரிப்புகள், பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர்மேலாண்மை மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூ ழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை.தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்டங்களில் மாவட்ட கலெக்டரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் மாநிலம் முழுவதும் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள் நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இன்னும் கூடுதல் விவரங்கள் பெற புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூ ழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அணுகலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.








    • தி.மு.க. இந்து மதத்திற்கு எதிரானது அல்ல என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
    • தமிழகத்தில் தலைவர் தளபதி ஆட்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது என கூறினார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில்,திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் என்பதாகும் ஆனால் சிலருக்கு அது கசப்பாக தெரிகிறது. திராவிட மாடல் ஆட்சி என்பது மோடியை போன்று 10 பேருக்காக ஆட்சி இல்லை, மாறாக எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பது. இன்றைக்கு தமிழகத்தில் தலைவர் தளபதி ஆட்சியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்ட பிரச்சனைகள் நிலவி வருகிறது. ஆனால் தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளை போல் பழகி வருவருவதால் தமிழகம் அமைதி பூங்காவாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது .தி.மு.க. ஒன்றும் இந்து மதத்திற்கு எதிரானது அல்ல, அனைத்து மதத்திற்கும் பொதுவானது அதற்கு எடுத்துக்காட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாதத்திற்கு ஒரு முறை ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வருகிறார் .இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன், பேராசிரியர் பெருந்தகை குறித்து சிறப்புரையாற்றினார். அதே போன்று அறந்தாங்கி வடக்கு ஒன்றியம் சார்பில் ராஜேந்திரபுரத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமைக் கழக பேச்சாளர் ஆடுதுறை உத்ராபதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




    • புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என கலெக்டர் உத்தரவிட்டார்
    • கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70,000 மதிப்புடைய மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், தலா ரூ.10,000 வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70,000 மதிப்புடைய மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஆட்சியரின் ேநர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், உதவி ஆணையர் (கலால்) எம்.மாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.




    • கொத்தமங்கலம் தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    புதுக்கோட்டை:

    திருவரங்குளம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கொத்தமங்கலம் தலைமை இடமாக புதிய ஒன்றியத்தை உருவாக்க கிராம மக்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மான் நிறைவேற்றப்பட்டதுபுதிய ஒன்றியம் வேண்டும் என்பது குறித்த பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய கவுன்சி லர்கள் மங்கையர்க்கரசி ராமநாதன்,விஜயா செல்வராசு கிராம கோ யில் கமிட்டி தலைவர் துரை ரெத்தினம் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் உள்ள திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளது. தற்போது மேற்கு, கிழக்கு என இரண்டு ஒன்றியங் களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி ஒன்றியத்தில் 13 ஊராட்சியும், திருவரங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் 17 ஊராட்சியும் சேர்த்து மொத்தம் 30 ஊராட்சிகளை ஒன்றிணைத்து கொத்தமங்கலம் தனி ஒன்றியமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.கொத்தமங்கலம் ஊராட்சி சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தனி ஒன்றியம் அமைய தீர்மா னம் நிறைவேற்றப்பட வேண்டும்.மேலும் போதிய இடவசதி உள்ள கொத்தமங்கலத்தில் தேவையான ஆவணங்களுடன் தயாரிக்கப்பட்ட கோப்புகளை சம்பந்தப்பட்ட அமை ச்சர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கையாக வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


    • அய்யப்ப பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
    • விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

     பொன்னமராவதி அருகே உள்ள மேலச்சிவபுரியில் ஸ்ரீ சுவாமிநாத ஐயப்ப பக்தர்கள் அங்கு உள்ள சுவாமிநாத விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி சென்று வருவது வழக்கம். அதனை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி தங்களது பயணத்தை தொடங்குவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக சபரிமலை பயணத்தை பக்தர்கள் தொடரவில்லை. தற்பொழுது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து செந்தில்குமார், சின்னையா குருசாமி தலைமையில் சரண கோஷம் முழங்க இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்களது புனித பயணத்தை தொடங்கியுள்ளனர். அதனை முன்னிட்டு அங்கு நடைபெற்ற அன்னதான விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    • சட்ட விரோதமாக மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இந்த தகவலின்படி போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆண்டிகுளம் டாஸ்மார்க் கடை அருகில் மது விற்றுக் கொண்டிருந்த கும்மங்குளத்தை சேர்ந்த ஜெஸ்டினை கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1000 பறிமுதல் செய்தனர். இதேபோல் பழைய கோர்ட் அருகில் மது விற்ற பள்ளத்திவிடுதியை சேர்ந்த மதியழகனை கைது செய்து அவரிடமிருந்து 6 மதுபாட்டில் மற்றும் ரூ. 970 பறிதல் செய்தனர். பின்னர் இருவரையும் ஆலங்குடி.காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது
    • நூலகத்திற்கு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை அரசு கிளை நூலகத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் இரும்பு அலமாரிகள், இருக்கைகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு அலமாரிகள், இருக்கைகள், மற்றும் மின்விசிறிகளை கிளை நூலகர் வனிதாவிடம் வழங்கப்பட்டது. விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பெப்சி முருகேசன், பால் குணசீலன், உறுப்பினர்கள் பரமசிவம், ஆறுமுகம் ,சேட்டு, வைர மூர்த்தி ,முனியராஜ், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





    ×