என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயமான பெண் கிணற்றில் பிணமாக மீட்பு
- சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்
- செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலப்பட்டியை சேர்ந்தவர் பச்சைமுத்து மகள் ஜோதி (வயது 50). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிகிறது. வீட்டில் இருந்த இவர் திடீரென காணாவில்லை.உறவினர்கள் மற்றும் நட்பு வட்டாரங்களில் தேடியும் காணாததால், ஜோதியின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.இந்நிலையில் பெருங்கொண்டான் விடுதி கிராமத்தில் தனியார் தோட்டத்தில் ஒரு பெண் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று இறந்தது காணாமல் போன ஜோதி என உறுதிபடுத்திக் கொண்டனர். இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பின்னர் போலீசார் ஜோதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கற்பழித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






