search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் திருவாதிரை தேரோட்டம்
    X

    அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் திருவாதிரை தேரோட்டம்

    • அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவிலில் ஆத்மநாத சுவாமி கோவில் திருவாதிரை தேரோட்டம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவிலில் மிக–வும் பழமை மற்றும் சிறப்பு வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான ஸ்ரீ ஆத்மநாதசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு–தோறும் மார்கழி மாத திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக நடை–பெறுவது வழக்கம். அதே போன்று இந்த ஆண்டு மார்கழி மாத திரு–வாதிரை திருவிழா கடந்த கடந்த (டிசம்பர்) மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று திருவாதிரை திருத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவினையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத் தேரில் மாணிக்கவா–சகரை எழுந்தருள செய்த–னர். தேர் சக்கரத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் தேங்காய் உடைத்து தேர் வடத்தை தொட்டு தொடங்கி வைத்த–னர். இதையடுத்து ஆவுடை–யார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிரா–மங்களை சேர்ந்த பல்லாயி–ரக்கணக்கான பக்தர்கள், ஆத்மநாதா, மாணிக்க–வாசகா என்று பக்தி கோஷம் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் 4 ரத வீதிக–ளிலும் வலம் வந்து பின்பு தேரடியை அடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீ–சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×