என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்சிகோட்டையை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நகர் மன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தனர்
- தெருவிளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் திலகவதி செந்தில் தலைமையில் நடைப்பெற்றது. துணைத்தலைவர் லியாகத் அலி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஆணையர் நாகராஜன், பொறியாளர் சேகரன், மற்றும் அதிகாரிகள், திமுக, அதிமுக, காங்கிரஸ், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில்தலைவர் திலகவதி செந்தில் பேசும் போது, புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் சரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. தெருவிளக்குகள் முழுமையாக எரிய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. உறுப்பினர்கள் வைக்கும் கோரிக்கைகளைஉடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் நகராட்சி கடந்த 1988 முதல் தேர்வு நிலை நகராட்சியாக உள்ளது. அதனால் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த அதற்கு கட்டமைப்புகள் உள்ள காரணத்தினால் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் தமிழக அரசிற்கு தீர்மானம் இயற்றி அனுப்பி வைக்கப்படுகிறது என்றார். அதன் பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கான தேவைகள் குறித்து பேசினர்.
- குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார்.
- எம்.எம்.அப்துல்லா பார்வையாளர் பகுதியில் அமருவதற்காக வந்தபோது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது.
புதுக்கோட்டை:
இந்திய நாட்டில் 74-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தேசியக்கொடியை ஏற்றுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் விழா நடைபெறும் ஆயுதப்படை மைதானத்தில் பார்வையாளர்கள், அரசு நடைமுறை விதிகளின்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மட்டுமல்லாது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.பி., எம்.எல்.ஏ. உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் இருக்கை ஒதுக்க வேண்டும் என்பது அரசின் விதியாக உள்ளது.
ஆனால் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த அரசு நடைமுறை விதியும் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோருக்கு இருக்கைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.
இந்த நிலையில் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அவர் பார்வையாளர் பகுதியில் அமருவதற்காக வந்தபோது எம்.பி., எம்.எல்.ஏ. ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது.
இதனால் அதிருப்தி அடைந்த மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா குடியரசு தின விழாவை புறக்கணித்து விட்டு உடனடியாக தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் அங்கிருந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது ஒரு புறம் இருக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்ற மாநிலங்களவை உறுப்பினர் தனக்கு இருக்கை ஒதுக்கப்படாமல் இருந்தாலும், குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் விழாவை புறக்கணித்து சென்றது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இந்த நிலையில் இந்த பிரச்சினை எதனால் ஏற்பட்டது, இருக்கை ஒதுக்காமல் இருந்தது யார் தவறு? என்பது தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி எம்.எம்.அப்துல்லா எம்.பி. கூறுகையில், இருக்கை ஒதுக்கப்படவில்லை என்பதற்காக விழாவை புறக்கணித்து செல்லவில்லை, எனக்கு வேறு வேலை இருந்ததால் உடனடியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.
- நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார்.
- தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது, இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் ஆணையம் உள்ளதா என்பதை யாராவது கூற வேண்டும். தி.மு.க.வின் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.
எந்த தேர்தலிலும் நான் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கப் போவது கிடையாது, தனித்து தான் இருப்பேன். அதிகார பலம், பண பலத்தை ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. காட்ட தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது, துணிச்சலான முடிவு வாழ்த்துக்கள்.
தேர்தலில் வெற்றி பெறுவது அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியும், சீமானால் முடியாதா? கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது தனித்து தான் போட்டி என்று கூறினார். தற்போது அவர் காங்கிரஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது. அதுபோன்று வரும் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
பணத்தை பாதுகாப்பதற்கு அ.தி.மு.க.விற்கு பாரதிய ஜனதா தேவைப்படுகிறது. ஆனால் தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பா.ஜ.க.வை கழட்டி விட அ.தி.மு.க. நிற்கிறது
ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. எத்தனை பேர் களமிறங்கினாலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி. நான் தனித்து போட்டியிடுவேன் என்று ஒவ்வொரு தேர்தலிலும் கூறி தனித்து போட்டிட்டு வருகிறேன். இது போன்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று கூற முடியுமா?
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார். தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியமாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பேச்சுக்காக மட்டுமே தொடர் அமைக்க அது செயல்படுத்த முடியாது.
தி.மு.க. ஒரு நாடக கூட்டம். மத்திய அரசை, ஆளுநரை எதிர்ப்பது போல் எதிர்க்கும். ஆனால் தனியாக சென்று அவர்கள் காலில் விழும். அவரோடு சேர்ந்து உணவும் அருந்துவார்கள்.
குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் குறித்து எழுதிய கடிதத்தில் கூட அவரை மாற்ற வேண்டும் என்று கூறாமல், மாநில அரசின் நலன் கருதி எங்களோடு ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லுங்கள் என்று தான் முதல்வர் கடிதம் எழுதினார்.
2024 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆட்டத்தை பாருங்கள். தற்போது தமிழகத்தில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இவர்கள் யாரும் தே.மு.தி.க. பக்கம் செல்லப்போவது கிடையாது. மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என்று நான் நம்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 29ம்தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் (15 வயது முதல் 35 வயது வரை) உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடத்தப்படும்.
பள்ளி (12 வயது முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு (17 வயது முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து, கிரிக்கெட் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.
புதுக்கோட்டை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளின் பதிவுகளை அதிகரிக்கும் பொருட்டு, விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற் கான கால அவகாசம் வரும் 29-ந் தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
- சுருக்குமடி வலைக்கு அனுமதி அளித்ததால் அறந்தாங்கி நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
- வாரத்திற்கு 2 முறை மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் முத்துக்குடா வரை சுமார் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட கடல் பரப்பில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், பகுதிகளில் சுமார் 600 விசை படகுகளும், மற்ற பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளும் மீன் பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனத்தை பெருக்கவும் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாரத்திற்கு 2 முறை மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து நாட்டுப்படகு சங்கத் தலைவர் முருகானந்தம் உள்ளிட்ட மீனவர்கள் கூறுகையில், சுருக்குமடி, இரட்டைமடி, ஒற்றைமடி, அறிவலைகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் கடல் வளம் முற்றிலும் அழிக்கப்படுகிறது.
பாசிகள், பவளப்பாறைகள் போன்றவைதான் மீன்களின் ஆகாரமாக உள்ளது. ஆனால் இது போன்ற சுருக்குமடி வலைகள் பயன்படுத்துவதால் மீன் உணவுகள் அழிக்கப்பட்டு மீனினத்தின் பெருக்கம் கேள்விக்குறியாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் மீன்கள் இனமே அழிந்து போகும். அதோடு மட்டுமல்லாது கடல் தொழிலை நம்பி மட்டுமே வாழும் இத்தனை ஆயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம்கேள்விக் குறியாகி விடும்என்று வேதனையுடன் தெரிவித்தனர். எனவே சுருக்குமடி உள்ளிட்ட அறிவலைகள் பயன்படுத்த மத்திய மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
- புதுக்கோட்டையில் அரசின் சாதனைகள்-திட்டங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி நடந்தது
- அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை, புதுக்கோட்டை பள்ளி மாணவி்கள் நேரில் பார்வையிட்டனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர் ரகுபதி, கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டங்களான மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப் பெண் திட்டம், மகளிருக்கு இலவச நகரப் பேருந்து பயண திட்டம், நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிர்சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள், பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சிகள், உள்ளிட்டவைகளை தொகுத்து புகைப்படங்களாக நேர்த்தியுடன் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களின் விற்பனை கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுப் பொருட்கள் அடங்கிய கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படங்களை, புதுக்கோட்டை இராணியார்அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் நேரில் பார்வையிட்டு, அறிந்து கொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல்லுக்குப் பின் பயறு சாகுபடி செய்ய வேண்டுகோள் விடுக்கபட்டுள்ளது
- ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள், 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் பெரியசாமி ெவளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 2022-23 ஆம் வருட நெல்லுக்குப் பின் பயறு சாகுபடித் திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில், 9000 ஏக்கரில் நெல் அறுவடை வயல்களில், உளுந்து பயிர் சாகுபடி செய்திட, திட்டமிடப்பட்டு, அதற்கான விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகள், 50 சதவீத மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நெல் சாகுபடிக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதால், குறுகிய காலத்தில் அதாவது 65 நாளில், பயிர் அறுவடைக்கு வந்து, மகசூலை தந்து, விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதால், ஆகாயத்திலுள்ள தழைச்சத்து, பயிரின் வேர் முடிச்சுகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் பயிரும் நன்கு வளரும், சாகுபடி நிலமும் வளமடைகிறது.
இதனால் அடுத்து சாகுபடி செய்யும் பயிருக்கான உரச்செலவு குறைகிறது. நெல் அறுவடையான பின்பு, பயறு சாகுபடி செய்யப்படுவதால், நிலம் தரிசாக இல்லாமல், நிலப்பயன்பாடாகிறது. நெல்லுக்குப் பின், பயறு சாகுபடி செய்வதால், கிடைக்கும் சாதகங்கள், விவசாயிகளுக்கு விளக்கிக்கூற, மாவட்ட அளவிலும், வட்டார, குறு வட்டார மற்றும் கிராம அளவில், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
- குடியரசு தின விழா அன்று கல்லாலங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்யபட்டுள்ளது
- சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட 7 குக்கிராமங்களில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கல்லாலங்குடியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி வணிகர்களும் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனை அறிந்து விரைந்துவந்த ஆலங்குடி காவல்துணை கண்காணிப்பாளர் தீபக்ரஜினி, காவல் ஆய்வாளர் அழகம்மை, திருவரங்குளம் ஒன்றிய ஆணையர்கள் ஆயிஷா, ராணி கோகுலாகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் பழனியப்பன், வருவாய்த்துறை அதிகாரி துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால், ஊராட்சியில் நடைபெற உள்ள குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
- சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
- இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலைகள் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவதாக அப்பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
- சாலை சீரமைப்பு பணியில் தொய்வு கண்டித்து
- பொதுமக்கள் உண்ணாவிரதம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி தாலுகா திரு–வரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலை–கள் சீரமைப்பு பணி நடை–பெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற–வில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின் றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவ–தாக அப்பகுதியில் போஸ் டர் ஒட்டப்பட்டது. அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். நூற் றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத் தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறை–வேறும் வரை உண்ணா–விரத பந்தலை விட்டு வெளியே செல்ல–மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது–மக்க–ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–பட்டுள்ளனர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத் தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
- ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.
- மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மாணவிகளுக்கு பாராட்டு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் (தனியார்பள்ளிகள்) அந்தோணி அறிவிப்பின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார்பள்ளிகளுக்கு இடையேயான ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த தேர்வில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவி கே. ராகவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற பள்ளி மாணவி கே. ராகவியை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்அந்தோணி பாராட்டி சான்றிதழும் சுழற்கோப்பையும் வழங்கி வாழ்த்தினர்.திறனறி தேர்வில் முதலிடம் பெற்று பள்ளி வந்த மாணவியை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, பள்ளி ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி, துணை முதல்வர்குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் சித்திரை செல்வி, ரவிக்குமார் உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
- துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி
- உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு
கந்தர்வகோட்டை,
ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாளை, சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி, கல்லாக்கோட்டை, சங்கம் விடுதி, பகட்டுவான் பட்டி, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடி பட்டி, அக்கச்சிப்பட்டி, வளவம் பட்டி, வெள்ளாள விடுதி சுந்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






