என் மலர்
உள்ளூர் செய்திகள்

நூலகத்திற்கு பொருட்கள் வழங்கும் விழா
- 20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது
- நூலகத்திற்கு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது
புதுக்கோட்டை
கந்தர்வகோட்டை அரசு கிளை நூலகத்திற்கு ரோட்டரி சங்கம் சார்பில் இரும்பு அலமாரிகள், இருக்கைகள் மற்றும் மின்விசிறிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 20 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு அலமாரிகள், இருக்கைகள், மற்றும் மின்விசிறிகளை கிளை நூலகர் வனிதாவிடம் வழங்கப்பட்டது. விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பெப்சி முருகேசன், பால் குணசீலன், உறுப்பினர்கள் பரமசிவம், ஆறுமுகம் ,சேட்டு, வைர மூர்த்தி ,முனியராஜ், தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story






