என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்-அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
    X

    தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்-அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தல்

    • தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்
    • தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்களான, நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சரால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இத்திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.





    Next Story
    ×