என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்
    • செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்தவர் பச்சைமுத்து மகள் ஜோதி (வயது 50). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. வீட்டில் இருந்த இவர் திடீரென காணாவில்லை.உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் காணாததால், ஜோதியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.இந்நிலையில் பெருங்கொண்டான் விடுதி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்தது காணாமல் போன ஜோதி என உறுதிபடுத்திக் கொண்டனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் போலீசார் ஜோதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாண்டான் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என குற்றச்சாட்டு
    • உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் வாண்டா கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவ்வழியாக செல்லும் அரசு பேருந்துங்கள் இங்குள்ள பஸ் நிறுத்த்தில் நீண்ட காலமாக நிறுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும்மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் சாலையில் நின்றதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இது குறித்து தகவல் அறிந்தசம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திரக்கோட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • தி.மு.க. அரசின் எதிர்மறை ஓட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கூட்டணியின் முதன்மை கட்சி. அந்த கட்சி பல்வேறு தேர்தல் வியூகங்களை எங்களோடு கலந்துபேசி இந்த தேர்தலை உறுதியாக வெல்லக்கூடிய ஒரு நிலையை எடுக்க வேண்டும், அதற்காக ஒரு நல்ல சூழலை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம்.

    மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி மீண்டும் உறுதியாக வெற்றி பெறவேண்டும். அதன் அடிப்படையிலேயே ஒரு வெற்றி முடிவை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது.

    த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். எங்களுடைய கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளது. இந்த நிலை தொடரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க. அரசின் எதிர்மறை ஓட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது எங்களது வெற்றியை உறுதி செய்யும்.

    இன்னும் இரண்டு நாட்களில் நல்ல முடிவு வெளிவரும் என்று எதிர் பார்க்கிறோம். பா.ஜ.க. தலைவராக அண்ணாமலையின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதால் பா.ஜ.க. தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சியாக உள்ளது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நின்றால் சிறப்பாக இருக்கும் என்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் அ.தி.மு.க.விற்கு விட்டுக் கொடுத்துள்ளது.

    இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நின்றால் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் சூழ்நிலை உள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வியூகத்தை நாங்கள் அமைத்துள்ளோம். நிச்சயம் அது வெற்றி வியூகமாக மாறும்.

    அரசியலில் நம்பிக்கைதான் மிக முக்கியம். அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சனை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அரசியலில் நேர்மறையான கருத்துக்களை மட்டுமே நினைப்பவன் நான்.

    இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சியின் செயல்பாடு வேகமாக இருக்கும். தற்போது 32 அமைச்சர்களை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தி.மு.க. நியமித்துள்ளது. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய கோரிக்கை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி ஊராட்சி சொக்கம்பேட்டை கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை குறித்த விழிப்புணர்வு மற்றும் சுகாதார ஆலோசனைமுகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கம் விடுதி பெருமாள் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சாந்தி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

    முகாமில் கலந்து கொண்ட கால்நடைகளுக்கு வேலா டி பட்டி கால்நடை தலைமை மருத்துவர் செந்தில்குமார் தலைமையில் மருத்துவர்கள் கவின் குமார், செந்தில் ராஜன், கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் சிகிச்சை அளித்தன ர் முகாமில் கால்நடைகளுக்கு அம்மை தடுப்பூசி குடற்புழு நீக்கம், கழிச்சல் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடைகளுக்கும் தாது உப்பு கரைசல் வழங்கப்பட்டது.முகாமில் சிறந்த கிடாரிக்கன்றுகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.முகாமில் 500க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஊராட்சி செயல் காளிமுத்து செய்திருந்தார்.


    • பனை ஓலை ெவட்டியபோது சம்பவம்
    • மின்சாரம் தாக்கி முதியவர் பலியானார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வெள்ளைச்செட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 70). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், பனை ஓலை மூலம் கூடை, பாய் உள்ளிட்டவைகளை பின்னி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டருகே வயல்காட்டில் உள்ள பனைமரத்தில் ஏறி ஓலை வெட்டியுள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பனைமரத்தின் அருகே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியிலிருந்து இவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த ஆவுடையார்கோவில் போலீசார் ராமனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்
    • வெளியே சென்ற பெண் மாயமானார்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே கே ராசியமங்கலம் கட்ராம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மகள் பிரதீபா (வயது 21). இவர் டிப்ளமோ நர்சிங் முடித்து புதுக்கோட்டை தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 20-ந் தேதி வெளியே சென்ற பிரதீபா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.

    • உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலியானார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ரமேஷ் (வயது 30). விவசாய கூலி தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் வீட்டில் முன்பு நடந்து சென்றார், அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    இச்சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த வடகாடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே உயரிழந்த ரமேஷின் உறவினர்கள் விபத்து ஏற்படுத்தி சென்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையில் சமாதானமான அவர்கள் அங்கிருந்து கலைந்து ெசன்றனர்.




    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்
    • அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, குடியரசு தினமான வரும் 26-ந் தேதியன்று காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதமந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதமந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதித்திட்டம், மக்கள் நிலை ஆய்வு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்புத் திட்டம் மற்றும் இதரப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.

    மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை ெதரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.







    • வேறொரு ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து விவசாயி வங்கி கணக்கில் ரூ.80 ஆயிரம் திருட்டு போனது
    • உதவுவது போல் நடித்து மர்ம நபர் கைவரிசை

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 64). விவசாயியான இவர் தனது வங்கி ஏ.டி.எம். கார்டுடன் கடந்த 15-ந்தேதி பொன்.புதுப்பட்டி இந்தியன் வங்கிக்கு சென்றார்.பின்னர் அங்குள்ள மையத்தில் தனது ஏ.டி.எம். கார்டை செலுத்தி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை. அத–னால் புதுவளவு ரோட்டில் உள்ள மற்றொரு வங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்று எடுக்க தெரியாமல் தவித்தார்.

    அப்போது அருகில் இருந்த அடையாளம் தெரி–யாத நபர் பணம் எடுத்து தருகிறேன் என்று கூறியுள் ளார். அவரை நம்பி ஏ.டி.எம். கார்டை மாணிக்கம் கொடுத்துள்ளார். அந்த நபரும் பணம் வரவில்லை என்று மாணிக்கத்தை ஏமாற்றும் நோக்கில் வேறோரு ஏ.டி.எம். கார்டை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.இதையடுத்து ஒரு மணி நேரத்தில் மாணிக்கத் தின் செல்போன் எண் ணுக்கு அடுத்தடுத்து குறுஞ் செய்திகள் வந்துள்ளது. அதில் புதுக்கோட்டை-மதுரை மெயின்ரோட்டில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.50ஆயிரமும், புதுக்கோட்டையில் உள்ள ஒரு நகைக்கடையில் ரூ.30 ஆயிரமும் எடுத்ததாக வந்துள்ளது. இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் மாணிக்கம் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். கார்டை ஏமாற்றி மாற்றி கொடுத்து ரூ.80 ஆயி–ரம் மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு மர்மஆசாமி ஒருவன் பணம் எடுக்க வந்தவர்களிடம் உதவுவது போல் நடித்து வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்த சம்பவம் அரங்கேறியது.இதுபோன்று தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போன்று ஏமாற்றி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கந்தர்வகோட்டையில் நரிக்குறவர்களுக்கு நலத்திட்ட உதவி வழஙகப்பட்டது
    • மழை காலங்களிலும், ஏரியில் நீர் நிரம்பும் போதும் இவர்கள் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைவார்கள்

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை அருகே நரிக்குறவர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நாவல் ஏரியில் கடந்த 10 ஆண்டுகளாக நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள் போட்டு வசித்து வருகின்றனர். மழை காலங்களிலும், ஏரியில் நீர் நிரம்பும் போதும் இவர்கள் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் தஞ்சம் அடைவார்கள்.

    நிரந்தர குடியிருப்பு பகுதி கேட்டு அரசுக்கு கோரிக்கை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தென்னிந்திய திருச்சபை திருச்சி, தஞ்சாவூர் திருமண்டலம் திருச்சி தூய பவுல் ஆலயத்தின் ஆயர் மணிமாறன் தலைமையில் திருச்சபை மக்கள் குழுவாக வந்து 70 நரிக்குறவர் குடும்பங்களுக்கு ஒரு லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் வழங்கினர். நிகழ்ச்சியில் திருச்சி, தஞ்சாவூர் சேர்ந்த ஆயர்கள் மற்றும் கந்தர்வகோட்டை எட்வின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடியில் பெண் மாயமானார்
    • ஜோதி சற்று மனநலம் பாதிக்கபட்டவர் ஆவார்

    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி கீழப்பட்டியைச் சேர்ந்த பச்சமுத்து என்பவரின் மகள் ஜோதி (வயது 50). சற்று மனநலம் குன்றிய இவர் வீட்டின் அருகில் குளித்துவிட்டு வருவதாக சென்றுள்ளார். ஆனால் அதன் பின் காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர்கிடைக்கவில்லை.

    எனவே இது குறித்து அவரது சகோதரர் கணேசன், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து சற்று மன நிலை பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி வருகிறார்.




    • கடையடைப்பு போஸ்டரால் ஆலங்குடியில் பரபரப்பு ஏற்பட்டது
    • கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று உள்ளது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற வில்லை. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும். பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 24-ம் தேதி கடையடைப்பு நடைபெறுவதாகவும், இதற்கு பிறகும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 26-ம் தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணிக்க உள்ளதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஆலங்குடி கல்லாலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.


    ×