என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கம் கோரிக்கை
- வேங்கைவயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய மாதர் சங்கத்தினர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்
- தீண்டாமையை கடைப்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, பாதிக்கப்பட்டதலித் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய செயலாளர் சுகந்திரூபவ், மாநில பொது செயலாளர் ராதிகா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் சலோமி, மாதர்சங்க மாவட்ட செயலாளர் சுசீலாரூபவ், தலைவர் பாண்டிச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அந்த மனுவில், சம்பவம் நடந்து ஒருவார காலமாகியும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடியவர்கள் கைது செய்யப்படவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கும் ஏற்பாடு உள்ளது. மலம் கலக்கப்பட்ட குடிநீரை குடித்த அனைவருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல கிராமங்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடி க்கப்படுகின்றன. இதற்கென்று மாவட்ட கலெக்டர் உருவாக்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த ஒரு வார காலத்தில் 50-க்கும் மேற்பட்ட தீண்டாமைப் புகார்கள் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய தலையீடு செய்து தீண்டாமையை கடைப்பிடித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதோடு, பாதிக்க ப்பட்டதலித் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






