புதுக்கோட்டையை சேர்ந்த பயிற்சி டாக்டர் சீனாவில் உயிரிழப்பு

ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர் வேண்டுகோள்.
புதுக்கோட்டையை சேர்ந்த பயிற்சி டாக்டர் சீனாவில் உயிரிழப்பு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் சையது அபுல் ஹாசன் மகன் ஷேக் அப்துல்லா. இவர் சீனாவில் உள்ள கடந்த 2017-18 ஆம் ஆண்டு மருத்து மாணவராக சேர்ந்து அதன் பின் கொரோனா பாதிப்பால் சொந்த ஊருக்கு திரும்பினார்.

பின்னர் அவர் ஆன்லைன் கல்வி மூலமாகவே மருத்துவ கல்வியை முடித்து கடந்த 11-ந்தேதி மீண்டும் சீனாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு பயிற்சிக்காக சென்றார்.

அப்போது ஷேக் அப்துல்லா அங்கு உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சீனாவில் உயிரிழந்துள்ளார். கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சீனாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் அப்துல்லாவை தாயகம் அழைத்து வந்து உரிய சிகிச்சை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கடந்த மாதம் 26-ந்தேதி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com