என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெளியே சென்ற பெண் மாயம்
- ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார்
- வெளியே சென்ற பெண் மாயமானார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே கே ராசியமங்கலம் கட்ராம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மகள் பிரதீபா (வயது 21). இவர் டிப்ளமோ நர்சிங் முடித்து புதுக்கோட்டை தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 20-ந் தேதி வெளியே சென்ற பிரதீபா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், வடகாடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடிவருகின்றனர்.
Next Story






