என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொத்தமங்கலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம்
- கொத்தமங்கலம் தலைமை இடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
புதுக்கோட்டை:
திருவரங்குளம் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து கொத்தமங்கலம் தலைமை இடமாக புதிய ஒன்றியத்தை உருவாக்க கிராம மக்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மான் நிறைவேற்றப்பட்டதுபுதிய ஒன்றியம் வேண்டும் என்பது குறித்த பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் கொத்தமங்கலம் மாரியம்மன் கோவில் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒன்றிய கவுன்சி லர்கள் மங்கையர்க்கரசி ராமநாதன்,விஜயா செல்வராசு கிராம கோ யில் கமிட்டி தலைவர் துரை ரெத்தினம் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் உள்ள திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளது. தற்போது மேற்கு, கிழக்கு என இரண்டு ஒன்றியங் களாக பிரிக்கப்பட்டுள்ளது.ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி ஒன்றியத்தில் 13 ஊராட்சியும், திருவரங்குளம் கிழக்கு ஒன்றியத்தில் 17 ஊராட்சியும் சேர்த்து மொத்தம் 30 ஊராட்சிகளை ஒன்றிணைத்து கொத்தமங்கலம் தனி ஒன்றியமாக அறிவிக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.கொத்தமங்கலம் ஊராட்சி சிறப்பு கூட்டத்தைக் கூட்டி தனி ஒன்றியம் அமைய தீர்மா னம் நிறைவேற்றப்பட வேண்டும்.மேலும் போதிய இடவசதி உள்ள கொத்தமங்கலத்தில் தேவையான ஆவணங்களுடன் தயாரிக்கப்பட்ட கோப்புகளை சம்பந்தப்பட்ட அமை ச்சர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கையாக வைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






