என் மலர்
புதுக்கோட்டை
- ஆலங்குடி நூலகத்தில் மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர்
- ஆசிரியர் சசிகுமார் கலந்து கொண்டு கதைகள் கூறி மாணவர்களுக்கு மேலும் ஆர்வமூட்டினார்
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி- கலிபுல்லா நகர் கிளை நூலகத்தில் மாணவர்களுக்கு கதை சொல்லுதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் மாணவர்கள் மத்தியில் நூலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலங்குடி கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் கருணாகரன் ஆசிரியர் மாணவர்களை நூலகத்திற்கு அழைத்துச் சென்று, நூலகத்தில் புதிய உறுப்பினர்களாக இணைத்தும் மாணவர்கள் மத்தியில் நூலத்தில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். நிகழ்வில் ஆசிரியர் சசிகுமார் கலந்து கொண்டு கதைகள் கூறி மாணவர்களுக்கு மேலும் ஆர்வமூட்டினார். முடிவில் நூலகர் ரெங்கசாமி நன்றி கூறினார்.
- தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்
- ரூ.25 ஆயிரம் நஷ்டம்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியை சேர்ந்த கோவிந்தன் மகன் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போர் ஒன்று உள்ளது. இந்த போரில் திடீரென்று தீ பற்றி எரிந்துள்ளது. தகவல் அறிந்து வந்த ஆலங்குடி தீயணைப்பு தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வைக்கோல் போர் முற்றிலும் சேதம் அடைந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்
- காபி கடையில் விற்பனை
ஆலங்குடி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்ப டை போலீசார் அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்..அப்போது வடகாடு கரம்பக்காடு பகுதியை சேர்ந்த கருப்பையா மக ன் நீலகண்டன் (வயது 43 )இவர் கைகாட்டி அருகில் ஒரு காபி கடையி ல் ஆன்லைன் லாட்டரி சீட்டு வைத்து விற்றுள்ளார்.அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவரிடமிருந்து மூன்று இலக்கு ஆன்லைன் லாட்டரி சீட்டு பதுக்கிவைத்திருந்ததை கைப்பற் றி கைது செய்தனர்.பின்னர் வடநாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகிறார்.
- மளிகை கடையில் ரகசிய விற்பனை
- ரொக்க பணமும் பறிமுதல்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் புகையிலை பொட்டலங்கள் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அமைத்து அப்பகுதியில் சோதனை ஈடுபட்டனர். அப்போது நெடுவாசல் பகுதியை சேர்ந்த பவளத்தாள்புரம் கிராமத்தில் உள்ள ராமசாமி மகன் குருநாதன் (வயது45) என்பவர் ஆவணம் கைகாட்டி ஒரு மளிகை கடையில் சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்தார். அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீசார் ஹான்ஸ், கூல்லிப், விமல் மற்றும் ரொக்கம் ரூ.1600 ஆகியவைகளை கைப்பற்றினர். மேலும் குருநாதனை கைது செய்து வடகாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் ஆர்ச் பகுதியில் புதுக்கோட்டை டவுன் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஒரு காரை மடக்கினர். அந்தக் காரில் டிரைவர் உட்பட 3 பேர் இருந்தனர்.பின்னர் அந்தக் காரில் போலீசார் சோதனை செய்த போது இருக்கைக்கு அடியில் 37.5 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் கார் மற்றும் குட்கா ரூ.1000 ரொக்க பணம் பறிமுதல் செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் கைதானவர்கள் தஞ்சாவூர் ஒரத்தநாடு திருவோணம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 37 ),புதுக்கோட்டை வெட்டன் விடுதி பாப்பான் விடுதி தமிழரசன் (38), புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த கென்னடி (44) என்பது தெரியவந்தது. இவர்கள் தஞ்சாவூரில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகளை புதுக்கோட்டையில் விற்பனை செய்ய கடத்தி வந்தபோது போலீசில் சிக்கினர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ. 75 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்துள்ளார்.
- கறம்பக்குடியில் நடைபெற்றது
- இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் ரெகுநாதபுரம் அருகே உள்ள பூனைக்குத்தி அய்யனார் கோவில் திடலில் ஒன்றிய அளவிலான கிராம கோவில் பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பூசாரிகள் பேரவை தலைவர் விசுவலிங்கம் தலைமை தாங்கினார். மேலும் பூசாரிகள் சங்க பேரவை மாவட்ட இணை அமைப்பாளர் திரு சங்கு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வரும் 29 .1 .2023 அன்று ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள மாநில கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வதெனவும், மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஊக்கத் தொகையின் படி எல்லா கிராம கோவில் பூசாரிகளுக்கும் வழங்க வேண்டும் எனவும், அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம் கலந்து கொண்டார். முடிவில் ஒன்றிய அமைப்பாளர் நன்றி கூறினார்.
- விளையாட்டுப் போட்டியில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் நர்சிங் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
- 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார்.
புதுக்கோட்டை:
டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் சென்னை கிழக்கு மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் மௌண்ட் சீயோன் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர். இறுதியாண்டு மாணவர்கள் ஆர்.விக்ரமன் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கபதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
எம்.ஜீவா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார். ஆர்.மோகன் பிரசாத் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றார். இரண்டாம் ஆண்டு மாணவி வி.கீர்த்தியா நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கபதக்கம் வென்றார். இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.அப்துல்லா அசீஸ் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதகம் வென்றார்.
போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று பதக்கங்கள் வென்ற சாதனையாளர்களை மௌண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரண்ஸ் ஜெயபாரதன், கல்லூரியின் இயக்குனர், முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், கல்லூரியின் ஒருங்கினைப்பாள பேராசிரியை விவியன் ஜெய்சன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜாஸ்மின் ஷீலா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- குரு ஸ்பெயின் ஆர்டலை நம்பி மும்பை நிறுவனத்தில் ஆயில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பூங்கா நகரை சேர்ந்தவர் ரமேஷ் மகன் குருசபரிஷ்(வயது 24). இவர் வெளிநாட்டிற்கு எண்ணெய் வகைகளை அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவரது போனிற்கு ஸ்பெயின் நாட்டிலிருந்து பேசுவதாகவும், தங்கள் மருத்துவமனைக்கு டாஸ்மானியா ஆயில் தேவைபடுவதாக பேசியுள்ளனர்.
அதற்கு குருசபாரிஷ் தன்னிடம் அந்த ஆயில் இல்லை என கூறியுள்ளார். அடுத்த சில தினங்களில் குருவின் செல்போனுக்கு இன்னொரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் டாஸ்மானியா ஆயில் மும்பையில் இருப்பதாக தெரிவித்தார். உடனே குரு ஸ்பெயின் ஆர்டலை நம்பி மும்பை நிறுவனத்தில் ஆயில் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளார். முதற்கட்டமாக 10லிட்டர் ஆயில் அனுப்பப்பட்டது.
இதற்கு கூடுதலாக 5 சதவீதம் தள்ளுபடி செய்து கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து குரு 8 தவனைகளில் ரூ.16 லட்சத்து 19 ஆயிரத்து 999 அனுப்பியுள்ளார். அதன்பிறகு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த போன்காலுக்கு தொடர்பு கொண்டதற்கு எந்த பதிலும் இல்லை. இதனால் கொள்முதல் செய்த ஆயிலை மும்பை நிறுவனத்திற்கு திரும்ப அனுப்ப முயற்சி செய்தபோது அவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதை தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து கொண்ட குருசபரிஷ், மாவட்ட காவல் சூப்பிரெண்டுடிடம் புகார்செய்தார். சைபர் கிரைம் போலீசா ர் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். சினிமாவில் காண்பிக்கும் காட்சிகள் போல் போனில் பேசி மோசடி செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டில் தூங்கிய மாணவி மாயமானார்
- மாணவி வேங்கிடக்குளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள தெட்சிணாபுரத் தைச்சேர்ந்த மாதவன் மகள் மாதவி (வயது 17). வேங்கிடக்குளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் தூங்கியவர், விடியற்காலையில் பார்த்த போது படுக்கையில் இல்லாததை கண்டு தாய் அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், ஆலங்குடி காவல் நிலையத்தில் தாய் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடிவருகின்றனர்.
- மாணவர்களுக்கு திறனறித் தேர்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் திறனறித் தேர்வு எதிர்கொள்வது தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறினார்
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாள விடுதி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிவு தேர்வினை எதிர்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை விஜிலா ஜாய் தலைமை தாங்கினார். இதில் கந்தர்வகோட்டை ஒன்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் ரஹ்மத்துல்லா கலந்து கொண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் திறனறித் தேர்வு எதிர்கொள்வது தொடர்பாகவும் விரிவாக எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கணேஷ் பூபதி, அன்பழகன், பிரம்ன், நிர்மல் ராஜ், ராஜேந்திரன், அபிஷா, செல்வராணி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
- ஆலங்குடி அருகே தீக்காயம்பட்டு பெண் பலினானார்
- கேஸ் அடுப்பில் தீ எரிந்தபோது எதிர்பாராதவிதமாக கண்ணகியின் பின்புற சேலையில் தீ பற்றியது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்களம் பரப்பன்காடு கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மனைவி கண்ணகி (வயது51). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தனது வீட்டில் உள்ள கேஸ் அடுப்பில் தீ எரிந்தபோது எதிர்பாராதவிதமாக கண்ணகியின் பின்புற சேலையில் தீ பற்றியது. இதில் பலத்த காயத்துடன் கண்ணகி துடி துடித்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் மருத்துவரின் சிகிச்சை பலனில்லாமல் கண்ணகி இறந்து விட்டார். பின்னர் பிரேத பரிசோதனை செய்து உடலை அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து கண்ணகியின் மகன் சரவணன் (30) வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்
புதுக்கோட்டை:
தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்பட உள்ளது. பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து போன்ற போட்டிகள் நடத்தப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
மேலும், மாற்றுத்திறனாளிகள் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படும். முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.






